top of page

மஹேந்த்ரமங்கலத்தில் ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள்


amil and English Translations: Smt. Vidya Jayaraman

காஞ்சி மஹாஸ்வாமிகள் 1907-இல் (பராபவ வர்ஷம் மாசி மாசம்) பட்டம் ஏற்ற போது அவர் வயது 13. 1911-ஆம் வருடம் கும்பகோணத்திலிருந்து அவர் வித்யாப்யாஸம் செய்வதற்காக ஏகாந்தமான இடமாக அமைந்தது மஹேந்த்ரமங்கலம் என்ற க்ராமம்.

அகண்ட  காவேரியின் வடகரையில், முசிறிக்கு மேற்கே  இயற்கை வளமிக்க  ரம்யமான க்ராமம் மஹேந்த்ரமங்கலம். மஹேந்த்ரவர்மபல்லவன் தன் பெயரால் ப்ராஹ்மணர்களுக்கு அளித்து உருவாக்கிய சதுர்வேதிமங்கலமான க்ராமமாதலால்  இப்பெயர் பெற்றது. அன்னதானக் கட்டளைக்கென மடத்திற்கு மதுரையில் அரசாண்ட கடைசி நாயக்க மன்ன விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் சாலிவாகன சகம் 1603-ஆம் ஆண்டில், (1708 பொ.யு) பூதானம் செய்திருந்தார் என்பதையும் அறியலாம். அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் அதிகமாக இல்லை.  அக்ராமத்தை அடைய வேண்டுமானால், காவிரியின் தென்கரையிலுள்ள லாலாபேட்டை என்னும் ரயில் நிலையத்தில் இறங்கி, ஒரு மைல் அகலமுள்ள காவிரியைப் பரிசலில் கடந்து செல்ல வேண்டும் என்றும் 1911-1913 வரை ப்ரஸித்திபெற்ற பண்டிதர்களுக்கும், தலைவர்களுக்கும் அந்தக் கிராமம் ஒரு யாத்திரை ஸ்தலம் ஆயிற்று என்றும் அக்காலத்தில், ஸ்ரீ ஸ்வாமிகளின் வித்யாப்யஸம் செய்வித்து ஊக்கப்படுத்தியவர்களாக பைங்காநாடு பஞ்சாபகேஶ ஶாஸ்த்ரிகள், மஹாமஹோபாத்யாய ஶாஸ்த்ர ரத்னாகர தி.வேங்கடசுப்பா ஶாஸ்த்ரிகள், சாஸ்திர ரத்னாகர விஷ்ணுபுரம் சாமி ஶாஸ்த்ரிகள், திருவிசைநல்லூர் வெ.வேங்கடராம ஶாஸ்த்ரிகள், மடத்து ஆஸ்தான வித்வான்களான மஹாமஹோபாத்யாய பைங்காநாடு கணபதி ஶாஸ்த்ரிகள், மஹாமஹோபாத்யாய கருங்குளம் க்ருஷ்ண ஶாஸ்த்ரிகள், கோடி கன்னிகாதானம் உபயவேதாந்த ராஜகோபல தாதாச்சார்யார் முதலானவர்கள் பெயரையும் குறிப்பிடுகிறார் மஹாஸ்வாமி சரிதத்தில் ஸ்ரீ  ஸாம்பமூர்த்தி ஶாஸ்த்ரிகள். 

இத்தகைய வித்வான்களுள் ஒருவர் பைங்காநாடு பஞ்சாபகேஶ ஶாஸ்த்ரிகள் ஆவார். மிகவும் ஓஜஸ் நிறைந்த உயிரூட்டமிக்க அழகிய  ஸம்ஸ்க்ருத கத்ய நடையையும் சுவைமிக்க பத்யங்களையும் எழுதக்கூடியவர் இவர். அகிலாண்டேஶ்வரியின் தாடங்கபிரதிஷ்டை குறித்து ஒரு சம்பூ காவ்யம் (கத்யமும் பத்யமும் கலந்த காவ்யம்), வ்யாஸ பூஜா வைபவம் முதலியவற்றையும் இயற்றி உள்ளார். இவர் வாணீவிலாஸ அச்சுக்கூடத்தின் ஸஹ்ருதயா என்ற இதழில் “மஹேந்த்ரமங்கலத்தில் ஶங்கராசார்ய ஸ்வாமிகள்” என்ற தலைப்பில் ஒரு சிறு நாடகம் எழுதியுள்ளார்.

அந்நாடகம் ஆனந்த வருடம் ஆஷாட மாதத்து இதழில் ப்ரசுரம் செய்யப்பட்டுள்ளது(1914). ஆகாய மார்க்கத்தில் பறந்து செல்லும் ப்ரியதர்ஶனன், குருப்ரியன் என்ற இரு கந்தர்வர்கள் சோழ பூமியில் காவேரீ தீரத்தின் அழகையும் காவேரியின் மஹிமையையும் ரசித்தபடியே வர்ணித்துக்கொண்டு தம் விமானத்திலிருந்து இறங்குகின்றனர். மஹேந்த்ரமங்கலத்தில் காமகோடி பீடத்தின் ஆசார்ய ஸ்வாமிகள் தங்கி இருக்கிறார் என்று கும்பகோணத்தில் கேள்விப்படுகின்றனர். 

ப்ரியதர்ஶனன் இவ்வாசார்யர் எத்தகையவர் என்று வினவ, அவர் மிகச்சிறு  வயதிலேயே வைராக்யம் மிகக் கொண்டவர் என்றால் அஃதொன்றும் ஆச்சர்யப்படுவதற்கில்லை ஏனெனில் இளஞ்சூரியனும் உலகத்தை  ப்ரகாசிக்கப்படுத்த முடியும் – அது போல பாமரர் முதல் பண்டிதர் வரை இவரது ஆசாரத்தைப் பார்த்து தாமும் தம் கடமைகளைச் சரிவர செய்கின்றனர் என்கிறார் குருப்ரியன். அவர் அத்வைதத்திற்கும்  என்னவெல்லாம் செய்தார் என்று இருவரும் பேசிக் கொள்கிறார்கள்  – லால்குடியில் பாலக்ருஷ்ண ஶாஸ்த்ரிகள் உட்பட பலர் தம் ஊரில் ஸம்ஸ்க்ருத பாடசாலையும், பகவத்பாதர் மூர்த்தி ப்ரதிஷ்டையும் செய்யக்கோர அவ்வண்ணமே செய்ய ஆஜ்ஞாபித்து செய்து முடித்தார். அதன் பின் அங்கே சில மாதம் சந்த்ரமௌலீஶ்வரருக்கும் அம்பாளுக்கும் பூஜை முடிந்து மஹேந்த்ரமங்கலம் வந்தடைந்தார். 

அங்கே இருவரும் சுற்றிப் பார்க்கின்றனர்.  இரண்டு  பர்ணசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன –  ஒன்று அத்யயனத்திற்காகவும் மற்றொன்று தபஸ் முதலிய அனுஷ்டானங்களுக்காகவும் என்றும் தெரிகிறது. இதனாலேயே இவ்வூருக்கு ஸந்ந்யாஸிமடம் என்ற பெயரும் வழங்கலாயிற்று என்றும் அறியமுடிகிறது. அதன் பிறகு வாணி விலாஸ முத்ராணாலயத்திற்கு ஊக்கத் தொகைகள் கொடுத்தது மற்றும் அவர்களின் ஆசார்ய க்ரந்த முத்ரணத்தை மிகவும் ப்ரோத்ஸாஹப்படுத்தியது என்று அத்வைத வித்யைக்காக முனைவது இத்தகைய அரிய செயல்களை செய்து வருகிறார் என்றும் தாம் இவ்விடம் வந்தது தங்கள் பாக்யமே என்று கூறிக்கொண்டு கந்தர்வ லோகம் கிளம்புகிறார்கள்.  அவரின் நிர்வாகத் திறமையும் மிகவும் சிலாகித்து எழுதப்பட்டுள்ளது. இதெல்லாம் பஞ்சாபகேஶ சாஸ்திரிகள் எழுதிய போது மஹாஸ்வாமிகளுக்கு வயது பதினேழு முதல் பதினெட்டு தான் இருக்கும். गुणाः पूजास्थानं गुणिषु न च लिङ्गं न च वयः என்று உத்தரராமசரிதத்தில் நற்குணங்களே பூஜிக்கத்தக்கவை ஆண்/பெண் போன்ற லிங்க பேதமோ வயதோ அல்ல என்று பவபூதி சொன்னதை நினைவுகூர்கிறார்கள்.

ஆசார்யாள் ஆஜீவனபர்யந்தம் செய்யப்போகும் செயற்கரிய செயல்களின் அஸ்திவாரங்கள் அன்றே இடப்பட்டுவிட்டன என்று அவர் பாடம் கற்க உதவியாய் இருந்து கவனித்த பஞ்சாபகேஶ ஶாஸ்த்ரிகள் போன்ற   பண்டிதர்கள் அப்போதே நன்கு உணர்ந்தனர் என்ற ஸூக்ஷ்மத்தை இந்நாடகம் நமக்கு உணர்த்துகிறது

நிகழும் க்ரோதி ஸம்வத்ஸரம் மார்கஶீர்ஷ க்ருஷ்ண த்வாதஶீ (தனு 12) 2024-டிசம்பர்-27 ஆம் தேதியான அவர்தம் ஆராதனை தினத்தை முன்னிட்டு இங்கே வெளியிடப்படுகிறது.

Śrī Śankarāchārya Swāmigal in Mahendramangalam

Pūjyashrī Chandraśekharendra Sarasvatī, the 68th Jagadguru Śankarāchārya of Śrī Kānchī Kāmakoti Mūlāmnāya Sarvajna Pīṭham, undertook sannyāsa at the age of thirteen. This sacred event occurred in Parābhava varṣam, māsi māsam (1907 CE).   

In 1911, the village of Mahendramangalam provided the requisite solitude for His vidyābhyāsam. This picturesque village endowed with natural beauty lies on the Northern banks of Akhaṇḍa Kāveri, to the West of Musiri. The place owes its name to Mahendravarma Pallava who setup the village as a chaturvedimangalam and granted it to brahmanas. The last King of Madurai Vijayaranga Chokkanātha Nāyaka donated land to the Śrīmaṭham for the purpose of annadānam in 1708 CE, Śālīvāhana era 1603. 

In the early 1900s, in order to reach this village, one had to get down in the Lālāpeṭṭai railway station and take a small boat access the Kāveri. Brahmaśrī Sāmbamūrti Śāstrigal in Jagadguru Divya Charitam says that this village became a yatrāsthala for Panḍits and heads of institutions during the years 1911-1913. The distinguished vidvans who guided Mahāswāmigal’s education included  Brahmaśrī Paingānāḍu Pancāpageśa Śāstrī, Mahāmahopādhyāya Śāstra Ratnākara Brahmaśrī Venkatasubba Śāstrī, Śāstra Ratnākara Vishnupuram Brahmaśrī Sāmi Śāstrī, Thiruvisanallur Brahmaśrī Venkatarāma Śāstrī and Śrīmatham vidvāns such as Mahāmahopādhyāya Paingānāḍu Brahmaśrī Gaṇapati Śāstrī, Mahāmahopādhyāya Karunkulam Brahmaśrī Krṣṇa Śāstrī, Koṭi kanyādānam Ubhayavedānta Brahmaśrī Rājagopāla Thāthāchārya. 

Paingānāḍu Panchāpageśa Śāstrī one of these distinguished scholars wrote some works  documenting the events in the Acharya’s early years. These writings are in the form of champu kāvyas (containing a mixture of  both prose – gadya and verse – padya) that comprised of Samskrta gadya style full of ojas interspersed with beautiful padyams. This ability to write champū kāvyas is also showcases in works such as the Akhilāṇḍeśvarī Tāṭanka Pratiṣṭha Champū  and Vyāsa puja vaibhavam.

Sahṛdaya was a magazine of the Vani Vilas Press, Śrīrangam. For this magazine, Panchāpageśa Śāstrī wrote a short play titled, “Śrī Śankarācārya Swamigal in Mahendramangalam”. This was published in Ānanda Varṣa, Āṣāḍa māsa (1914 ~July). The story is told in the form of a conversation between two gandharvas Priyadarśana and Gurupriya. As they were flying along in their vimana, they look down and are captivated by the beautiful geographic location of the Cholamanḍala filled with trees, deer and the gentle river Sahyajā/Kaveri flowing along. They had learnt in Kumbhaghoṇam that the Āchārya of Kamakoṭi Pīṭham is staying at Mahendramangalam and decide to stop the vimāna.

Priyadarśana wishes to know more about the Swāmigal. Gurupriya describes the Acharya’s vairagya likening it to a young Sun that is equally capable of brightening the earth. His achara inspired everyone from the unlettered to the learned to do their duties well. They then discuss the Āchārya’s activities thus far. for the cause of Advaita Vidya and Gurupriya lists that in Lalgudi the abode of Shri Tapastīrtha and Pravṛddha Śrīmatī, Bālakrishna Śāstrigal and other bhaktas prayed to the Āchārya to install a vigraham of Ādi Shankaracharya and also to begin a Samskrta Pāṭhaśālā in their village.  He arranged for the  the Pāṭhaśālā, and did pratiṣṭha of the vigraha of Bhagavatpāda. He also conducted the puja of Chandramauliśvara and Ambāl there and from there, proceeded to the village of Mahendramangalam. 

The gandharvas look around and notice two parṇaśālās one for vedādhyayanam and the other for tapas and anuṣṭhānam have been set up. We also learn that this place was named Sannyāsi matham due to this reason Then they discuss how He has monetarily supported Vani Vilasa Mudranālayam for their printing of the works of Bhagavatpāda on Advaita Vidya along with lofty commentaries such as Bhamati and Parimalam as well and his exemplary task in the administrative affairs as well  They consider themselves fortunate to have descended to this place and then depart to their loka. 

It is interesting to note that when this was work was written, Mahaswamigal was under 20 years of age and how thee foundations for all the great work He has accomplished has been laid from the very early years of His Pithādipatyam. That senior vidvans and veterans such as Pancāpageśa Śāstrī, recognised this and thought fit to express these words of admiration tells us a lot. 

Shri Jayendra Saraswati Swamigal later on did the pratishtha of a vigraham for Mahaswamigal adjacent to Bhagavatpada and it is said that the Tulasi plant worshipped by Mahaswamigal every day before His vedadhyayanam is also here. 

The text and translation of this is made available on the occasion of His aradhana on 2024-Dec-27 Mārgashīrsha Krishna Dvādashī, Ārādhanā Tithi.


Source: Vaani Vilas Sahrdaya Magazine


6 views0 comments

Commentaires

Les commentaires n'ont pas pu être chargés.
Il semble qu'un problème technique est survenu. Veuillez essayer de vous reconnecter ou d'actualiser la page.
bottom of page