Jharkhand Governor at Shrimatam Camp
28-Apr-2023
ஜார்கண்ட் மாநில மேதகு ஆளுநர் ஶ்ரீ C.P. ராதாகிருஷ்ணன் அவர்கள் நமது பூஜ்யஶ்ரீ பெரியவாளை திருப்பதி முகாமில் சந்தித்து வணங்கி ஆசி பெற 28-04-2023 அன்று வருகை தந்தார்கள். மடத்தின் வாசலில் ஆளுநர் அவர்கள் நண்பகல் 12.00 மணிக்கு வருகை தந்தபோது முகாம் மேனேஜர் ஶ்ரீ. ஜானகிராமன், நன்கு அலங்கரிக்கப்பட்ட மூன்று சர ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். ஆளுநர் அவர்கள் நேராக ஶ்ரீ சந்திர மெளலீஸவர்ர் பூஜை கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பூஜை பிரஸாதங்களை ஶ்ரீபெரியவா அனுக்கிரக்க ஆளுநர் பெற்றுக் கொண்டார். தீர்த்தப் ப்ரஸாதமும் ஶ்ரீபெரியவா திருக் கரங்களால் மேதகு ஆளுநருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது. ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவி ஏற்றபின் இது முதல் சந்திப்பாதலால், ஶ்ரீபெரியவா 1934ல், ஶ்ரீ மஹாபெரியவா, காசியிலிருந்து புறப்பட்டு கல்கத்தா செல்லும் வழியில் ஜார்கண்ட் வந்ததையும் அங்கு ஒரு வார காலம் முகாமிட்டதையும் நினைவு கூர்ந்தார்கள். மேலும் 1973-74ல் புதுப் பெரியவர்கள், அங்கு முகாமிட்டது பற்றியும் சிறப்பாகக்கூறினார்கள். பின்னர் தாமும் ஒருமுறை ராஞ்சிக்கு வந்த சமயத்தில் தயாமாதா ஆஶ்ரமத்திற்கு புதுப் பெரியவர்கள் தம்மையும் கூட்டிச் சென்றதையும் அப்போது ஶ்ரீ பகவத்ஜி அங்கு வந்திருந்ததையும் குறிப்பிட்டார்கள். அங்குதான் அஞ்சனைக்கு மைந்தனாக ஶ்ரீஆஞ்சநேய ஸ்வாமி அவதரித்ததாகக் கூறுவார்கள் என்றும் அங்கு ஒரு ஆஞ்சநேயர் கோவில் உள்ளதையும் நினைவு கூர்ந்தார்கள்.
தொடர்ந்து ஶ்ரீபெரியவா கூறியவை:
1. ராஞ்சியில் 10/15 ஏக்கர் உள்ளது. அங்கு ஒரு கண் ஆஸ்பத்ரி ஏற்படுத்த உத்தேசிக்கிறோம். நாம் தற்போது, வித்யா, வைத்ய வேதம் என மூன்று வகையான பெரும் திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்துகிறோம்.
2. சங்கர தேத்ராலயா கல்கத்தாவிலும் சங்கர்தேவ் நேத்ராலயா மற்றும் பாலாஜி மந்திர் முதலியன அஸ்ஸாம் மாநிலம் கெளஹாத்தியில், மிகப் பெரிய அளவில் ஏற்படுத்தியது பற்றியும் அதற்கு அப்போதைய P.M. ஶ்ரீ நரசிம்மராவ் மற்றும் அப்போதைய அஸ்ஸாம் C.M. பற்றியும் கூறி, அவர்கள் அளித்த உதவிகள் பற்றியும் சிறப்பாக நினைவு கூர்ந்தார்கள்.
3. அடுத்து ஶ்ரீபெரியவா கடந்த ஓராண்டுக்கு மேலாக, ஆந்திரா கர்நாடகா முதலிய மாநிலங்களில் யாத்திரை பற்றி கூறினார்கள்.
4.வைத்தியநாத் தாம் ல், Queue complex கட்டியது பற்றியும் குறிப்பட்டு அங்கு ஒரு வேதபாடசாலை தேவை என்றும் குறுப்பிட்டார்கள்.
5. அங்கு ஆவணி மாதம் மிகவும் விசேஷம் என்றும் பக்தர்கள் காவடி எடுப்பதும் வழக்கம் என்றும், பக்தர்கள், 50/60 கி.மீ. நடந்து வருகிறார்கள் என்றும் விரிவாக்க் கூறினார்கள்.
6. ஆவணியில் அங்கு கோவில் என்றால் என்ன அதன் அடிப்படை concept ஐ விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் சிவன், விஷ்ணு, அம்மன் என்று எல்லா கோவில்களின் மாதிரிகள் கொண்ட, புராதன கோவில்களின் நோக்கம் அமைப்பு அவற்றின் ஆகம சாஸ்த்ர பின்னணிகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் மிகப் பெரிய Exhibition அமைக்க வேண்டும். கோவில் நிர்வாகம் பற்றிய மிக முக்கியமான வழக்கு ஒன்று உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. கோவில் நிர்வாகத்தினை அரசுத் துறையிலிருந்து விடுவிக்க வாதாடிய பிரபல வழக்கறிஞர்கள் ஒருவரைத் தவிர மற்றவர்கள் பதவி உயர்வு பெற்று விட்டனர். எனவே, இப்போது ஶ்ரீபெரியவா கூறும் Exhibition வாயிலாக கோவில்கள் பற்றி, தீவட்டி தொடங்கி பூஜா முறைகள் மற்றும் மிக நுணுக்கமான மாற்றவியலாத சாஸ்திரக் கருத்துக்களை, அனைவரது சந்தேகங்களும் தெளிவு ஏற்படும் வகையில் நேரில் பார்த்து அறிந்து கொள்ள இயலும்.
7. வடக்கே உள்ள கோவில் அர்சகர்களுக்கு தென் நாட்டு கோவில் பூஜை முறைகள் பற்றிய பயிற்சி அளிக்க வேண்டும். இவை பற்றிய பழைய அரசு ஆணைகளை தேடித் தருவதாகவும் தெரிவித்தார்கள்.
8. ஶ்ரீ மடத்தின் பிரதிநிதி ஒருவரை இது தொடர்பாக ராஞ்சிக்கு அனுப்பினால் தேவையான உதவிகளை தாம் செய்து தருவதாக மேதகு ஜார்கண்ட் ஆளுநர் தமது கருத்தினைத் தெரிவித்தார்கள்.
ஶ்ரீபெரியவளை திருப்பதி முகாமில் சந்தித்தது பற்றி தம் மகிழ்சியை தெரிவித்து மேதகு ஆளுநர் விடை பெற்றபோது நினைவுப் பரிசுகளுடன் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு உரிய மரியாதைகளுடன் வழியனுப்பி வைக்கப்பட்டார்.