காலை ஆச்சாரியாள் அவர்களின் தரிசனத்திற்காக ஓய்வு பெற்ற ஒரு தாசில்தார் நின்று கொண்டு இருந்தார். அவர் தரிசனம் நேரம் பற்றி வினவினார். நான் கூறிக் கொண்டிருந்த சமயம்,மிக அருமையாக ஒன்று சொன்னார் - "நாம் குருவின் தரிசனம் செய்ய காத்துக் கொண்டு இருக்கலாம். அந்தக் காத்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் ஒரு தனி சுகம். அனுபவம் உண்டு" என்றார்.
இந்த மாதிரியான பதில் எனக்கு ஒரு பாடமாக இருந்தது. நாம் தரிசனம் காண வர வேண்டும். தரிசனம் கிடைக்க வேண்டும். தரிசனம் கிடைத்த பின் உடனே செல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் வருவது எனது வழக்க முறை.
நேரத்தால் கட்டுப் பட்ட நாம், நமது நேரம், நமது வேலை என்ற எல்லைக்குள் இருந்து பார்ப்பது தான் நமது வழக்க முறை.
பக்தியின் விளக்கமாக விளங்கும் சபரி, பல வருடங்களாக இராமனின் தரிசனம் கருதி, காத்துக் கொண்டு இருந்தாள். காத்துக் கொண்டு இருத்தல் , குருவின் தரிசனம் செய்ய காத்துக் கொண்டிருத்தல் ஒரு சுகம் என்று புரிந்து விட்டால், நாம் சாதன பஞ்சகம் முதல் படி அருகில் செல்ல நமக்கு தகுதி உள்ளது என்பது உறுதி.
Comentarios