top of page

His Holiness Blessings the students of Sri Sankara Vidhyala Matric. School at Tirumala Camp

15-5-2023 மாலை திருப்பதி முகாமில் ஶ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் ஸ்கூல், கிழக்கு தாம்பரம் பள்ளி மாணவ மாணவியருக்கு தேர்வில் சிறப்புத் தகுதி பெற்றமைக்கு Certificate of Excellence ம் ஆசியுரையும், ஶ்ரீ ஆச்சார்யாள் வழங்கினார்கள்.


Brief of His Holiness Speech


‘இளமையில் கல்’ என்பதாகச் சொல்வார்கள். ஆரம்பப் பள்ளிகளிலும் தொடர்ந்து உயர்கல்வி மேநிலைக் கல்வி என்று பல நிலைகளில் கலவியின் அவசியத்தையும் தேவையையும் உணர்ந்து நுணுக்கமாக ஆழமாகக்கற்க வேண்டும். உழைப்பை உணர்த்தக் கூடிய கல்வி, சேவை மனப்பான்மையை, நல்ல சிந்தனையை நமது கலாசாரத்தை வளர்க்கும் கல்ஙி தேவை. திறமையை வளர்க்கக் கூடிய கல்வி இருப்பதைக் கொண்டு செயல்பட்டு வெற்றி பெறக் கூடிய கல்வி, சிக்கனம் சேமிப்பு செலவு முறைகளை நிர்வகிக்க கற்றுத்தரும் கல்வி வேண்டும். சில ஊர்களில் ஆரம்பிக்கப் பட்ட சங்கரா கல்வி நிலையங்கள் வெகுவாக வளர்ந்து இன்று பல மாவட்டங்களில் செயல்பட்டு பல்லாயிர கணக்கான மாணவ மாணவியருக்கு தரமான கல்வியைத் தருகிறது. இன்றைய காலகட்டத்திற்கு தேவையான மேல் படிப்புக்கும் வேலை வாய்ப்பும் தரக் கூடியதும் நமது கலை கலாசாரமும் சேர்த்த ஒருங்கிணைந்த கல்வியை நமது சங்கரா கல்வி நிறுவனங்கள் தருகின்றன. கல்வி மற்றும் மழைநீர் சேகரிப்பு சுத்தம் சுகாதாரம் போன்றவற்றைத் தரவல்ல சுயசார்பு கிராமங்களாக அமைத்திட உதவும் வகையில் நம் உயர் கல்வி இருக்க வேண்டும். கிராமங்கள் வளர்ச்சி பெற திறமைக்கும் அர்ப்பணிப்பக்கும் அடையாளமான கைத்தொழில் நசிந்து விடாமல் நவீன தொழில் நுட்பங்களக் கொண்டு பாதுகாத்து தொழில் ரீதியாக மேம்பாடு அடைய உயர்கல்வி விஞான கல்வி உதவிட வேண்டும். நீங்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி தன் நம்பிக்கையோடு குடும்ப நிர்வாகத்திலும் சிறந்து விளங்கிட கல்வியில் கரையிலா காஞ்சி நகர் வாழ் காமாட்சியைப் பிரார்த்திக்கிறோம்.

7 views0 comments
bottom of page