புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா இடையாத்திமங்கலம் கிராம சிதிலபட்டு இருந்த 200 + ஆண்டுகள் பழமையான ஶ்ரீ ஏரிக்கறை பிள்ளையார் கோவில் புதிதாக ரூ. 40.00 லட்சம் செலவில், புனரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் கிராம ஜனங்கள் ஒத்துழைப்புடன்
28-6-24 அன்று கும்பாபிஷேகம் ஜகத்குரு பூஜ்யஶ்ரீ காஞ்சி பெரியவாளின் ஆசியினால் வெகுவிமர்சையாக நடைபெற்றது. நமது ஶ்ரீ பெரியவா கைங்கர்ய சபா உற்றுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நவசுஜா ஶ்ரீ வைத்தியநாதன் அவர்கள் முழு செலவினையும் ஏற்றுக்கொண்டார். அன்று அளிக்கப்பட்ட அன்னதானத்தின் ஒருபகுதி செலவினை நமது உறுப்பினர் ஶ்ரீ வெங்கடசுப்பிரமணியன் ஏற்றார். நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகருக்கான ஊதியத்தின் தமது பங்களிப்பாக மாதம் ரூ500 அனுப்பி வைக்க நமது உறுப்பினர் இராமச்சந்திரன் ஏற்றுள்ளார். நம் சபாவின் சின்னச் சின்ன கிராமக் கோவில்கள் புனரமைப்பு & பராமரிப்பு எனும் திட்டத்தின் கீழ் இச்செய்தி வெளியிடப்படுகிறது.
コメント