top of page

இரிஞ்சாலகுடாவில் ஸ்ரீ பெரியவா சமஸ்கிருதத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் - Highlights

இரிஞ்சாலகுடாவில் யஜூர்வேத பாடசாலையைத் தொடங்கி வைத்து பூஜ்யஶ்ரீ பெரியவா சம்ஸ்கிருத மொழியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் (Highlights)


கேரளாராஜ்யத்திலுள்ள இரிஞ்சாலக்குடா காமகோடி யஜுர்வேத பாடசாலையின் புதிய வளாகத்தை துவக்கி வைத்து பூஜ்யஸ்ரீ காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகளின் அனுகிரஹ பாஷணம் அருளினார்கள். உஜ்ஜைனியில் மையம்கொண்டுள்ள மஹரிஷி சந்தீபணி வேதவித்யா ஸ்தாபன செயலர் பேராசிரியர் விரூபாக்ஷ உடன் இருந்தார்.

இரிஞ்சாலக்குடா பரத ஸங்கமேஸ்வரர் க்ஷேத்திரத்தை பற்றி சொல்லும் பொழுது பெரியவா ராமாயணத்தில் சீதாதேவி பதிவ்ரதாயாகி இருந்து உயர்ந்த நிலையை பெற்றார் . அதே போன்று ஸ்ரீராமபிரானுக்கு சிறந்த அனுஜநாக இருந்து ஜ்யேஷ்ட சஹோதரர் ஸ்ரீராமன் பித்ரு சமானம் என்று பக்திகொண்ட தனது தியாகத்தின் சேவையின் மூலம் அதர்க்கு நிகரான மஹிமை அடைந்தார் என்பது பற்றி விளக்கினார். "உபாவபி சம்மானா அர்ஹா" இருவரும் நிகரான பெருமைக்குரியவர் என்று காளிதாசர் தனது ரகுவம்சத்தில் கூறியதை எடுத்துரைத்தார். அப்படிபட்ட பெருமைவாய்ந்த க்ஷேத்திரதேசத்தில் யஜுர் வேதா பாடசாலை பவனத்தை தொடங்கி வைப்பதில் சந்தோசம் அடைவதாக கூறினார்கள். இப்பாடசாலையில் யஜுர்வேதத்தை தர்மஸாஸ்திரவிதானத்தின்படி முறையாக கற்பிக்க படுவதை எடுத்துரைத்தார். "வேதோ நித்யம் அதீயதாம்" என்ற ஆதிசங்கராச்சார்யரின் ஆதேஷத்தின்படி நடக்கின்றது.

கேரளா ராஜ்ஜியத்தில் சனாதன தர்மபிரச்சாரம் ஒவ்வொரு கிராமத்திற்கும் எடுத்துச்செல்லபடவேண்டும். ஒவ்வொரு கிராமத்திழும் ஒரு திருமேனி (வைதிகர்) குடும்பத்துடன் குடியேறவேண்டும். வைதீகர்கள்/ திருமேனிகள் கிராம மக்களுக்கு நித்திய நைமித்திக ஸம்ஸ்காரங்கள் சமஸ்க்ருதம் கீதாபோதனம் போன்ற லௌகீக-அத்யாத்மவித்யையுடன் தர்மம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள். எல்லா பக்தர்களும் இந்த முயற்ச்சியில் சேர்ந்து சனாதனதர்ம வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும் என்று கூறி வந்த அனைவரையும் ஆசீர்வதித்தார்.


கேரளம் மாநிலம் இரிஞ்சாலகுடாவில் யஜூர்வேத பாடசாலையைத் தொடங்கி வைத்து பூஜ்யஶ்ரீ பெரியவா சம்ஸ்கிருத மொழியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் (Highlights) மொழிபெயர்ப்பு உதவி: ஶ்ரீ கே. ராஜாராம் ஐஏஎஸ் Rtd.



Comments


bottom of page