top of page

Highlights of Sri Periyava Anugraha Bashanam at Bhoomi Pooja


Pranams to PujyaSri Periyava:

Highlights of பூஜ்யஶ்ரீ பெரியவாளின், சங்கர நேத்ராலயாவின் வட சென்னை கட்டிட பூமி பூஜையின்போது அருளிய அனுக்ரஹபாஷணம்:

1. நமது கண்ணொளிக்கும் கண்பார்வை தீர்கமாக இருப்பதற்கும் வேண்டி ஞாயிற்றுக் கிழமைகளில் நமது இல்லங்களில் க்ரமமாக சூரிய நமஸ்காரம் செய்வது விசேஷம். அதனை இன்று இங்கு நடைபெறும் நிகழ்ச்சிக்காக காஞ்சி ஶ்ரீமடத்தில் செய்து தீர்த்த ப்ரஸாதம் எடுத்து வரச் செய்தது, பக்தர்கள்பால் ஶ்ரீ பெரியவாளுக்கு உள்ள பரம க்ருபையை காட்டுகிறது.

2. ⁠சங்கர நேத்ராலயாவின் ட்ரஸ்டிகள், இப் பூமி பூஜைக்கு ஏற்பாடுகள் செய்ய மிகச் சிறப்பான நாளை, அதாவது, உன்னத தர்மத்துடன் கூடிய இவர்கள் தொழில் மென்மேலும் வளரவும் சிகிச்சை பெறும் மக்கள் அனைவரும் நலம் பெறவேண்டியும் மிகச் சரியான தேதியை நேரத்தை தேர்ந்தெடுத்து ( 16-6-2024 ஞாயிற்றுக் கிழமை) தந்தது, தன்னை அண்டியவர்கள் பால், இவர்கள் பொழிகின்ற கருணை மழையை காட்டுகிறது. இது மட்டுமா, பாரம்பரியமாக காஞ்சி காமகோடி பீடாதிபதிகளால் அனுக்ரஹம் பெற்று வரும் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், வேத பாடசாலைகள், மஹாமகோபாத்யாயர்கள், தீக்ஷதர்கள், வாஜபேயர்கள், பிரபல குடும்பஸ்தர்கள் என்று அனைவருக்கும் கூட்டாகவும் தனித்தனியாகவும் சிந்தித்து அவரவர்க்கு உகந்த முறையில், தம் பூர்வாச்சார்யர்களுக்கு இணையாக, அதே சமயம் தனது சன்யாஸ தர்மத்தை பூஜை அனுஷ்டான க்ரமங்களை சற்றும் தளர்த்திக் கொள்ளாது, சரீர ஸ்ரமங்கள் எவ்வளவு இருந்தாலும் அவற்றை சற்றும் பொருட்படுத்தாது, பக்தர்களுக்கு க்ருபை செய்யும் பாங்கினை என்னென்பது? எப்படி வர்ணிப்பது. இந்த புத்தி ஹீன்னுக்கு வாரத்தைகள் தெரியவில்லை. ஶ்ரீபெரிவாளின் கல்வி, கேள்விகளில் உள்ள ஆழ்ந்த ஞானத்திற்கும், அபரிமிதமான ஞாபக சக்திக்கும் ஈடு இணை இல்லை. இத்தகைய பண்புகள், குணங்கள், கருணை என்பது எமது மூலாம்நாய ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளுக்கே உரியது; இதுவே, ஶ்ரீமடத்தின் ஒப்பு உயர்விலா சொத்து. இதனை, இவ் விவரங்களை மிகுந்த பெருமைடனும் ஏன் சற்றே கர்வத்துடனும் விந்திய சிகரத்தின் உச்சியில் நின்று கூவிட விரும்பபுகிறேன். நான், எனது குடும்பம், என் உற்றார் உறவினர், நண்பர்கள், அனைவரும் ஶ்ரீ காஞ்சி பெரியவாளின் பக்தர்கள் என்ற பெருமையுடன் இதனை பதிவிடுகிறேன்.

3. ⁠தொடர்நது, ஶ்ரீ பெரியவாளின் உரையிலிருந்து: பானு-ஹஸ்தம், பெளம-அஸ்வினி, குரு-புஷ்யம், சோம- மிருகசீர்ஷம் என்று குறி்ப்பட்ட கிழமைகளில் புறிப்பிட்ட நக்ஷத்திரங்கள் சேர்நது வரும் தினங்கள் சிறப்பாக கொண்டாடத் தக்கன.

4. ⁠கொடை அதாவது தானம் என்பது கலியுகத்தில் விசேஷமானது.

5. ⁠ஆதிசங்கர பகவத்பாதர்கள், பஜகோவிந்தத்திலும் ப்ரஸ்னோத்ரமாலிகாவிலும் கூறுவது:

6.யாரொருவர் கஷ்டப் படுகிறார்களோ அவர்களது சிரமத்தைப் போக்க / குறைத்திட சமுதாயம் முயற்சிக்க வேண்டும். என்னென்ன பணிகளுக்கு சமுதாயம் முயற்சிக்க வேண்டும்? வித்யாப்யாஸம், வைத்தியசாலை வசதி.

7. ⁠பெருமக்கூடல் பெருமாள் கோவிலில் உள்ள மருத்துவ சேவை பற்றிய சிலாசாஸனம். “மக்களைத் தேடி மருத்துவம்”

8. ⁠நமது சனாதந தர்மம், வறட்சியையும் வருமையையும் போக்குவதற்கு பல தர்மங்களை உபதேசிக்கிறது.

9. ⁠தர்மம் செய்வது பற்றி நள மஹாராஜா உதாரணம்

10. ⁠அகஸ்திய முனிவரின் பெருமை

11. ⁠மக்களிடையே சேவை/ தொண்டு மனப்பான்மை வளரவும் தான தர்மங்கள் தொடரவும் ஆசிகள் வழங்கினார்கள்.


Please use ear phone for better audibility48 views0 comments

Comments


bottom of page