top of page

Sri Kadamban Mama - Thanjavur Distirct Temples Visit Experiences.

ஶ்ரீ பெரியவாள் அவர்களின் ஆக்ஞையின் பேரில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள காசிக்கு சமமான ஆறு சிவ க்‌ஷேத்திரங்களை தரிசித்து வந்த ஶ்ரீமடம் பூஜைக்கட்டு ஶ்ரீ கடம்பன் மாமா தனது அனுபவங்களை இங்கு பகிர்ந்துள்ளதை மிக்க நன்றி கலந்த மகிழ்ச்சியுடன் தஞ்சாவூர் பரம்பரா இணைய தளத்தில் பதிவிடுவதில் பெருமை மெறுகிறோம்.


காசிக்கு சமமான ஆற்றல் கொண்ட திருத்தலங்கள் மயிலாடுதுறை (மயூரநாதர் கோயில்), திருவிடைமருதூர் (மகாலிங்கேஸ்வரர் கோயில்), திருவெண்காடு (சுவேதாரண்யேஸ்வரர் கோயில்), திருவையாறு (ஐயாறப்பர் கோயில்), மற்றும் ஸ்ரீவாஞ்சியம் (வாஞ்சிநாதேஸ்வரர் கோயில்) , திருச்சாய்க்காடு (சாயாவனேஸ்வரர் கோயில்).

 

“சுவேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜனம் ! சாயாவனம்ச ஸ்ரீவஞ்சியம் காசீ க்ஷேத்ர ஸமான ஷட் !'

 

 

1)  திருவிடைமருதூர்   

 

மகாலிங்கேஸ்வரர்

பிருகச்சுந்தரகுஜாம்பிகை

தல விருட்சம்:- மருத மரம்

தீர்த்தம் : அயிராவணத்துறை, காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம்

 

வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர் ,சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்த்தேவர், பரணதேவ நாயனார், பட்டினத்தார் , சேக்கிழார்.

 

திருவிடைமருதூரில்  மகாலிங்கேசுவரர் வழிபட்டால் ஒரு மனிதனின் தலைமுறை சாபம் நீங்கும் என்பது ஐதீகம்.இந்த சிவாலயம் 1200 ஆண்டு பழமையானது. இந்த கோயிலில் மருத மரம் தல விருட்சமாக கொண்டுள்ளது. மருத மரத்தை தல விருட்சமாக 3 கோயில்கள் மட்டும் கொண்டிருக்கின்றன. வடக்கே ஸ்ரீசைலம் எனப்படும் வடமருதூர், தெற்கே திருநெல்வேலி புடார்ச்சுனம் எனப்படும் திருப்புடை மருதூர். 3வது இந்த திருவுடைமருதூர்.மிக அழகான திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலைச் சுற்றிப் பார்க்க வேண்டுமானால் குறைந்தபட்சம் மூன்று மணிநேரமாவது ஆகும். இக்கோயிலில் உள்ள மாடங்களும், ஒவ்வொரு பயன்பாட்டிற்காக கட்டப்பட்டதாகும். நான்கு புறமும் நான்கு கோபுரங்களுடன் நுழைவுவாயில்கள் உள்ளன. இவ்வூரின் எந்தத் திசையில், எந்தத் தெருவில் நின்று பார்த்தாலும் இக்கோயிலின் ராஜகோபுரம் தெரியும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கருவறையில் உள்ளது சுயம்பு லிங்கம். பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபடவேண்டிய கோயிலாகும். இக்கோயிலுக்குள் நுழைந்தால் வேறு நுழைவுவாயில் வழியாகத்தான் வெளியேற வேண்டும் என்பது ஐதீகமாகும்.

 

           கும்பகோணத்தில் இருந்து 9 கி. மீ. தொலைவில்

அமைந்துள்ளது.

திரு. ராஜா குருக்கள் - 9443093103

 

2)    திருவெண்காடு 

 

சுவேதாரண்யேசுவரர்

பிரமவித்யாநாயகி

தல விருட்சம் – வடஆலமரம்

தீர்த்தம் - முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்) .

 

 சம்பந்தர்அப்பர்சுந்தரர்மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல்பெற்ற சிவாலயமாகும்.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது திருவெண்காடு சமயக்குரவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் மாணிக்கவாசகர் என நால்வராலும் தேவரப் பாடல் பெற்ற தலம். அதோடு நவகிரக ஸ்தலங்களில் புதன் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் நம்முடைய 21 தலைமுறைக்கும் ஏற்பட்ட பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை. திருவெண்காடு ருத்ரபாதத்தை யார் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசிக்கு போய் தரிசித்த பலனைக் காட்டிலும் மூன்று மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோயிலில் உள்ள புதன் பகவானை தரிசித்தால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பந்து, திருமணம், செல்வச்செழிப்பு, கலைத்துறையில் உயர்வு என எட்டு வகையான அதிகாரங்கள் தேடிவரும்.

 

இது சீர்காழியிலிருந்து சுமார் 12கி.மீ. தொலைவிலும், பூம்புகாருக்கு அருகிலும் அமைந்துள்ளது.

 

திரு. கீர்த்திவாசன் - 9003049392

 

3)    மயிலாடுதுறை 

 

           மாயூரநாதர்

அபயாம்பிகை

தல விருட்சம் – மாமரம், வன்னி மரம்

தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், ரிஷப தீர்த்தம் மற்றும் அகஸ்திய தீர்த்தம்

 

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடியது.

 

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது பழமொழி.பாவங்களை போக்கும் காசிக்கு இணையான தலம்.மயூரநாதர் சுயம்பு மூர்த்தியாகவும், அபயாம்பிகை அம்பாள் இங்கு தவம் செய்த மயில் வடிவில் காட்சியளிக்கிறார்.அம்பிகை மயில் உருவத்தில் பூஜை செய்த தலங்கள் இரண்டு. ஒன்று திருமயிலாப்பூர். மற்றொன்று பல்வேறு பெருமைகளையுடைய திருமயிலாடுதுறை.திருக்கோயில் நிலை ராஜ கோபுரம் மாநிலத்திலேயே மிக உயரமானது.மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன.மயிலாடுதுறை காவேரி நதிக்கரையோரம் உள்ள விஷ்ணு கட்டத்தில் துலா மாதத்தின் (ஐப்பசி) கடைசி நாளும் கார்த்திகை முதல் நாளும் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்.

 

 

 

 

 

 

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறைக்கு 37 கிமீ தூரம் உள்ளது.

 

கணபதி சுப்பிரமணிய குருக்கள் - 9964995666

 

4)    திருவையாறு 

 

ஐயாறப்பர்

அறம்வளர்த்தநாயகி (வடமொழியில் தர்மசம்வர்தினி)

தல விருட்சம் -வில்வம்

தீர்த்தம் - சூரியபுட்கரணி, காவிரி

 

 

திருவையாறு ஐயாறப்பர் கோயில் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் காவிரி கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மண் லிங்கம் ஆகையால் ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமானின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்குநோக்கி, ‘ஐயாறப்பா' என்று சொன்னால் ஏழுமுறை எதிரொலிக்கும் அற்புதத் திருத்தலம் இது. இத்தலம் பூலோக கைலாயம். இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம்

 

கும்பகோணத்திலிருந்து 33 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.

 

5)    திருவாஞ்சியம்

 

          வாஞ்சிநாதசுவாமி 

           மங்களநாயகி.

           தல விருட்சம்- சந்தன மரம்

           தீர்த்தம் : குப்த கங்கை,யம தீர்த்தம்.

          

           சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் பாடியது.

            ஒருவருக்கு மரண பயம் வந்துவிட்டால் எவராலும் அவரை       தகர்க்க முடியாது. மரணத்தை விடவும் கொடியது மரண பயம் அத்தகைய மரண பயத்தை எமபயத்தை அடியோடு போக்குகிறது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாஞ்சியம் கோயில்.இத்தலத்தில் இறைவன் ஸ்ரீவாஞ்சிநாதர் அம்பாள் ஸ்ரீமங்களநாயகியுடன் காட்சியளிக்கிறார். ஸ்ரீமஹாலட்சுமி ஸ்ரீமஹாவிஷ்ணுவை அடைய வேண்டி இங்கு வந்து சிவபூஜை செய்து விருப்பம் நிறைவேறியதால் திருவாஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.நவதீர்த்தங்களைக் கொண்டுள்ள இக்கோயிலுக்கு வந்து இங்குள்ள குப்த கங்கையில் நீராடி ஸ்ரீவாஞ்சிநாதரையும், எமதர்மனையும் வழிபட்டால் சகல நோய்களும் நீங்கி நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோயிலில் உள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார்.

 

          மயிலாடுதுறையிலிருந்து 25 கி.மீ. 

          கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் இத்தலம்    

           அமைந்துள்ளது

            சுவாமிநாத குருக்கள் - 984218150

 

 

 

6)    சாயாவனம்

 

சாயாவனேஸ்வரர்

குயிலினும் இனி மொழியம்மை

தல விருட்சம்- கோரை

தீர்த்தம் - காவிரி, ஐராவத தீர்த்தம்

 

சம்பந்தர், அப்பர் பாடியது.

 

நாகை மாவட்டத்தில் காவிரிக்கரையில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்பதாவது கோயில் சாயாவனம் என்னும் சாயாவனேஸ்வரர் கோயில் ஆகும்.சிவன், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் சாயாவனேஸ்வரரை மூலவராக கொண்ட இந்த திருக்கோவில், ஏனைய பல கோயில்களைப் போல, இங்கே ராஜ கோபுரத்திலிருந்து நேரே நடந்து கருவறைக்கு போக முடியாது. ஏனெனில், இது "யானை ஏறிப் புக இயலாத" மாடக்கோயில் வகை கட்டிட கட்டமைப்பு கொண்டதாகும்.பழங்காலம் தொட்டே இந்திர விழா என்னும் பெயரில் சித்ரா பௌர்ணமி விழா 21 நாட்கள் நடைபெறும். சோழ மன்னன் கோச்செங்கண்ணன் தன்னுடைய நாட்டில் யானை புகாத வகையில், மாடக் கோயில் என்னும் எழுபது சிவன் கோயில்களைக் கட்டினான். அதில் இக்கோயிலும் ஒன்றாகும

 

 

திருவெண்காட்டிற்கு அருகில் (சுமார் 3 கி.மீ) சாயாவனம் கிராமத்தில் இத்தலம் உள்ளது. 

 

          சந்திரசேகர சிவாச்சாரியார் – 9443107069   

          சிவா - 917606969

 

 

 

 

 

 



Recent Posts

See All
Sri Jagadguru Satya Chandrashekarendra Saraswathi Ashtakam

श्री-जगद्गुरु-सत्यचन्द्रशेखरेन्द्र-सरस्वत्यष्टकम् श्रीकामकोटिपीठस्य शोभां वर्धयितुं भुवि । अवतीर्णं गुरुं वन्दे सत्यश्रीचन्द्रशेखरम् ॥१॥ मोक्षपुरीति प्रथितायां महिमान्वितायां काञ्चीपुर्यां साक्षात् पर

 
 
 

Comments


bottom of page