Sri Periyava's Temple Visit - Chennai
- Thanjavur Paramapara
- 2 days ago
- 1 min read
ஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் பூஜ்யஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்கந்தர் சஷ்டி- சஹஸ்ர குமார போஜனம் நிகழ்ச்சியினை ஒட்டி 25, 26-11-25 ஆக இரண்டு நாட்கள் விஜயமாக சென்னை வருகை தந்தபோது, நகரில் பெஸண்ட் நகர் அறுபடை கோவில் மற்றும் மஹாலட்சுமி கோவில் ஆகிய இரண்டு கோவில் நிகழ்சிகளில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள் . அப்போது மேற்படி இரண்டு கோவில்களிலும் ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக இருந்தவரும் ஒரு நூற்றாண்டு காலம் இப்பூ உலகில் வாழ்ந்தவருமான ஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களது முயற்சியினாலும் ஆசியினாலும் “சென்னையில் அறுபடை வீடுகள்” என்பது போல் ஆறுபடை வீட்டு முருகனுக்கும் தனித்தனியே ஆறு சந்நிதிகள் கொண்ட ஓரு கற்கோயில் கட்டப்பட்டு 1983ல் முதல் சந்நிதிக்கு கும்பாபிஷேகம் நடைப்பெற்றதை தொடர்ந்து மற்ற சந்நதிகளும் கட்டப்பட்டு 2016ல் மாபெரும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது என்பதை இன்று இக் கோவிலை தரிசிக்க வந்த ஶ்ரீ ஸ்வாமிகள் தனது அருளுரையில் நினைவு கூர்ந்தார்கள். இச்செய்தியின் முழு விவரமும் கோவிலில் உள்ள கல்வெட்டில் உள்ளது. இச்செய்தியினை தஞ்சாவூர் பரம்பராவில் பதிவிட்டு ஆவணப்படுத்துகிறோம்.



29-1-1993ல் கருங்கல் கட்டிடமாக முதல் சந்நிதியான ஸ்வாமிமலை ஶ்ரீ ஸ்வாமிநாத சந்திதிக்கு “ நிர்மாணத் திருப்பணி” தொடங்கப்பட்ட விவரங்களைத் தெரிவிக்கும் சிலாசாஶனம்.



Comments