top of page

அர்ப்பணிப்பு உணர்வுடன் ஶ்ரீ மடத்திற்கு சேவை செய்திட விரும்புவோர் கனிவான கவனத்திற்கு

A copy of my circular message posted in the Sri Periyava Kainkarya Sabha, Nanganallur, which is self explanatory, is posted here for reference. It is further requested to forward all such applications to me, as and when they are recd for action at my end. Now the copy of the above said circular message posted in the SPKS:

பாகவத கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் ஒன்றேதான் என்பார்கள். அது போல ஆச்சார்யாள் சேவை என்பது, ஆண்டவர்க்கு அர்ப்பணிக்கும் சேவையாகும். இப்பேறு, எல்லோருக்கும் கிடைத்துவிடாது. இந்த பாக்கியம, ஒருசில பக்தர்களுக்கு பாக்கிய வசத்தால் சித்திப்பது. அதிலும் ஆச்சாரயாள் திரு உள்ளத்தை நன்கு புரிந்து கொண்டு, அவரது குறிப்பறிந்து, குருவரரின் அவ்வப்போதைய தேவைகளை அறிந்தும் முழுமையாகவும் காலத்தேயும் சேவைகளை செய்வதிட்டால், குருவின் உள்ளம் மகிழும் என்பதையும் அதுவே கைங்கர்யம் செய்திட்ட நபருக்கு ஆச்சார்யாளின் மிகப் பெரிய அனுக்ரஹமாகும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நீண்ட காலமாகவே, மூலாம்நாய ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சம்ஸ்தானம் வேத, வித்யா, வைத்தியா எனும் மூன்று பெரும் பிரிவுகளில் ஶ்ரீ மடம் ஆதரவுடன் தேசத்தின் பல பகுதிகளிலும் வேத பாடசாலைகள் மூலம் வேத வைதீகப் பணிகளையும், ஆரம்ப உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் கல்லூரிகள், பல்கலை கழகம் மூலம் கல்விப் பணிகளையும், ஶ்ரீ மடம் ஆதரவு பெற்ற பல்வேறு மருத்துவ சாலைகள் வழி மக்கள் அனைவருக்குமான மருத்துவப் பணிகளையும் அனைத்து மக்களின் நன்மைக்காக தொடர்நது பெரிய அளவில் அமைப்புகள் / அறக் கட்டளைகள் மூலமாக நடத்தி வருகின்றது. இச் சமூகப் பணிகள் யாவும் நாளும் வளர்ந்து வருகின்றன. இந்நிலையில் பிராமண சமூகத்திற்கும் ஶ்ரீ மடத்திற்கும் ஆர்வத்துடன் சேவை செய்திட வேத வைதீக மார்கங்களில் உறுதியான நம்பிக்கையுடைய, அர்ப்பணிப்பு உள்ளமும் சேவை செய்யும் எண்ணமும் கொண்ட முழு நேர/ பகுதி நேர, 45 லிருந்து 60 வரை வயதுடைய ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் கொண்ட, VRS பெற்ற நடுத்தர வயதினர் உட்பட பிராமண Volunteers ஶ்ரீ மடத்திற்கு தேவைப் படுகிறார்கள். அவரவர்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளுக்கு ஏற்றவாறு குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது தங்கும் வசதி உணவு முதலியன அளிக்கப்படும். மேற் சொன்ன தகுதி உடையவர்கள். தமது, பெயர், கல்வித் தகுதி, தெரிந்த மொழிகள், எழுத, பேசக் தெரிந்த மொழிகள், பார்த்த அல்லது பார்க்கும் உத்தியோகம், மனைவி பெயர், அவரது உத்தியோகம் மற்றும் குடும்ப விவரங்கள், தாய் தந்தையர் பெயர், கோத்ரம், சூத்ரம், முழுவிலாசம், அலைபேசி எண் முதலியவற்றுடன் ஶ்ரீமடம் ஶ்ரீகார்யம் @ .+91 98407 20182 என்ற எண்ணுக்கு, ‘WhattsApp’ ல்

15-7-2024க்குள் விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.

66 views0 comments

Comments


bottom of page