இரங்கல் செய்தி, புகழுரையுடன்
நெஞ்சில்ஈரமும் எளியோர்கண்டு இரங்கி அவர்களுக்கு இயன்றவரை வழங்கும் ஈகை குணமும் கொண்டுள்ளவரும் தர்ம சிந்தனையுடன், நற் காரியங்களுக்கு கொடைகள் பல வழங்கியும் எல்லாவற்றிற்கும் மேலாக பூஜ்யஶ்ரீ பெரியவாளிடம் அபார பக்தியும் கொண்டு மற்றோர்க்கு வழிகாட்டியாகவும் விளங்கிய அருமை நண்பர் ஶ்ரீ ரமேஷ் சேதுராமன் அவர்கள், நேற்று 24.3.2024 மாலை சென்னையில் தனது இல்லத்தில் சிவலோக ப்ராப்தி அடைந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். தஞ்சை மாவட்டம் உடையாளூர் வாத்திம குடும்பங்களை சேர்நத ஶ்ரீ சேதுராமன், தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் கிராமத்தினை சொந்த ஊராகக் கொண்டவர். அன்னார் காஞ்சி மடத்திற்கென ஆற்றிய பணிகளும் வழங்கிய நன் கொடைகளும் இங்கு நினைவு கூறத் தக்கன. குறிப்பாக, வேதபாடசாலைகள், கோ-சாலைகள், சண்டி ஹோமங்கள், அதிருத்ர யாகங்கள், பற்பல கோவில் திருப்பணிகள் பாகவத மேளா, ராதா கல்யாணம் என்று அனைத்து வகை வைதீக மார்க நிறுவனங்கள் பலவற்றுக்கும் நிதி மற்றும் பல்வகை உதவிகளை கைமாறு கருதாமலும் அதிக ஆராவாரமின்றியும் அளித்துள்ளார்கள். குறிப்பாக வைதீகர்களின் பெண் குழந்தை திருமணங்களுக்கு நிதி உதவிகள் அளித்ததுடன் பெரும்பாலான வைதீகர்களுக்கு ஆயுள் காப்பீட்டிற்கு என வருடம் தோறும் பெரும் தொகையை ப்ரீமியமாக செலுத்திட சில ட்ரஸட்டுகளுடன் ஒப்பந்தம்கள் ஏற்படுத்திக் கொடுத்தது மிகவும் போற்ற தக்க பணியாகும். இயல்பாகவே அன்னதானம் எனும் நற் பணிக்கு உதவி வந்த நண்பர் ஶ்ரீ ரமேஷ் சேதுராமன், புஷ்கரம் போன்ற புண்ணிய காலங்களிலும் சுனாமி போன்ற பேரிடர் காலங்களிலும் செய்து வந்த அன்னதானம் குறிப்பிடத் தக்கது.
“தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்” எனும் குறளுக்கு ஏற்ப நல்ல பல தர்ம காரியங்களில் ஈடுபட்டு அவற்றை வெற்றிகரமாகவும் முழுமையாகவும் நிறைவேற்றி தமக்குப்பின் மற்றோர் அவ்வறப் பணிகளை தொடர்ந்திட விட்டுச் சென்றுள்ள,
ஶ்ரீ ரமேஷ் சேதுராமன் அவர்களுக்கு மனைவி மற்றும் திருமணமாகி, கணவர் மற்றும் குடும்பத்துடன் வெளிநாடுகளில் வசித்து வரும், இரு பெண்கள் உள்ளனர். அன்னாரை இழந்து வாடும் அவரது இல்லத்தார், சகோதரர்கள், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்:
Jayanthi Ramesh:
+919444317233;
Guruvauurappan:
0019082443258;
0019083691644;
0019082443265;
Σχόλια