Aradhana of Sri Sri Sri Bodhendra Saraswathi- the 59th Shankarāchāryā of our great Sri Kanchi Kamakoti Moolāmnāya Sarvagyapeetā.
பாத்ரபத பௌர்ணமீ திதி. ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஆதிஶங்கர பகவத்பாத ப்ரதிஷ்டித மூலாம்னாய ஸர்வஜ்ஞபீடமான நமது ஶ்ரீ காஞ்சீ காமகோடி ஶ்ரீ மடத்தின் 59வது பீடாதிபதிகளான ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ போதேந்த்ர ஸரஸ்வதீ (03) ஶ்ரீ சரணர்களின் ஆராதனை.
பிற தகவல்கள் :
விஶேஷமான பெயர் :ஶ்ரீ பகவந்நாம போதேந்த்ராள்
பிறந்த இடம் : காஞ்சீபுரம்
பூர்வாஶ்ரம பெயர் : ஶ்ரீ புருஷோத்தமன்
பூர்வாஶ்ரம தந்தையார் பெயர் : ஶ்ரீ கேஶவ பாண்டுரங்க யோகீ
பூர்வாஶ்ரம தாயார் பெயர் : ஶ்ரீமதி ஸுகுணா
பீடாதிபதிகளாக எழுந்தருளி இருந்த வருஷங்கள் : 54
ஸித்தியான இடம் : கோவிந்தபுரம் (திருவிடைமருதூர் அருகில்)
ஸித்தியான வருடம் : 4792 ப்ரஜோத்பத்தி
ஆங்கிலம் :07.09.1691

இவர் இவருடைய குருவின் ஆணைப்படி, கோரமான இக்கலியில் ஸகல தர்மங்களையும் கர்மானுஷ்டானங்களையும் ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி செய்யாமல் விட்டு விட்டு, கல்மஷ சித்தத்துடன், பாவம் செய்தே ஸம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு, கஷ்டப்படும் பாமர மக்களும் கடைத்தேற, ஶ்ரீ பகவந்நாம ஜபம் மற்றும் ஸங்கீர்த்தனத்தின் முக்யத்வத்தை விஶேஷமாக பரப்பினார். பூரி ஜகந்நாதம் ஶ்ரீ லக்ஷ்மீதரகவி என்ற மஹான் எழுதிய "நாம கௌமுதீ" என்ற க்ரந்தத்தை ஆதாரமாகக் கொண்டு, வேதங்கள், ஸ்ம்ருதிகள், இதிஹாஸ, புராணங்கள் முதலிய நமது ஶாஸ்த்ரங்களை அடிப்படையாகக் கொண்டு, ஶ்ரீ பகவந்நாம ஸித்தாந்தம் செய்வதற்காக, நாமாம்ருத ரஸோதயம், நாமாம்ருத ரஸாயனம், நாமாம்ருத ரஸார்ணவம், நாமாம்ருத ஸூர்யோதயம், நாமாம்ருத தரங்கம், ஹரிஹரபேத திக்காரம், ஹரிஹராத்வைத பூஷணம், மூர்த்த ப்ரஹ்ம விவேகம் என்னும் எட்டு நாம ஸித்தாந்த க்ரந்தங்களை அருளினார். திருவிசநல்லூர் ஶ்ரீ அய்யாவாள் என்கிற ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீதர வேங்கடேஶார்யர் என்ற உத்தம பக்த ஶிரோமணியுடன் நாம மஹிமை, நாம வைபவம், நாம ஶ்ரேஷ்டத்வம் பற்றி, பல நாட்கள் இரவு, பகல் பாராது, அளவளாவி, மெய் மறந்து, மெய் சிலிர்த்து, ஶ்ரீ பகவந்நாமத்தில் இருந்த அவருடைய விஶ்வாஸத்தையும், பக்தியையும் மெச்சியவர். மருதாநல்லூர் ஶ்ரீ ஸத்குரு ஸ்வாமிகள் கனவில் தோன்றி, வீரசோழன் ஆற்றில் ஜீவ ஸமாதியாக இருப்பதை உணர்த்தினார். பின்னர் ஶ்ரீ ஸத்குரு ஸ்வாமிகள் ஶ்ரீ போதேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் ஶரீரத்தில் தமது கால்பட்டு, அபசாரம் ஆகிவிடக் கூடாது என்று இரண்டு கால்களிலும் கயிற்றைக் கட்டிக் கொண்டு, வீரசோழன் ஆற்றில் உருண்டு, பிரண்டு "ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம" என்ற நாமோச்சாரணத்தை ஶ்ரவணம் செய்து, அங்கு வீற்றிருக்கும் ஶ்ரீ போதேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகளைக் கண்ணுற்று, அவர் ஆஜ்ஞைப்படியே, தற்பொழுது உள்ள இடத்தில் ஸமாதி நிர்மாணம் செய்தார். இன்றும், உண்மையான பக்தர்களுக்கு அவர் ராம ராம ராம ராம ராம ராம ராம என்று ஜபம் செய்வது ஶ்ரவண ஸுலபமாக இருக்கிறது. தென்னிந்திய ப்ராசீன பஜனை ஸம்ப்ரதாயத்தில் இவருக்கே முதலிடம். தன்னுடைய உச்சிஷ்ட அன்னத்தை ஸாப்பிட வைத்து, ஊமையைப் பேச வைத்தார். அனைவரும் மிகவும் பக்தியுடன் ஶ்ரீ பகவந்நாமாக்களைச் சொல்லி, அதனால், கர்மானுஷ்டானங்களையும் ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளபடி அனுஷ்டிக்க ஶ்ரத்தை ஏற்பட்டு, அதனால், சித்த ஶுத்தி ஏற்பட்டு, அதனால், ஜ்ஞானமும், அதனால், மோக்ஷமும் கிடைக்க வேண்டும் என்று, மிகவும் கருணையோடு, ஜீவஸமாதியில் இருந்து கொண்டே, அனுக்ரஹம் செய்து கொண்டு இருப்பவர்.

॥पुण्यश्लोकमञ्जरी - परिशिष्टम् - श्रीमदात्मबोधेन्द्रसरस्वतीविरचितः॥
श्रीविश्वाधिकदेशिकेन्द्रवचसा प्राप्तो दिशं दक्षिणां
प्राचीनाम्बुधिरोधसि प्रतिजगन्नाथं प्रपन्नो गृहान्।
श्रीलक्ष्मीधरशर्मणोऽस्य तनुजान्म्लेच्छीकृतां योषितं
कुर्वाणाद्द्विजसङ्गतां स नियमादध्यैष्ट भक्तेः क्रमान्॥९॥
श्रीकाञ्चीमनुविश्य देशिकपदं सम्मण्ड्य
तत्त्वोज्ज्वलैर्ग्रन्थैर्भक्तिपथं विधाय विशदं विश्वस्य मुक्त्यै कलौ।
मूकस्यापि शिशोर्महाप्रवचनप्रावीण्यदायी
मुनिर्बोधेन्द्रो जयतात् स भक्तजनताकल्लोलिनीनीरधिः॥१०॥
श्रीमन्मण्डननाम्नि काञ्चिनगरीखेटे कृतावासतः
काण्वात् केशवपाण्डुरङ्गविबुधाज्जातोऽभिजाताकृतिः।
भक्तः श्रीपुरुषोत्तमे श्रितवतां भक्त्यध्वदर्शी
महान् अध्यास्तासनम् आदिशङ्करगुरोरार्यात्मबोधाज्ञया॥११॥
आचार्यत्वम् उदूह्य साधु स चतुष्पञ्चाशदब्दं मठे
पीठे कामदृशः स्थितः प्रवचनैरद्वैतमुद्द्योतयन्।
अब्धि-ग्लौ-रस-चन्द्र-सम्मितशके (१६१४) श्रीशालिवाहाह्वये
सिद्धिं प्रापदपारधैर्यजलधिः स्वस्यैव धाम्न्यद्वये॥१२॥
प्रजोत्पत्तिप्रौष्ठपदपूर्णिमायाम् उपार्जुनम्।
भगवन्नामबोधेन्द्रो बोधसाम्राज्यम् ईयिवान्॥१३॥
॥ पञ्चषष्टितमैः पीठाधिपतिभिः श्रीमत्सुदर्शनमहादेवेन्द्रसरस्वतीश्रीचरणैः प्रणीतः श्री-काञ्ची-कामकोटि-पीठ-जगद्-गुरु-परम्परा-स्तवः ॥
(५९) भगवन्नाम-साम्राज्य-लक्ष्मी-सर्वस्व-विग्रहान् ।
श्रीमद्-बोधेन्द्र-योगीन्द्र-देशिकेन्द्रान् उपास्महे ॥ ६० ॥
Comments