ஶ்ரீ குருப்யோ நம:
பரம பூஜனீயர்களான நமது ஆச்சார்யாள், க்ரோதி ஸம்வத்ஸர சாதுர்மாஸ்ய விரதானுஷ்டானுங்களை ஓரிக்கை ஶ்ரீ சந்திரமெளலூஸ்வரர் பூஜாமண்டபத்தில் வைத்து வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். இச் சமயத்தில் வழக்கமாக நடைபெற்று வருகின்ற, அத்வைத சபா, பஞ்சாங்க சதஸ், வாக்யார்த்த சதஸ் முதலிய கற்றோர் நிறைந்த சபைகள் நாள் தோறும் வெகு விமர்சையாக நடை பெற்று வருகின்றன. இத்தனை வேத விற்பன்னர்கள், மேதாவிலாசம் மிகுந்தவர்கள் அவர்கள் வாத ப்ரதிவாதங்கள் என்று தேவேந்திரன் நடத்தும் சபையோ என அனைவரும் வியந்து பாராட்டும் வண்ணம்
சதஸுகள் நடைபெற்று வருகின்றன. இதன் மத்தியில் சாதாரண எளிய ஜனங்கள் அனைவருக்கும் தரிஸனமும் ப்ரஸாதமும் தந்து ஒவ்வொருவரிடமும் இரண்டொரு வார்த்தைகள் விசாரித்து பேசுகிறார்கள் என்றால் இங்கு வருகை தரும் பக்த ஜனங்கள் மீதுதான் பூஜனீயர்களுக்கு எத்தனை கருணை, க்ருபை. அது போல ஜனங்கள் அனைவரும் அவரவர் ஸ்வதர்மத்தில் இருந்தால் சனாதன தர்மத்திற்கு ஒரு ஹானியும் இல்லை என்பதாலேயே சனாதன தர்ம சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு பிரிவும் முக்கியமானதே. ஒவ்வொரு பிரிவிற்கும் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடமை/ பணிகளுக்குத் தக்கவாறு ஆசார நியமங்களும் அனுஷ்டானங்களும் வித்யாசப்படும், அவ்வளவே. எல்லோருக்கும் அடிப்படை பொது தர்மம் ஒன்றுதான். எல்லோரும் அவரவர் தர்மத்தில் இருக்க வேண்டும் அவ்வாறு இருப்பவர்களை போஷிப்பதும் ஊக்குவிப்பதும் அந்தந்த சமூகங்களின் கடமை. எனினும் வேதநெறி எனும் வைதீக மார்கத்தை காமகோடி பீடம்சமஸ்தானம் என்ற முறையில் வைதீகர்களைக் கொண்டு போஷிப்பது போல் மார்கத்தின் இதர அங்கங்களான கோசம்ரக்ஷணம் ப்ரஸாதம் தயாரிப்போர், ஹோம த்ரவியங்கள் தருவோர் என்று அனைவரும் தம் தர்மத்தில் இருப்வர்களே. இதில் பாகசாலா எனும் இல்லங்களில் நடைபெறும் அனத்து விசேஷங்களுக்கும், பூஜைகளுக்கும் நெய்வேத்தியம், பித்ரு பூஜனத்திற்குத் தேவையான சமையல் ஆகியவற்றை
தயாரிக்கும் ஆண், பெண், தம்பதியர் மீதும் ஶ்ரீபெரியவா கடக்ஷம் விழுந்தது. உடன் எழுந்தது ஒரு புதிய திட்டம், அதாவது, விசேஷ காலங்களில் கர்த்தாக்களின் இல்லங்களுக்கு சென்று பண்டிகைக்குத் தகுந்தவாறு சமையல் செய்து தரும் பணியாளர்கள் தகுந்த முறையில் சமருத்தியான சம்பாவனையுடன் புடவை வேட்டி (சோமன்-ஜோடு என்பது தஞ்சாவூர் வழக்குச் சொல்) முதலியவற்றுடன் கெளரவிக்கப்பட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக, தமது ஓய்வைப் பற்றி கிஞ்சித்தும் நினையாது, நமது அழைப்பின் பேரில் வந்திருந்த இவர்கள் ஒவ்வொருவரிடமும் இரண்டொரு வார்த்தை பேசி அவர்கள் நலம் விசாரித்து; அப்பப்பா ஒவ்ஒருவர் மீதும் பூஜனீயர்கள் கிருபை பொழிந்து க்ருபா சமுத்திரம் ஆனார்கள். பக்தர்களோவெனில் க்ருதக்ஞர்களாக ஆனார்கள். அமைப்பு ரீதியாக சமூகத்தின் சற்றே பின்னால் யாராலும் அதிகம் கவனிக்கப்படாது இருக்கும் இவர்கள் ஶ்ரீ பெரியவாளுக்கு தம் க்ருதக்ஞை தெரிவிக்க வார்தைகள் அறியாது கண்களில் ஆனந்தபாஷ்பம் பொங்க நின்றிருந்தது நிஜம். அவர்கள் எமக்கனுப்பிய voice mail நன்றிகள் இணைப்பில்.
பெரியவா அனுகிரக பாசனத்தை நேரில் கண்டு பார்ப்பதற்கு நேரில் எங்கள் கோரிக்கைகளை சொல்வதற்கும் பெரியவா ஆசீர்வாதம் மற்றும் பிரசாதம் பெரும் பாக்கியத்தை ஏற்படுத்தி தந்த மகா ராஜா ஸ்ரீ ரமண தீக்ஷிதர் அண்ணா அவர்களுக்கும் தஞ்சாவூர் மேலவீதி ராஜபா சாஸ்திரி அண்ணா அவர்களுக்கும் தஞ்சாவூர் சமையல் மாமிகள் அனேக கோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கின்றோம் நன்றி ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏
Comments