KULA DEIVANGAL" Bagampiriyal Amb al Sametha Sri. Vanmeekanatha Swami, Thiruvotriyur, Ramnad Dist is our KULADEIVAM
பாகம்ப்ரியாள் அன்னை பரிவுடன் எனைப்பார்க்க
பாவங்கள் பறந்தோடுதே
அகிலாண்டநாயகி அவள் பாதம் தொழ
ஐஸ்வர்யம் மிகவாகுதே
தீராத நோய்கள் எல்லாம் குணமாகும்
அவள் திருக்குளம் நீராடவே
வாராது தீமைகள் என்றென்றுமே
வணங்கிய பேர்களுக்கே
சேராது கருமவினைகள்
எதுவும்
சேர்ந்திட்ட பேர்களுக்கே
வறுமையும் வாட்டமும் சேராது என்றும்
அவள் வாசல் சென்றோர்க்கே
சாயுஷ்ய பதவியும் சந்ததியும் பெருகும்
சன்னிதி போய் பாருங்கள்
சந்தேகம் வேண்டாம் அவளருளால் எதையும்
சாதிக்கலாம் வாரீர்
The lyrics and the song is by Sri. K. Sridaran Baghawathar, Chennai
பாகம்பிரியாள் அருட் பார்வை
பாகவதர் ஸ்ரீதருக்கு பாங்காய் கிடைக்கவே, பாட்டும் பிறந்ததே, பண்ணோடு பொருள் பொதிந்த பாட்டும்
பிறந்ததே. இதை நான் பாடிப் பாடி பயன் பெறவே, பிறவிப் பயன் பெறவே, பாகம்பிரியாள் அருளை வேண்டி நிற்பேனே நாளும் பொழுதும் அவள் அருள் வேண்டி நிற்பேனே.
Opmerkingen