top of page

Navaratri 6th Day -Mahaswami vidhya mandir

சென்னை, ராஜகீழ்ப்பாக்கம் ஶ்ரீ மஹாஸ்வாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில், முகாமிட்டுள்ள ஶ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஶ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கடந்த ஐந்து நாட்களாக, ஶ்ரீ மஹாத்ரிபுர சுந்தரி அம்பா சமேத சந்திரமௌலீஸ்வரர் ஸ்வாமிக்கு நவராத்திரி விழாவை ஒட்டி ஶ்ரீ ஸ்வாமிகள் இருவரும், நாள் தோறும் மூன்று வேளைகளிலும் சிறப்பு பூஜைகளை, அனைத்து மக்களின் நலன்களை வேண்டி செய்து வருகின்றனர். நாள் தோறும் பல நூறு பக்தர்கள் கண்டு களித்து பயன்பெற்று வருகின்றனர்.


ree

நவராத்திரி விழாவின் ஆறாம் நாளான இன்று, நவாவரண சிறப்பு பூஜைகளுடன், விசேஷமாக நடைப்பெற்ற நிகழ்ச்சிகளாவன:


1. அம்பாளின் அம்ஸமான வனதுர்காவை பூஜிப்பதற்கான காரிய க்ரமங்கள் நடைபெற்றன. அனைத்து ஜனங்களுக்கும், வன விலங்குகளால ஏற்படக்கூடிய அச்சமோ பயமோ இல்லாமலிருக்க, வனதுர்கையின் அருள் வேண்டி செய்யப்பட்ட ஹோமம்.


2. ⁠சஹஸ்ர ஶண்டி ஹோமமானது கடந்த 5 நாட்களைப் போல இன்றும் மூல மந்திரம் ஆயிரம் முறை பாராயணமும் நூறு முறை ஹோமமும் நடைபெற்றது. கூடுதலாக இன்று மஹா பெரியவாளின் அவதார நக்ஷத்திரமான அனுஷமும் ஷஷ்டி திதியும் கூடிய நன்னாள். எனவே மேற் சொன்ன ஹோமத்தின் பூர்ணாஹுதிக்கு முன்பாக, பத்மமும் அம்பாள் உருவமும் ஒரு புறம், பத்மமும் அம்பாளின் அஷ்டோத்திரத்திர நாம பீஜாக்ஷரம் ஒரு புறம் என்று ஒரு சவரன் எடையுள்ள ஒவ்வொரு தங்கக் காசிலும் பொறித்த 108 காசுகளைக் கொண்ட தங்கக் காசு மாலை ஒன்றும், அம்பாளின் சஹஸ்ரநாமத்தினை 75 கிராம் தங்கத்தில் தோய்த்த சஹஸ்ரநாமம் பொறிக்கப்பட்ட 1008 காசுகளைக் கொண்ட ஒரு நீண்ட காசு மாலையும் ஶண்டி ஹோம குண்டத்திற்கு முன்பாக நிர்மாணிக்கப் பட்டுள்ள பிரதிமைகளுக்கு சார்த்தப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வளாகத்தில் உள்ள ஶ்ரீ காமாட்சி அன்னைக்கு ஶ்ரீ சங்கராச்சாரியார் ஸ்வாமிகளின் பொற்கரங்களால் சார்த்தப்பட்டு தூப தீப நெய்வேத்தியம் செய்யப்பட்டது. இதன் பலனாக அம்பாள் க்ருபையில் பக்தர்கள் அனைவருக்கும் சகல மங்கலமும் உண்டாகும் என்பதாம்.

Comments


bottom of page