top of page

Melalavanthachery - Siva Temple Kumbhabhishekam



கோவில் வரலாறு:



இந்த தனியார் கோவில் பரம்பரை தர்மகர்த்தாக்களால் நிர்வகிக்கப்படுகிறது. அவர்கள் வம்சத்தில் மூத்தவரான பூவனூர் கிராமத்தில் வசித்துவரும் ஶ்ரீ முத்தையா முதலியார் அவர்களிடம் சேகரித்த தகவல் :


அவரின் தந்தைவழி பாட்டனார் ஶ்ரீ ராஜு முதலியார் அவர்களின் மகள் ஜானகி அண்ணியாள்/அத்தை( படம் பார்க்க) அவர்கள் 1944 ம்வருட காலகட்டத்தில் (79வருடம் முன)கோவிலின் தற்போதைய மண்டபங்கள், மடப்பள்ளி , சுற்றுச்சுவர் , கேணி, அர்ச்சகர் இல்லம் இவைகளை தன் மேற்பார்வையில் கோவில் அருகிலேயே பல மாதங்கள தங்கி கட்டினார்கள். ஶ்ரீராஜு முதலியார் அவர்கள் சுற்றுவட்டார ஊர்களில் இருந்த

7 புராதன கோவில்களை திருப்பணி செய்ததால் அவர் ‘திருப்பணிச்செம்மல்’ என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டார்.


1951 ம்வருடம், அதாவது 72 வருடங்கள் முன் கடைசீயாக இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பஞ்சாபகேச குருக்கள், ராமு குருக்கள் இவர்கள் செய்துவந்த தினசரி பூஜைகள் உத்தேசமாக 1985ல் அதாவது சுமார் 40 வருடங்களாக நின்றுவிட்டன.

புதர்களும் வேர்களும் மண்டிக்கடந்த இடிபாடுகள் நடுவே கிராம மக்கள் தினசரி ஒரு வேளை விளக்கு ஏற்றி ப்ரதோஷ , கிருத்திகை வழிபாடு இவற்றை ஓரளவு நடத்திவந்தார்கள்.


தற்போது கோவில் அருகில் தேவன்குடி கிராமத்தில் வசிக்கும் 76 வயது கல்யாணசுந்தர குருக்கள் சிறுவயதில் 1960களில் தன் பாட்டனார் பூஜைசெய்த ஆளவந்தீஸ்வரர் கோவில் நாட்கள், ஜானகி அம்மாள் அவர்களுடன் பழகிய நாட்கள் மிக உன்னதமானவை , அம்மையாரின் ஆசாரம், தன்னிடம் காட்டிய ்அன்பு இவைளை உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து கொள்கிறார்..


தற்போது திருப்பணி எடுத்து செய்துவரும் ஶ்ரீ KS ஶ்ரீநிவாசய்யர் குடும்ப ஶ்ரீராமநாதன் சகோதரர்கள் ,மூத்த சகோதரி தங்கள் 1950 காலகட்ட பள்ளி நாட்களில் பள்ளி அருகில் இருக்கும் இந்த கோவில் பற்றியும் குளம் பற்றியும் பசுமை நினைவுகளுடன் , அர்ப்பணிப்புடன் இந்த திருப்பணி தற்போது செய்கிறார்கள்.


பக்தர்கள் அனுபவம்:

  • மேலாளவந்தசேரி கிராமவாசியான வெற்றிச்செல்வனின் அனுபவம்: இவர் துபாயில் வேலை செய்கிறார். மனைவி நாகலட்சுமி. இவர் வருடம் ஒருமுறை விடுமுறைக்கு கிராமத்திற்கு வருவது தவறுவதில்லை. (பாராட்டுகள்!!.) இவர் ஶ்ரீஆளவந்தீஸ்வரரை ‘ஐயா’ என்று அன்பு மரியாதைகளுடன் குறிப்பிடுகிறார். கோவிலின் வடபுறம் இவர் வீடு. அணுக்கமான குடும்பம். 2021ல் துபாயில் ஒருநாள் இவர் மனதில் ‘ஐயா’ ஆக்ரமித்து எச்சரிக்கை செய்ததால் இவரின் அண்ணன் மகன் சென்னையில் தற்கொலை எண்ணத்திலிருந்து கடைசீ நிமிடத்தில் காப்பாற்றப்பட்டான். இவரிடம் +91 6383700873 என்கிற எண்ணில் தொடர்புகொண்டால் விபரங்கள் பெறலாம்.

  • இதுமாதிரி கோவில் அருகில் வசிக்கும் அசோக் 2021ல் ஒரு இரவில்அவருக்கே தெரியாமல் ஹார்ட் அட்டாக் வந்து அவர்மனைவி சித்ராவின் நம்பிக்கையுடனான 5 மணிநேர கோவில்முன் செய்த தொடர் ப்ரார்த்தணையால் அசோக் நலமுடன் மறுவாழ்வுகிடைத்ததாக சித்ரா சொல்கிறார்.இவர்கள் திருப்பணி நடக்கும் சமயம் தன் குடும்ப உபயமாக கோவிலுக்கு போர்வெல் அமைத்துதந்து நிரந்தர தண்ணீர் வசதி தங்கள் வசதிக்கு மீறிய பெரும்சிலவில் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். தொடர்புக்கு +91 94439 70036

  • மேற்குபுறத்தில் வசிக்கும் ரவிசந்திரன் மகன் மணிகண்டன் துபாயில் வேலைசெய்யும் நாட்களில் ஒருவருடம் முன் தீவிர நுரையீரல் பாதிப்பிலிருந்து ‘ஐயா’ விடம் தொடர்ந்து தியானித்ததில் 6மாத சிகித்சைக்குப்பின் இறைவன்அருளால் குணமடைந்து மறுபடி சென்னயில் வேலை செய்கிறார் . தொடர்புக்கு +91 97513 33307

கோவில் வளாகம் ,மண்டபம் , கருவறை முழுவதும் வௌவால்கள் , பாம்பு முதலியன , வேர்கள் புதர் மண்டிக்கிடந்தும் 40வருட காலத்தில் மற்றும் சமீபத்திய கட்டட வேலை நடக்கும் 4 மாத காலத்திலும் எந்தவொரு பாதிப்பும் ,குவிந்துகிடந்த வௌவால் எச்சங்களை பல தருணங்களில் சுத்தம் செய்யும் சமயம் விஷ தொற்றுநோய் ஏற்படாமல் இன்றுவரை ஆரோக்யமாய் இருப்பது அம்மையும் அப்பனுமான அவன் அருளன்றி வேறெதுவுமில்லை !!ஓம் நமசிவாய!!


43 views0 comments

コメント


bottom of page