"தென் நாடுடைய பெரியவா போற்றி, என் நாட்டவருக்கும் பெரியவா போற்றி "
எண்று, ஸ்ரீமடம் பக்தர்களும் மற்றோரும் பரம பூஜனீயரான ஜகத்குரு
பூஜ்யஸ்ரீ மஹா பெரியவா பற்றி பாடுவதை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம், பாடியும் இருக்கிறோம்.
நடமாடும் தெய்வமெனப் போற்றப் பட்ட ஸ்ரீ மஹா பெரியவா அவர்களது திருவடிகள் படாத கிராமமோ நகரமோ, இந்தியாவில் இல்லை எனும் அளவுக்கு பாரத தேசம் முழுவதும் நடந்து நடந்து, கிராமம் கிராமமாக தங்கி ஸ்ரீமஹா திரிபுர சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ சந்திரமெளீஸ்வரர் பூஜைகள் செய்தும், தர்மப் ப்ரசாரங்கள் செய்தும், நலிவடையும் நிலையிலிருந்த வைதீக மார்கத்தை சனாதன தர்மத்தை நிலை நிறுத்தியும், மணிக்கணக்காக, நாள் கணக்காக பக்தர்களுக்கு தரிசனம் தந்தும் அனுக்ரஹித்தும், அவர்களது கவலைகளையும், குறைகளையும் க்ருபையுடன் கேட்டும் வேண்டுதல்களை நிறைவேற்றியும், ஸ்ரீ மஹாபெரியவா, ஒரு நூற்றாண்டு காலம் செய்திட்ட வேத ரக்ஷண, சனாதன ஆன்மிக மற்றும் ஆலயப் பணிகள் ஏராளம். தனது ஜீவித காலத்தில், தனது தர்மத்திலிருந்து சற்றும் வழுவாத ஸ்ரீ மஹா பெரியவா, சூக்ஷம ரூபத்தில் அகில உலகிலும் சர்வ வ்யாபியாக ஆக ஆனவர்கள். எனவே, வெளி தேசங்களில் உள்ள பக்தர்கள் தங்கள் வாழும் தேசத்தில் பக்தி ஸ்ரத்தையுடன் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு கோவில் அமைத்து வருவது மிக்க மகிழ்ச்சி தரும் செய்தியாகும். அமெரிக்காவில் நியூஜெர்ஸி நகரில் மிகப் பெரிய அளவில் 'நம்ம பெரியவா' கோவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நியூஜெர்ஸி நகர் சென்று கோவில் வளர்ந்து வருவதை நேரில் பார்க்கும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது. அங்குதான், பூஜ்யஸ்ரீ ஸ்ரீபெரியவாள் அவர்களின் ஆக்ஞையின்படி கடந்த 30-10-2022 ஞாயிற்றுக்கிழமையன்று குமார போஜனம், 109 ப்ரும்மச்சாரிகளைக் கொண்டு பெரியவாள் க்ருபையினால் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அவி விழாவில் நானும் கல்ந்து கொண்டபோதுதான், கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் கோவில் முழுவதையும் ஸ்ரீசூரி அவர்களும் அவரது நண்பர்களும் சுற்றிக் காண்பித்தனர். எத்தனை சவால்கள் எத்தனை சோதனைகள் ஆனால், என்ன ஆச்சர்யம் என்ன ஒரு அற்புதம். மாஜிக் மாதிரி அத்தனையும், வந்த சுவடு தெரியாமல், பொய்யாய், பழங்கதையாய் கனவாய், பொடிப்பொடியாய், போயினவே, ஸ்ரீ மஹா பெரியவாளின் க்ருபையாலும் அனுக்ரஹத்தாலும். அப்பப்பா, அவர்களுக்குத்தான், என்ன ஒரு உத்ஸாகம், அலுக்காமல் சலிக்காமல் ஸ்ரீமஹா பெரியவாளின் க்ருபயைய்ச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்கள். படங்கள் எடுத்துக் கொண்டதோடு, ஸ்ரீ சூரி அவர்களிடம் அவரது அனுபவங்களை, நம்து இணைய தளத்திற்கு ஒரு கட்டுரையாக எழுதித் தருமாறு கேட்டபோது, சற்றே சங்கோஜப்பட்டார். எனினும் நேரிலும் போனிலும் வற்புறுத்தினேன். கொடுக்கவில்லை. ஸ்ரீ நாமே எழுதிவிடுவோமே என்று 'லேப்டாப்' ஐ திறந்து, முதலில் மெயில் பாக்ஸ் வழிகிறது, அதில் பழைய மெயில்களை நீக்கிவிட்டு புதிய மெயிகள் வந்திட வழி வகுக்கலாம் என்று ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தேன். அதில் ஒரு வருடத்திற்கு முன்பே இக்கோவில் குறித்து, ப்ரும்மஸ்ரீ பாலாஜி பாகவதர் வழங்கியுள்ள இக்கோவில் பற்றியும், ஏற்பட்ட சோதனைகள் பற்றியும் புதுப்பெரியவா மற்றும் பால பெரியவா இரண்டு பெரியவர்களும் ஆசி வழங்கி அறிவுரைகள் வழங்கியது பற்றியும், கோவில் எப்படி வளர்ந்தது என்பது பற்றியும் 15 நிமிடங்களுக்கு ப்ரசங்கமாகவே தந்துள்ளது கண்டு ஆச்சரியம் அடைந்தேன். இந்த மெயிலை நான் இதுவரை பார்க்க தவறிவிட்டேன் என்பது கண்டு ஒரு பக்கம் வருத்தம் ஆனால் மறு பக்கம் மகிழ்ச்சி. வருத்தப்பட்டது என் தவற்றினை நினைத்து, மகிழ்ச்சி அடைந்தது, எழுத நினைத்த கட்டுரை, ஸ்ரீ மஹாபெரியவாள் க்ருபையால் ப்ரும்மஸ்ரீ பாலாஜி பாகவத்ர் அவ்ர்களின் அற்புதமான் ப்ரஸங்கமாக்வே 'ரெடியாக'க் கிடைத்தது. அப்படியே இங்கு பக்தர்களூக்கு இணையத்தின் வழியாகப் படைப்பதில் பெருமை அடைகிறேன்.
அன்பன் சேது.இராமச்சந்திரன்.
Comments