top of page

The Sacred Bond: Sri Vaishnava Scholars and Their Devotion to Kanchi Mutt

9 minutes ago
1 min read

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ஆச்சாரியர்களிடம் பக்தி கொண்ட ஸ்ரீவைஷ்ணவ வித்வான்களில் ஒரு சிலர்:

1. இசை: அரியக்குடி ஸ்ரீராமானுஜ ஐயங்கார் – 1961 ஜூன் தேவகோட்டை, பிரசித்தி பெற்ற "ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே" (கீர்த்தனை). Ref: தெய்வத்தின் குரல் (பாகம்-7).

2. V.R.N.T. ஸ்ரீ அண்ணாதுரை அய்யங்கார்.

3. காஞ்சி பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ அண்ணங்கராச்சாரியார்.

4. முக்கூர் ஸ்ரீநிவாச வரதாச்சாரியார் (அஷ்டலட்சுமி கோவில், திருவான்மியூர்).

5. ஸ்ரீ ராஜகோபாலன் – ஆஸ்தான வித்வான் (ஜோதிடம் – குமுதம்).

6. அகோபில மடம் பிரகிருதம் தற்போதைய ஜீயர். (குறிப்பு: தற்போது உள்ளவர் 46-ஆம் பட்டம்).

7. அகோபில மடம் 44-ஆம் பட்டம் ஜீயர் (ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் கட்டியவர் – அழகியசிங்கர்).

8. ஆண்டவன் ஆசிரமம்: திருக்குடந்தை ஆண்டவன் அவர்கள் – மகா பெரியவரைக் கண்டு பாரத தேசம் முழுவதும் பாதயாத்திரை சென்ற மகான்.

9. ஹரிகதை: கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார்.

10. கும்பகோணம் அக்னிஹோத்ரி ஸ்ரீ ராமானுஜ தாத்தாச்சாரியார்.

காஞ்சி காமகோடி பீடம் நடத்தும் வேத பாடசாலைகளில் ஆயிரக்கணக்கான ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய வேத வித்யார்த்திகள் இன்றும் பயின்று வருகிறார்கள்; ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய வித்வான்கள் பலரும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் நடத்தும் பாடசாலையில் பயின்று, இன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றார்கள்.

மேலும் பல ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் நடத்தும் பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

1960களில் காஞ்சி பெரியவர்கள் "ராம நாமம்" எழுத ஊக்குவித்தார்கள், ராம நாமம் எழுதுவோருக்கு வெள்ளி காசுகள் பரிசாகத் தந்தார்கள். மார்கழி மாதத்தில் சிறுவர்களுக்கு திருப்பாவை திருவெம்பாவை பாட ஊக்குவித்து அதற்கு வெள்ளிக் காசுகள் பரிசாக தந்தார்கள்.


திருப்பதி பெருமாளிடம் நமது காஞ்சி காமகோடி பீட பீடாதிபதிகளுக்கு மங்களாசாசன மரியாதை உண்டு; மேலும், காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் எப்பொழுதெல்லாம் தரிசிக்க வேண்டும் என நினைக்கிறார்களோ, அப்பொழுதெல்லாம் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் காஞ்சி காமகோடி பீடாதிபதிகளை மரியாதையுடன் அழைத்துச் சென்று பெருமாளைத் தரிசனம் செய்விப்பது மரபு.


காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என பல்வேறு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயக் கோவில்களில் மங்களாசாசனம் பெறும் உரிமை உள்ள ஸ்மார்த்த மடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்.

Recent Posts

See All
The Divine Intervention: How Goddess Akhilandeshwari Saved Kanchi Mutt’s Honor

"உங்கள் சரபோஜி, எதற்காக எங்களை இப்படி சுற்றி வளைத்து பிடிக்கிறார்?"- பெரியவா 🅚🅝 வம்பு வழக்கினையும், போலீஸ் கைதையும், அந்த நாளில் அதாவது நூற்று எண்பது வருடங்களுக்கு முன்பே காஞ்சிமடமும் சந்தித்துள

 
 
 

Comments


bottom of page