top of page

Mahakumbabhishekam of Devi Kamakshi Mandir performed with blessings of Kanchi Acharya - Glimpses


1-7-26 காலை புதுதில்லியில் ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் நிர்வாகத்திலுள்ள “ ஶ்ரீ தேவி காமாட்சி ஆலய கோபுர கலசங்களில் பூரண கும்பாபிஷேகம், புதுதில்லியில் முகாமிட்டுள்ள ஶ்ரீகாஞ்சி சங்கராச்சாரியார் ஶ்ரீ ஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களால் சிறப்பாக செய்து வைக்கப் பட்டது. உடன் ஆலயத்தில் உள்ள கணபதி மற்றும் ஆதி சங்கரர் சந்நிதி கோபுர கலசங்களுக்கும் சந்நிதியிலுள்ள மூலவர் விக்ரஹங்களுக்கும் ஶ்ரீ ஸ்வாமிகளின் முன்னிலையில் அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று மாலை தமது திருக் கரங்களால் ஆலயத்திலுள்ள மூலவரான காமாட்சி அம்மனுக்கு புது ஆபரணங்களை அணிவித்து பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கவுள்ளார்.




Comments


bottom of page