ஸ்ரீ ராமஜயம்
நம் நாட்டில் பல்லாயிரம் பேர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களில் பல ஜாதி பேர்கள் இருக்கிறார்கள் . சுமார் 2% பிராமணர்களும் உண்டு . இந்தக்கட்டுரையில் பிராமண ஜாதியினரின் இயல்பை சற்று சிந்திப்போம் . இயல்பு என்பது பிறவி குணம். அது தானாக ஏற்பட்டது , மாற்ற முடியாதது . இந்த பிராமண பிறவி குணத்தில் சில தனிப்பட்ட , பொதுவான இயல்புகளையும் முற்றிலுமாக ஒழிக்க முடியாது .
1. பிராமணன் இயற்கையில் சாதுவானவன் . பிராமண ரவுடிகளை சாதாரணமாக பார்க்க முடியாது . அதே மாதிரி பெரிய அளவில் ஊழல் செய்பவர்களையும் பொதுப்பணத்தை கொள்ளையடிப்பவர்களையும் , அடாவடித்தனமாக இருப்பவர்களையும் காண முடியாது .
2 . அவன் வறியனாக இருந்தாலும் அவனுக்கு பேராசை இருக்காது .
3. சாதாரணமாக ஒரு பிராமணன் தான் உண்டு தன் வேலை, மற்றும் தன் குடும்பம் உண்டு என்றுதான் அவன் இருப்பான் . வேண்டாத வம்பு தும்புக்கு போக மாட்டான் .
4 . ஒருகாலத்தில் அக்ரஹாரங்களாக கூட்டுக்குடும்பங்களாக பல தலைமுறைகள் வாழ்ந்த பிறகு , இன்று காலத்தால் தனித்தனி குடும்பங்களாக பற்பல நகரங்களிலும் , தூர தேசங்களிலும் வாழும்படி நிர்பந்திக்கப்பட்டு ,சிதிலமாக்கப்பட்டு விட்டான் . இன்று நாம் செய்ய வேண்டிய முயற்சிகளெல்லாம் அதை சரி செய்வதற்கே . இப்பொழுது பிராமணர்கள் வாழ்ந்துவரும் இடங்கள் அக்ரஹாரங்களாக மாற்றப்பட வேண்டும் .
இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றைமட்டும் முக்கியமாக கூறவேண்டியுள்ளது .இனி பழையகாலத்துப்பழக்க வழக்கங்கள் திரும்பி வர முடியாது அவையெல்லாம் அப்படியே தான் இருக்கும் . கிராப் தலை , சல்வார் கமீஸ் இவைகளையெல்லாம் முற்றிலுமாக ஒழிக்க முடியாது அவையெல்லாம் அப்படியே தான் இருக்கும் . வகிடில்லாத தலை ,பாழும் நெற்றி இவைகள் உடனே மாற்றப்பட வேண்டும் . அவற்றையெல்லாம் விட்டு விட்டு , பிராமணனுடைய இயல்பான குணங்களுக்கு பிராமணர்களை மாற்ற முயற்சிக்க வேண்டும் .
ச . சிதம்பரேச ஐயர்
20. ஏப்ரல் 2022
Comments