Aradhana of Jagadguru Shankaracharya Shri Chandrashekharendra Sarasvati, the 66th Peetadhipati of the Shri Kanchi Kamakoti Mulamnaya Sarvajna Peetam
- Thanjavur Paramapara
- 1 day ago
- 1 min read

இன்று மூலாம்னாய சர்வக்ஞ ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 66ஆவது ஆச்சார்யர்களான பூஜ்யஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஆராதனை.
இவர் பிறந்த இடம் : உதயம்பாக்கம். செங்கல்பட்டு சீமை. இந்தக் கிராமம் விஜயநகரப் பேரரசர் ஶ்ரீ கிருஷ்ண தேவராயர் ஶ்ரீ காஞ்சி காமகோடி
ஶ்ரீ மடத்திற்குப் பொது யுகம் 1528ல் சமர்ப்பித்த கிராமம்.
இவரது பூர்வாஶ்ரம பெயர்:
ஶ்ரீ ஸ்வாமிநாதர்.
பூர்வாஶ்ரம தந்தையார் பெயர் : ஶ்ரீ ஸீதாராம பண்டிதர்.
பூர்வாஶ்ரம தாயார் பெயர்:
ஶ்ரீமதி மங்களாம்பிகா.
இளையாத்தங்குடியில் நீண்ட காலம் தங்கியிருந்த பூஜ்யஶ்ரீ 65ஆவது ஆச்சார்யர்கள் இளையாத்தங்குடியில் இவருக்கு ஆஸ்ரமம் தந்தார்.
இவர் வாக்சித்தி பெற்ற மகான். அத்வைத வேதாந்த படிப்பை உத்ஸாஹப் படுத்தவும், அந்த ஶாஸ்த்ரத்தை பாதுகாக்கவும் அத்வைத ஸபையை நிறுவினார். மன்னார்குடி ராஜூ சாஸ்திரிகள் போன்ற வித்வான்களை ஆதரித்தருளியவர்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஆயிரம் கிராமங்களுக்கு யானை மீதமர்ந்து திக்விஜயம் செய்து வேதநெறி தழைக்கவும், ஶ்ரீ மடத்தின் சொத்துக்களைப் பாதுகாத்து நிர்வாக ஒழுங்குகள் செய்து ஶ்ரீ மடத்தின் அறப்பணிகள் தடையறாது நடக்க நிலையான வருமானம் வருமாறும் நெறிப்படுத்தியவர். ஆயிரம் கிராம ஸ்வாமி என்று போற்றப்பட்டவர்.
அதேபோல நடு நாடு மற்றும் தொண்டை மண்டல கிராமங்களுக்கும் விஜயம் செய்து. வேத நெறி தழைக்கவும், ஶ்ரீ மடத்தின் சொத்துக்களின் நிர்வாகத்தையும் முறைப்படுத்தியவர்.
நாடெங்கும் இருந்த பல்வேறு சமஸ்தானங்களின் அரசர்கள் இவரைப் பணிந்து எழுதியப் பல்வேறு கடிதங்கள் பொதுவெளியில் காணக் கிடைக்கின்றன.
திண்டிவனம் அருகே பெருமுக்கல் என்னும் கிராமத்தில் இருக்கையில், சிறுவராய் இருந்த பூஜ்யஶ்ரீ மகாபெரியவாளைக் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யராக எழுந்தருளத் தக்கவர் என்று உணர்த்தியவர்.
இவர் பீடாதிபதிகளாக எழுந்தருளி இருந்த வருஷங்கள் : 17
சித்தியான இடம் வேலூர் அருகே உள்ள கலவை கிராமம்.

