Sri Periyavas Thandalam Visit
- Thanjavur Paramapara
- 4 days ago
- 2 min read
ஶ்ரீ குருப்யோ நம:
ஶ்ரீ காஞ்சி காமகோடி 70 ஆவது பீடாதிபதி சங்கராச்சாரியார் கடந்த மூன்று தினங்களாக சென்னை புறநகர் பம்மல் சங்கரா மேல்நிலைப் பள்ளியில் ஶ்ரீ சந்தரமெளலீஸ்வரர் பூஜை முதலானவற்றுடன் பல்லாயிரக் கணக்கான சென்னை வாழ் பக்தர்களுக்கு தரிஸனம் தந்தார்கள. 5-7-25 மாலை ஆவடியில் தங்கி இன்று (6-7-25) காலை ஆவடி அருகில் ஊர்ர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, ஶ்ரீ ஸ்வாமிகள் பள்ளிப் பருவத்தில் பூர்வாஸ்ரம பெற்றோருடன் வாழ்ந்து வந்த தண்டலம் கிராமம் நோக்கி பயணித்தார்கள். வழியில், திருப்பதியிலிருந்து வருகை தந்த 71 ஆவது பீடாதிபதிகளும் ஶ்ரீ பெரியவாளுடன், பெரியபாளையம் நகர் எல்லையில் சேர்ந்து கொண்டார்கள். அது சமயம். பொதுமக்களின் ப்ரும்மாண்ட மான, வாண வேடிக்கை, பூரணகும்ப மரியாதையுடன் மேள தாளம் தாரை தப்பட்டை எக்காளம் முதலிய வாத்தியங்கள் முழங்க வரவேற்புகளை அளித்தார்கள். இரு பெரியவர்களும் சேர்ந்து தண்டலம் நோக்கி பயணித்தார்கள். தண்டலம் கிராமத்தில் ஶ்ரீ சங்கராச்சாரியார் ஸவாமிகள் இருவருக்கும் மேள தாள வாத்தியங்கள் முழங்க பூரண கும்ப மரியாதைகளுடன் மிகச் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலையில் மண்ணின் மா மைந்தரான ஶ்ரீ சங்கராச்சார்யார்களை மிகுந்த மரியாதையோடும் பக்தியோடும் பரிவோடும் ஏன் சற்றே உரிமையோடும் கூட, நீண்ட வருடங்களுக்குப் பிறகு பூஜைகளோடு நம் ஊருக்கு வருகை தரும் “ நம்ம ஆச்சார்யாள்” எனும் பாசத்தோடும் மகத்தானதொரு பட்டினப்ரவேசம் எனும், நகர்வலத்துடன் கூடிய வரவேற்பினை வண்ண வண்ண வாண வேடிக்ககளுடன் கெளரி காளை வாத்தியத்துடனும் கொம்பும் கொட்டு முழக்கும் சேர தாரை தப்பட்டை வாத்தியங்களுடனும் மாபெரும் வரவேற்பு அளித்து “ ஶ்ரீ காமகோடி பீடாதிபதிகள் திவ்ய சரித்திரத்தில் இடம் பெற்றார்கள். ஶ்ரீ ஆச்சார்யள் இருவரும் திறந்த கூரையோடு காரில் புன்னகை தவழும் முகத்துடன் தொடக்கம் முதல் நின்றே பயணித்து சாலையின் இருபுறமும் வரிசையாக நின்ற அனைத்து மக்களுக்கும் தரிசனம் தந்தார்கள். மக்களும் தாமரை மல்லி, சம்பங்கி சாமந்தி என வண்ண வண்ண மலர் மாலைகளையும் ஏலக்காய் மாலைகளையும் அற்புதமாய் செதுக்கினாற்போல் கட்டப்பட்ட மல்லிகை கிரீடங்களையும் பல்வகை பழங்களுடன் சமர்ப்பித்தார்கள்.சமர்ப்பிக்கப்பட்டகிரீடங்களையும் மாலைகளையும் இன்முகத்தோடு தானும் அணிந்து கொண்டு தமது இளவலுக்கும் தானே தன்கையால் வாஞ்சையுடன் அணிவித்து மகிழ்ந்தது கண்கொள்ளா காட்சி. இது மட்டுமல்லாது உடன் வந்த ஊர் பெரிய மனிதர்கள் ஒவ் வொருவரையும் நினைவுடன் அவரவர் பெயர்களைச் சொல்லி அருகே அழைத்து தான்அணிந்து கொண்ட மாலைகளை அவர்களுக்கு ப்ரஸாதமாக அளித்து தானும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்வித்தார், ஶ்ரீ ஸ்வாமிகள். ஊர்வலத்தில் உள்ளூர் ப்ரமுகர்களுடன், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஶ்ரீ எஸ். குருமூர்த்தி அவர்கள் தம் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள். ஶ்ரீ ஸ்வாமிகள் பயணித்த திறந்த காரினை வேத கோஷங்களுடனும் விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்லிக் கொண்டு வேதியர்களும், பாடசாலை மாணவர்களும் பின் தொடரந்து வந்தனர்.

பூஜ்யஶ்ரீ பெரியவா அவதார ஸ்தலத்தில் புதுப் பெரியவாளுடன் இன்று மாலை பட்டினப்ரவேஸம் எனும் நகர்வலம்

Comments