பூஜ்யஶ்ரீ காஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஆக்ஞைக்கிணங்க “ ஶ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி குடிமைப் பணி பயிற்சி நிலையம் P S Secondary School, மயிலாப்பூரை தலைமை இடமாக்க் கொண்டு அமைப்பு ஒன்று தொடங்கப் பட்டுள்ளது. மேற்படி அமைப்பின் ஏற்பாட்டில் ஏனாத்தூர் ( காஞ்சி) சங்கரா கல்லூரியில் சென்னை மாநகர ஆணையாளர் Dr.ராதாகிருக்ஷ்ணன் கலந்து கொண்டார். 18.2.24 அன்று மாலை காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காஞ்சி மஹாஸ்வாமி இந்திய குடியியல் பணிகள் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்கள் மேற்கொள் வேண்டிய பயிற்சிகள் அவற்றின் பாடத் திட்டங்கள் போட்டி தேர்வுகளை எதிர் கொள்ளும் முறைகள் நேர் முகத் தேர்வுகளுக்கு எவ்வாறு பயிற்சி எடுத்தல் போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கில் சென்னை மாநகர ஆணையாளர் உயர்திரு Dr ராதாகிருஷ்ணன் மற்றும் மேனாள் தலைமை வருமான வரி ஆணையர் உயர்திரு R. ரவிசந்திரன் IRS(Rtd) ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மேனாள் குடிமைப் பணி அதிகாரி திரு.ராமச்சந்திரன் IAS SCSVMV பல்கலையின் துணை வேந்தர் உயர்திரு Dr.ஶ்ரீநிவாசலு ஆகியோரும் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினர். தொடர்ந்து 2025 தேர்வுகளுக்கு பயிற்சி மையத்தில் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது. சங்கரா கல்லூரி மற்றும் எஸ்.சி.ஸ்.வி.எம்.வி. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் இப் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன் பெறுவர். இந்நிகழ்வில் 120 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
வட இந்தியாவில் முகாமிட்டு இருக்கும் ஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இணையதள வழி அருளுரை வழங்கி திட்டம் வெற்றிகரமாக செயல்பட ஆசீர்வதித்தார்கள்.
Comments