Sri Ramanar's Shishyar
- Thanjavur Paramapara
- Jul 4
- 1 min read
தேவராஜ முதலியார் அரசாங்க வக்கீலாகப் புகழ்பெற்று விளங்கியவர்
இவர் பகவான் ஸ்ரீ ரமணரின் ஆரம்பகாலச் சீடராவார்
இவர் ஒரு நாள் பகவானிடம் ஒரு சந்தேகம் கேட்டார்

பகவானே அருணாசல மகாத்மியத்தில்
இந்த அருணாசலத்தைச் சுற்றி மூன்று யோசனை தூரத்திற்குள் வசிப்பவர்களுக்கு
நான் அவர்களது பாவங்களை எரித்து
அவர்களுக்கு மோக்ஷம் அளிக்கிறேன்
இங்கு வசிப்பவர்களுக்குக் குரு மூலம் தீக்ஷை பெற வேண்டிய அவசியமும் இல்லை
இது எனது ஆணை
என்று சிவபெருமான் வாக்காகக் கூறப்பட்டிருக்கிறதே
இது உண்மையாகவே சரிதானா ?
அதற்குப் பகவான் புன்முறுவலித்தபடி கூறினார்
முதலியார்வாள் !
இது சுப்ரீம் கோர்ட்டிலிருந்து வந்திருக்கும் தீர்ப்பு
இதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை
இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு கீழ்ப்படிய வேண்டியது தான்
சாக்ஷாத் சிவபெருமானை 'சுப்ரீம் கோர்ட்' என்று பகவான் வருணித்ததை முதலியார் மிகவும் சிலாகித்தார்
அவர்தான் அரசாங்க வக்கீல் ஆயிற்றே பகவானுடைய இந்த பதில் அவருக்குப் பரம திருப்தியை அளித்தது.




Comments