Matrimony
வேண்டுகோள்.
வணக்கம்,
ஸ்ரீ சாயி சங்கரா மேட்ரிமோனியலில், தகுந்த வதூ, வரன்கள் வேண்டி பதிவு செய்து கொண்டுள்ள அனைவருக்கும், குருவருளும் திருவருளும் அமோகமாக கிடைத்திட, ஸ்ரீ காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸ்வாமிகளின் பரிபூரண அனுக்ரஹத்துடன் இயங்கி வரும் இணைய தளமானதும், நமது சனாதன தர்ம கலை கலாசார பண்பாடு தகவல் களஞ்சியமாக, ஆன்மிக அன்பர்களிடையே புகழுடன் வலம் வருகின்றதுமான, www.thanjavurparampara.com சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
வரனோ, வதுவோ, அவரவர் எதிர் பார்க்கும் தகுதிகள் நிரம்பிய வதூ, வரன்களுடன் நமது பாரம்பரிய கலாசார பண்பாடு கொண்ட சாஸ்த்ரோக்தமான திருமணமாக ஒவ்வொருவருக்கும் அமைந்திட இறையருளை வேண்டி, விரைவில் திருமணத்தை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கும் 20 முதல் 28 வயது வரையிலுள்ள ஆண், பெண் இருபாலரும் மற்றும் அவர்களது பெற்றோர்களுடனும் பேசவும், ஸ்ரீ சங்கராச்சார்யர்களுடைய ஆசிகளைத் தெரிவிக்கவும், ஸ்ரீ ஸ்வாமிகளுடைய ஆசீர்வாத குங்கும, அக்ஷதை பிரஸாதம் அனுப்பி வைக்கவும் onlineல், எங்களது இணையதள சார்பில் கூட்டம் (zoom meeting) ஒன்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. Online கூட்டம் தேதி நேரம் முதலியன விரைவில், online கூட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து பதிவு செய்த வரன் வதூ இருபாலருக்கும் WhatsApp/ e mail மூலம் அறிவிக்கப்படும். மேற்சொன்ன காணொளி காட்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மேற்சொன்ன வயது வரம்பில் உள்ள வரன் வதூக்கள், தங்கள் தங்கள் விவரங்களை கீழ் காணும் Google formல் 20-02-2022 தேதிக்கு முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.
https://forms.gle/kjCKqLC7bUuXCYz26
தவிரவும் நூதன தம்பதியருக்கும் இதுபோலவே online கூட்டம் ஒன்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
மேற்குறித்த online கூட்டம் பற்றி மேலும் தகவல் வேண்டுமாயின் கீழ் வரும் தொ.பே. எண்ணையோ, மின் அஞ்சல் id யை தொடர்பு கொள்ளவும்.
S. Ramachandran IAS (R)
Contact: +919444129208 / ramachandransethu@gmail.com