top of page

பிராமண மேன்மை

2

ஸ்ரீ ராமஜயம்

பிராமண மேன்மை என்னும் பதம் குறிப்பிட்ட சிலருக்கு வேப்பங்காயாய் கசக்கலாம் . ஆனாலும் அது பிரத்யக்ஷ உண்மையாய் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதே . காரணம் அப்பதம் நம்மிடையே காலங்காலமாக இருந்து வந்திருக்கிறது .

மறைந்த நமது 'பிராமின் டு டே ' ஆசிரியர் டாக்டர் வாசன் அவர்கள் பிராமண மேன்மையே , பிராமணர்களாகிய நாம் அனைவருக்கும் இன்று முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்; அதற்காக நாம் அனைவரும் அயராது பாடுபட தொடங்க வேண்டும் , என்றும் கருதினார்கள் . இன்று ஒரு தனிப்பட்ட பிராமணனின் நிலை எவ்வளவு கீழ்த்தரத்தில் இருக்கிறது நாம் சொல்ல வேண்டியதில்லை .

அந்த நிலையை ஒரு மரியாதைக்குரிய ஸ்தானத்தில் கொண்டு வர வேண்டுமானால் , முதலில் அவர்கள் தாம் எவ்வளவு கீழ்த்தரத்தில் இருக்கிறோம் , நாமும் மற்றவர்கள் மாதிரி மேன்மையுறவேண்டும் என்று விரும்ப வேண்டும் . மேலும் மூன்று காரியங்களில் தாம் பிரவேசித்து தன்னைத்தானே உயர்த்திக்கொள்ள முயல வேண்டும்

1 . எல்லாப் பிராம்மண மக்களும் இந்த விஷயத்தில் உண்மையான, முழுமையான ஆர்வம் காட்ட வேண்டும் . 2 . அதற்காக அயராது உழைக்க வேண்டும் . 3 . பிராமண ஆர்வலர்கள் எல்லோரும் தானாகவே இந்த ப்ராஜெக்டில் சேர்ந்து பிராமண மேன்மைக்காக எல்லோருக்கும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் .

பிராமணர்களாகிய நம்மிடம் நம்முடைய முன்னேற்றத்திற்காக நிறைய ஆர்வம் உள்ளது அறிவும் இருக்கிறது . ஆனால் போதிய பண பலமும் போதிய உத்யோகஸ்த மற்றும் அரசு ஆதரவும் இல்லை . இந்நிலையில் வெறும் கையால் ஒருபோதும் முழம் போட முடியாது . உத்யோகத்திற்கு போகும் நாட்களில் நமது வேலையே பிரதானமாக இருப்பதால் , அப்பொழுது பிராமண முன்னேற்றத்திற்கு நமது நேரத்தை செலவிடமுடியாது .ஆகையால் , தமது ரிடையர் வாழ்க்கையில் தான் வெறும் சிலேட்டை வைத்துக்கொண்டு நாம் இந்த மகத்தான செயல் புரிய வேண்டும் . முடியுமா ?

முடிய வேண்டும் . காரணம் பிராமண மேன்மையை திரும்ப நடைமுறைக்கு கொண்டு வருவது நம் சமுதாயத்திற்கு அவ்வளவு முக்கியம்.

முதலில் இந்தக்காரியத்திற்கான தடைகள் எவை ,அவை எங்கிருந்து வருகின்றன என்று பார்ப்போம் . முதல் தடை நமக்கு நம்மில் பெரிய உத்தியோகம் வகித்து , பொருளாதாரத்தில் உயர்ந்த பலர் ,தாம் ரிடையர் ஆன பிறகு , அது தனது தாய் மண்ணாக இல்லாதபோதிலும் , பெரும்பாலும் குடும்பத்துடன் தான் இதுவரை வேலைபார்த்த இடங்களிலேயே தங்கி விடுகிறார்கள் . அந்த இடங்களிலெல்லாம் , நமது ப்ராசீன சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாத நிலையில் நமது பண்டைய பழக்க வழக்கங்களை எல்லாம் விட்டு விட்டு , அங்கு நிலவும் பழக்க வழக்கங்களையே மேற்கொண்டு நமது ஒட்டு மொத்த ஸம்ப்ரதாயங்களையெல்லாம் ஒரேயடியாய் விட்டு விடுகின்றனர் . மேலும் , நமக்கு பழக்கமில்லாத மேற்கத்திய ஸம்ப்ரதாயங்களை மேற்கொண்டு நம்மிலிருந்து அந்நியர்களாய் வாழத்தொடங்குகின்றனர் . இவ்விதம் பொருளாதாரத்தில் உயர் மட்டத்திலிருந்த நம் சமூகத்தின் கணிசமான பாகம் நம்மை ( நம் தாய் நாடான தமிழ் நாட்டை ) விட்டுப்போய் விடுகிறது . இவர்களுடைய முன்னோர்களெல்லாம் ஒரு காலத்தில் நம்முடன் நமது அக்ரஹாரங்களில் வாழ்ந்தவர்களே. மீதியுள்ள நடுத்தர வர்க்க , மற்றும் ஏழை பிராமணர்கள் இன்று நகரங்களிலும் ,கிராமங்களிலும் , குடும்பங்களாக இருந்து வருகிறார்கள் . சமீப காலம் வரையில் , இப்பிராமண குடும்பங்களிடையே ஒற்றுமை (ஒற்றுமை என்று ஏன் சொல்கிறேன் என்றால் கூட்டாக இருக்கும்பொழுது தான் நமக்கு பலம் அதிகம் .) , நிலவி வந்தது . சுமார் மூன்று தலைமுறைகளாக இவர்களுடைய ஒற்றுமையில் தொய்வு காண ஆரம்பித்து , இவர்களுடைய குடும்பங்களின் வளர்ச்சியும் குன்ற ஆரம்பித்தது .அத்துடன் அவர்களது வாழ்வு முறையில் கணிசமான மாற்றங்கள் ,மேற்கத்திய மரபின் தாக்கத்தால் ஏற்பட ஆரம்பித்தன . முடிவில் , இன்று பிராமணன் ஆசாரம் குன்றி கலப்பு திருமணங்களில் ஈடுபட்டு , அவதிப்பட்டு , ஒழுக்கமும் போய் ஒரு பரிதாபமான கீழ் நிலைக்கு வந்து விட்டனர் . இதில் ஆச்சரியம் என்னவென்றால் , இந்த நிலையை பிராமணன் அறியாது மேற்கத்தியஉட்கார்ந்து இருந்த உக்கார்ந்து இருந்த நாகரீகத்தால் கவரப்பட்டு , தான் ஒரு நவீன பிராமணன் என்று கருதத் தொடங்கி விட்டான் . பாரம்பரிய பிராமண இதரர்களால் அவ்வப்பொழுது அவமதிக்கவும் படுகிறான் .

இந்த அவல நிலை கடந்த மூன்று தலைமுறைகளாக தொடர்கிறது . இதை உடனே நிவர்த்திக்காவிட்டால் ,

சராசரி பிராமணனுடைய நிலைமை காலம் செல்லச்செல்ல இன்னும் மோசமாகிவிடும் . முடிவில் பிராமணன் என்னும் சமூகமே இல்லாது போய்விடும் .

ஆக , இன்று நாம் செய்ய வேண்டியது என்ன ?

' பிராமின் டு டே ' போன்ற பிராமண சமூகத்தில் ஆர்வமிக்க மாத இதழ்கள், தற்கால பிராமணருடைய இந்த

தற்கால நிலையை இன்னும் பரவலாக பிரசாரம் செய்ய வேண்டும் .

1 . தனி பிராமணனின் மேன்மைக்கு முன்னுரிமை . (தனி மனிதன் முன்னேறினால்தான் சமூகம் முன்னேறும் ) அவனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஓரளவு முன்னுரிமை .

2 . அடுத்து பிராமண சமூகத்தின் மேன்மைக்கு முன்னுரிமை .

3 . அடுத்து தமிழ் சமுதாயத்திற்கும் தமிழுக்கும் முன்னுரிமை

4 . அடுத்து நம் நாட்டைப்பற்றியும் அவ்வப்பொழுது எழுதிவரவேண்டும் (துக்ளக் வார இதழ் தமிழ் நாட்டு அரசியலைப்பற்றி எழுதினாலும் நம் நாடளவிலும் அது தனது கருத்துக்களைச்சொல்லி வருகிறது . அதனால் அதன் தாக்கம் நாடளவிலும் இருக்கிறது . .வடநாட்டு பிரதேசங்களிலும் பிராமணர்கள் அநேகம் பேர்கள் (ஆ சேது ஹிமாசலம் )இருக்கிறார்கள் .

5 . கடைசியாக , தமிழ் பாஷையைப்பற்றியும்,தமிழ் கலாசாரத்தைப்பற்றியும் உள்ளகருத்துக்கள் நம் 'பிராமின் டு டே 'யிலும் வரவேண்டும் .

உதாரணத்திற்கு , இரண்டு தனிப்பாடல்களை இங்கே கொடுக்கிறேன் .

1 . கம்பனைப்பற்றியது


" இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க , வட்டில் சுமந்து மருங்கசைய " இந்த அடி கம்பரின் மகன் அம்பிகாஅதிபதி பாடியது .


சோழ மன்னன் குலோத்துங்க சோழன் புதல்வி அமராவதிக்கும் , சோழமன்னன் சபையில் இருந்த கம்பரின் புதல்வன் அம்பிகாபதிக்கும் வெகு நாளாக காதல் . அந்தக்காலத்தில்சோழ நாட்டில் பெற்றோர் அறியாமல் காதல் மணம் ஒப்புக்கொள்ளப்படாமல் இருந்தது . இது அரசன் காதுக்கு எட்ட , அவன் உடனே சபையைக்கூட்டி நீதி வழங்கக்கோரினான் . குற்றம் புரிந்தவர்கள் அரசனின் புதல்வி அமராவதியும் , கம்பரின் புதல்வன் அம்பிகாபதியும் . சபை புலவர் கம்பரும் , அரசன் சோழனும் பிரதிவாதியும்,வாதியும் சபையோரின் தீர்ப்பு -- சபையோரெல்லாம் சாப்பிடும் பொழுது அமராவதி தன் கையால் உணவு அவர்கள் எல்லோருக்கும் பறிமாற வேண்டும் . அப்பொழுது அம்பிகாபதி (அவனும் தன் தகப்பனாரைப்போல தேர்ந்த கவி .} ஆயிரம் கவிதைகள் புனைந்து அச்சபையில் பாடவேண்டும் . அதில் ஒன்று கூட சிருங்கார ரசத்தில் இருக்கக்கூடாது . அரசர் ,கம்பர் ,அம்பிகாபதி , சபையோர்கள்கள் ஆகிய எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து இருக்கிறார்கள் . அமராவதி அன்னம் பரிமாற ஆரம்பிக்கிறாள் .

எல்லாக்கவிதைகளுக்கும் ஆரம்பத்தில் கடவுள் வாழ்த்து உண்ட ( ஆனால் கடவுள் வாழ்த்து எண்ணிக்கையில் வராது ) . அத்துடன் தான் கவிதையை ஆரம்பிக்க வேண்டும் . அப்படியே அம்பிகாபதியும் ஆரம்பித்தான் . எண்ணிக்கை விடாமலிருக்க ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு புஷ்பம் என்று எண்ண ஆரம்பித்தான் . அத்துடன் முதல் புஷ்பத்தையும் போட்டுவிட்டான் . ஆக 999 வது கவிதை முடிந்தவுடன் அவனது எண்ணிக்கையில் 1000 ஆக இருந்தது. அவனது கணக்கில் அது 1001 வது கவிதையாக இருந்ததால் அதன்படி 1001 கவிதையாக மேற்கண்ட சிருங்கார ரச கவிதையை பாட ஆரம்பித்து விட்டான் .

சாப்பிடும் வரிசையில் இருந்த கம்பர் இந்த தவறை உடனே உணர்ந்து , அடுத்த அடியை பாட ஆரம்பித்து விட்டார் .


" கொட்டிக்கிழங்கோ கிழங்கென கூறுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும் " (கொட்டிக்கிழங்கை சிறு கிழங்கு என்று சொல்வார்கள் )


இதற்கு ஸாக்ஷியாக அச்சமயம் ஸரஸ்வதிதேவியே (நாமகள் ) அரண்மனை வாயிலில் ,கையில் கூடையுடன் " கொட்டிக்கிழங்கோ கிழங்கு " என்று

கூவி விற்றாள் .

நாமகள் சாக்ஷியாக வந்ததால் அரசனும் குற்றத்தை மன்னித்து விட்டான் .

இரண்டாவது

" ஆய் முத்துப்பந்தரின் மெல்லணை மீதமர்ந்து நீ முத்தம் தா வென்று அவர் கெஞ்சிடும் வேளை தனில்

என் குறை எடுத்துச்சொன்னால் உன் வாய்முத்தம் சிந்திவிடுமோ , நெல்வேலி வடிவன்னையே "

இது பலபட்டடை சொக்கநாதப்புலவர் எழுதிய நிந்தா ஸ்துதி (அன்னை -காந்திமதியம்மை ;

அப்பன் -சாலிவாடீஸ்வரர்

சிதம்பரேச ஐயர்

20 ஏப்ரல் 2022

27 views0 comments

Comments


bottom of page