top of page

நவராத்திரி மஹோத்ஸவத்தின் ஏழாவது நாள்

1. இன்று திங்கட்கிழமை நவராத்திரி மஹோத்ஸவத்தின் ஏழாவது நாள். திதியும் அஷ்டமி நக்ஷத்திரமோ சரஸ்வதி தேவியை ஆராதிப்பதற்குறிய மூல நட்சத்திரம். எனவே இன்று தொடக்கம் மூன்று நாட்கள் ஸரஶ்வதி தேவியை கொண்டாட வேண்டும். சரஸ்வதி தேவி மூல மந்திரத்தினை 10,000 முறை ஜபம் செய்தும் 1000 முறை ஹோமம் செய்தும் வாக்வாதினி ஹோமம் செய்யப்பட்டது. இதன் பலன், அந்தத்தத் துறை சார்ந்த அனைத்து மக்களும், வேத, சாஸ்த்திர, தர்மம் மற்றும் பல்வேறு கல்வி கேள்விகளில் மேதா விலாசத்துடன் கூடிய வாக் விருத்தி, நியாய வாதங்களில் வெற்றி முதலியனவாம்.

வழக்கமான ஶண்டி ஹோமமும் க்ரம்ப்படி நடைப்பெற்றது.

இன்றைய விசேஷம் என்னவென்றால், சதுர்வேத வித்யார்த்திகளின் சம்மேளனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு பாடசாலைகளிலிருந்து 630 வித்யார்த்திகள் அந்தந்த பாடசாலைகளின் அத்யாபக்குகளுடன் வந்திருந்தனர். அவரவர் ஶாகையிலிருந்து வேத க்ரம பாடங்களை இரண்டு மூன்று நிமிடங்கள் ஶ்ரீ்பெரியவா முன்னிலையில் ஓதினார்கள். அத்தனை மாணவர்களையும் வடுக்களாக வரித்து , பாத்யம். அர்க்யம் ஆசனம் ஆசமனீயம் அளித்து ஆடை அலங்காரங்கள் கொண்டு உபசரித்து. பைரவர் அஷ்டோத்திரம் கொண்டு அர்ச்சித்தும் போஜனம் செய்வித்தும் மகிழ்விக்கப் பட்டனர். வடு பூஜை கன்யா பூஜை சுவாஸினி பூஜை என்று எட்டாம் நாள் நவராத்திரி மஹோத்ஸவம், அமர்க்களமாக ஶ்ரீமடம் சம்ப்ரதாயப்படி கொண்டாடப்பட்டது.

இன்று மற்றொரு விசேஷமாக ஶ்ரீ பெரியவா வேத வித்யார்த்திகளுக்கு அற்புதமான அனுக்ரஹபாஷணம் வழங்கினார்கள். அப்போது அவர்கள் வழங்கிய ஹிதோபதேசமானது, குறிப்பாக மாணவர்களுக்கானது. என்றாலும், அவை யாவும் குமார, க்ருஷோர, யௌவன, மாணவர் பெரியவர் முதியவர் என்று அனைவருக்குமான உபதேச வாக்கியங்கள். அதில் சிலவற்றை நாம் இப்பொழுது சிந்தித்து அனுபவிக்கலாம்:

அ) வேதம் நமக்கு ஆப்த வாக்கியம். உள்ளதை உள்ளபடி சொல்லும் வேதமானது ஈஸ்வரனின் மூச்சுக் காற்று. மேலும் நாம் நலமாக வாழ வேண்டியே, நமக்கான உபதேசங்களை கட்டளைகளாகச் சொல்கிறது. அதனை முழுமையாக நாம் கடைபிடித்தால், ஐஹிக, ஆமுஷ்மிக பலன்களுடன், ஆயுள், ஆரோக்கியம், ஸ்ரேயஶ், யஶஸ் என கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

ஶ்ரீ பெரியவா மஹா வாக்கியம் போல் தனது உரையில் தெரிவித்ததாவது:

ஆ) ஆங்கிலத்தில் exposure என்ற பதத்திற்கு அர்த்தமாக, வெளி வ்யவாகார உலகை கண்டு அனுபவம் பெறுவது என்கிறார்கள். ஆனால் நம் வேத வாக்கியங்கள் படி. “ நாம் வெளியே அல்லாது, உள்முகமாக மனதை செலுத்தி, உண்மையை அறிதலே சரியான exposure ஆம்.

இ) புராணங்கள் கட்டுக் கதைகள் அல்ல; கட்டு கட்டாக கதைகள் கொண்டவை. இவற்றின் வாயிலாக பாரதத்தின் பண்டைய சரித்திர வரலாற்றை பூகோளம் முதலானவற்றை நாம் அறியலாம்.

ஈ) மேற் சொன்ன சரித்திரங்களை கவிதையாக வர்ணணைகளைக் கொண்ட பாடலாகத் தருவது காவியம்.

உ) எனவே வேதம் முழுதும் கற்க வேண்டும் அதன்படி வைதீகமாக வாழும் போதே இதிஹாச புராணங்களைக் கற்றும் சரித்திரம் மற்றும் பூகோளம் முதலியவற்றை அறிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து காவியங்களை உயர்ந்த ரசனையோடு கற்று, அதன் பலனாக, நம் வாழ்க்கையை, ஒரு காவியம் போலவே நடத்த வேண்டும்.

உ) ஒரே விஷயத்தை, வேதம், புராணம், காவியம் மூன்றும் வேறு வேறு நடைகளில் வர்ணனைகளில் சொல்லுகின்றன.

ஊ) நீர் வளமும் மண் வளமும் மன வளமும் நிரம்பிய பாரத தேசத்தில், வேதம் நம்நலத்திற்கு தந்துள்ள வைதீக மார்கம் ஆணைகளாக ஸம்ஹிதா வாக்கியங்களைத் தந்துள்ளது. அவற்றை தவறாது பின்பற்ற வேண்டும். சிநேகிதர்கள் ஹிதோபதேசம் செய்வது மித்திர சம்ஹிதை. அதே ஹிதோபதசங்களை மனைவி சொல்லும் போது, அது “காந்த சமஹிதை” எனப்படுகிறது. ஶ்ரீமத் ராமாயணத்தில் சீதாதேவி ஒருகட்டத்தில் ஶ்ரீராமனுக்கு ஹிதமாக சில வாக்கியங்களை சொல்லும் போது, மிக அழகாக வும் மென்மையாகவும் இனிமையாகவும்,”தாங்கள் அறியாதது ஏதுமில்லை, இருந்தாலும் தங்களுக்கு நினைவூட்டினேன்”, என்கிறாள். இத் தெய்வ தம்பதியே நாம் பின்பற்றத் தகுந்த உதார தம்பதி.

எ.) எனவே இந்த நல்லுரைகளை புரஸ்கரகம் செய்ய வேணும். இதற்கு எதிர் பதம் திரஸ்கரம் என்பதாம்.

ஏ) வைதீக தர்மம் எல்லோருக்கும் சுபிட்சமும் சௌக்கியமும். சத்தான எண்ணங்கள் மனதில் தோன்ற, சாத்வீகமான ஆகாரம்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். ப்ரும்மச்சாரியாகவே சன்யாசாஸ்ரமம் ஏற்கும் முன்னரே ஒரு ஏழை பெணமணிக்கு இரங்கி மஹாலக்‌ஷிமியை வேண்டி பொன்மாரி பொழிய வைத்த ஶ்ரீமத் ஆதிசங்கரர் நமக்குத் தந்துள்ள அன்னபூர்ணாஷ்டகத்தில், நாம் வேளைதோறும் எடுத்துக் கொள்ளும் ஆகாரமானது ஞானத்தையும் வைராக்கியத்தையும் தர வல்லதாக இருக்க வேண்டும்”, எனபிறார். எனவே, ஆகாரத்தில் நமக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விதி முறைகளை அப்படியே பின் பற்ற வேண்டும்.

ஐ.) ஆயிரம் வார்த்தைகள் பேசலாம், ஆனால் ஒரு வார்தை எழுத்தில் தருமுன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்.

2.) இவ்வாறாக வடுக்களுக்கான ஶ்ரீ பெரியவாளின் ஆசியுரை அற்புதமாகமைந்திருந்தது.

அது சிறுவர்களுக்கான நல்லுரையாகவும் பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் அறிவுரையாகவும் அமைந்தது என்றால் அது மிகயில்லை.

3.) வழக்கமான காலை இரு காலம் இரவு ஒரு காலம் என்றும் நவராத்திரி சிறப்பு பூஜைகளாக இருவேளை நவாவரண பூஜைகள் மிக மிக விமரிசையாக நடைபெறுகின்றன.

கடந்த ஐந்தாறு தினங்களை வந்து ஶ்ரீ பெரியவாளை தர்ஸித்தும் பூஜைகளில் கலந்து கொண்டும் கண்டு களித்துச் சென்ற கூட்டம் ஏராளம் என்றால்

இன்று வருகை தந்தோர் மிக அதிகம். இன்று வருகை தந்தோர் நேற்றைய கூட்டத்தினைப் போல் இரு மடங்கு எனலாம். அத்தனை பேர்களும் காத்திருந்து பூஜைகளை பொறுமையுடன் கண்டும், குறையேதுமிலாத சுவையன உணவைத் தவறாமல்உணவருந்தியும் சென்றனர். விழா ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுக்கள்.

Recent Posts

See All
ஶ்ரீ மடம் பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

ஶ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர்களால் ஸ்தாபிக்கப்பட்டு ஸ்வயம் ஶ்ரீமத் பகவத்பாதர் அவர்களே முதல் பீடாதிபதியாக சர்வக்ஞ பீடம் ஏறியதும் வரலாற்று...

 
 
 
Audio Collection of all vedas

Here are all Vedas for you!!! (Audio's) Hear at least for 30 minutes everyday. Rig Veda Krishna yajur veda Shukla yajur veda Atarva veda...

 
 
 

Comments


bottom of page