ஆகஸ்ட் 19,
வரலாற்றில் இன்று.
தீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினம் இன்று(ஆகஸ்ட் 19).
🏁 விடுதலைப் போராட்ட வீரரும், ‘தீரர்’ என்று போற்றப்பட்டவருமான சத்தியமூர்த்தி 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயத்தில் பிறந்தார். இவர் சமஸ்கிருதத்தில் வல்லுநராகத் திகழ்ந்தார். நாடகம், இசை உள்ளிட்ட கலைகளிலும் ஆர்வம் கொண்டவர். சமூக சீர்திருத்தச் சிந்தனை மிக்கவர்.
🏁 சென்னை பார்த்தசாரதி கோயிலில் 1930இல் தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். 'இதுபோல பல சத்தியமூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் எப்போதோ ஓடியிருப்பர்’ என்றார் காந்தியடிகள்.
சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம் ஆகியவற்றில் இவரது பங்கு மகத்தானது. தனது அனைத்து சொத்துகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு, வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்.
🏁 1942இல் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு நாக்பூரில் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஒப்பற்ற பணியை நினைவுகூர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு ‘சத்தியமூர்த்தி பவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் என்றெல்லாம் புகழப்பட்ட சத்தியமூர்த்தி, முதுகுத்தண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு 56ஆவது வயதில் (1943) காலமானார்.
Comentarios