top of page

சர். திருவாரூர் முத்துசாமி ஐயர்

கும்பகோணம்... 1880. ம் வருடம் ராவ் பகதூர் சாது சேஷய்யரின் மகளின் நான்கு நாள் திருமண வைபவம் விமர்சையாக, பவிஷாக நடந்து முடிந்தது.


5 ம் நாள்..... திருமணம் முடிந்ததும் , பல ஊர்களில் இருந்து வந்திருந்த , உத்யோகஸ்தர்கள் , சப் ஜடஜ்கள், , டெபுட்டி கலெக்டர்கள். , முன்சீப்கள, தாசில்தார்கள், பிரபுக்கள், ஜமீன்தார்கள்.. யாரும் தத் தம் ஊர் கிளம்பிய பாடில்லை ..... , ஏன்?


சென்னை ஹைக்கோர்ட்டின் முதல் இந்திய ஜட்ஜ், Chief ஜஸ்டீஸ் ஸ்ரீ. சர்.தி. முத்துசாமி ஐயர் KCIE, கல்யாணம் விசாரிக்க வரப்போகிறார் என்ற விஷயம் தெரிந்ததாலும்.. . அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினாலும் தான்.. ..


அந்தக் காலத்தில் அவர் புகழ் தமிழ் நாடு முழுவதும் பரவி இருந்தது.


அவர் பரம ஏழையாக இருந்ததையும், , சிறு வயதிலேயே தந்தை, தாயை இழந்து...

அனாதை ஆகி... கிராமத்தில் கணக்குப்பிள்ளை வேலை பார்த்துக் கொண்டே... மதியம் பள்ளியிலும்... இரவு முழுவதும் தெரு விளக்கு கம்பத்தின் கீழ் இருந்து படித்ததும்,


பிறகு மெட்ரிக்குலேஷன், பிளீடர், சட்டப் படிப்பில், சமஸ்கிருதத்தில் மானிலத்திலேயே முதலாவதாக தேர்வு பெற்றதையும்.. கதை கதை யாகச் சொல்லு வார்கள்.


படித்தால் முத்துசாமி ஐயர் போல் படிக்க வேண்டும் என்பார்கள்.


இவர் சட்ட மேதமை , திறமை, நேர்மை முதலியவற்றைப் கவனித்த அரசாங்கம் இவரை 1877 to 1895 வரை சென்னை ஹை கோர்ட் முதல் இந்திய ஜட்ஜ்... சீஃப் ஜஸ்டிஸ்,.. பிறகு சர் பட்டம்,, கொடுத்தும் கௌரவித்தது.


அவர் ஜட்ஜ் உத்யோகம் பார்த்து வரும் திறமை, சட்ட ஞானம், புத்திகூர்மை,

ஆங்கிலம், லத்தீன் புலமை. பேராற்றல், மன உறுதி, டிஸிப்ளின். .. அடக்கம்,......


தன்,ஜட்ஜ்மென்றுகளை தன் கைப்படவே எழுதும் நேர்த்தி


இவற்றைப் பற்றி எல்லாம் பலர் பல விதமாக பாராட்டுவார்கள்.


இவ்வளவு உயர்ந்த உத்யோகத்தில் இருந்தாலும் , இவர் தன் வைதீகம், சந்தியா வந்தனம் முதலிய ஒழுக்கங்களை விட வில்லையாம் என்றார் ஒரு வைதீகர்.


பழைய ஏழ்மையை மறக்க வில்லையாம்,


தன் இளமையில், சென்னையில் பிரசிடென்சி கல்லூரியில் படிக்க உதவிய தாசில்தார் முத்து சாமி நாயக்கர் முதலிய சிலரைப் பற்றி, மறக்காமல். அடிக்கடி நன்றி யோடு குறிப்பிடுவாராம்,


தனக்கு உதவிய பலருக்கு பல விதத்தில் உபகாரம் செய்கிறாராம்


"சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் அமரும் இடம் பழைய கோயிலில் மூலஸ்தானம் என்று அவருக்குத் தெரிந்து நீதிமன்றத்திற்கு உள்ளேயே அவர்செருப்பே அணிந்து

வரமாட்டாராம்",..என்றார் ஒரு ப்க்தர்


"பெண் கல்விக்கு உழைப்பவர், கேரளத்தின் சம்பந்தம் முறையை, சீர் திருத்தியவர், பிராமணப் பெண்களுக்காக விதவா விவாக அஸோஷியேஷன் அமைத்துள்ள சீர் திருத்த வாதி." .. எனக்கூறினார் ஒரு சமூக பிரக்ஞை ஆசாமி.

தெயவாம்சம் உள்ளவர் என்றனர் சிலர் .


இப்படிப்பட்டவரை பார்க்காமல் போக லாமோ?...


அவர் எப்படி இருப்பார், நடப்பார், உடை உடுத்தி இருப்பார்... , பழகுவார் பேசுவார்? என அறிய எல்லோருக்கும் ஆர்வம்.....


பிற் பகல் அவரை ரயில் நிலையத்தில் இருந்து வரவேற்று, அழைத்து வந்தனர்.


வந்து.... பந்தல் நடுவில் அமைத்திருந்த மேடையில், போடபட்டிருந்த நாற்காலியில் அமர வைத்தனர் ...


அவருடைய ஆஜானுபாகு உருவமும், வெள்ளை தலைப்பாகை, நெடுஞ்சட்டை, இடையில் தூய வெள்ளை வஸ்திரம், பஞ்சக்கச்சமாக.. , காலில் "பாப்பாஸ்" ஜோடு. கையில் ஒரு பிரம்பு,


ஆஜானுபாகுவான அவர் உருவத்தில் ஒரு தனி ஒளி, சிறப்பு, தூய்மை, எளிமை, தனிக்களை, கம்பீரம்.ஒரு ஆகர்ஷணம்.

இருந்தது.


அவர் வெள்ளைக்காரர் போல் கோட்டு, சூட்டு அணிந்திருப்பார் என பலர் நினைத்திருந்தனர், அவருடைய எளிய உடை அவர்களை வியப்படைய வைத்தது.


கூட்டம் அவரை யே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தது.


அப்போது கூட்டத்தில் இருந்த "ஷாப்பு ராஜப்பையர்" என்ற முதியவர், படித்தவர்... . திடீர் என எழுந்து மேடையை நோக்கி விடு, விடு என நடக்க ஆரம்பித்தார்.


அதைப்பார்த்து சிலர்,


"இந்த முந்திரிக்கொட்டை கிழம் எதற்க்காக அங்கே போகிறது, இதற்க்கு தான் என்ன துணிச்சல்" .? முத்துசாமி ஐயர், ஒரு Disciplinarian , அவர்க்கு முகம் மாறும், கோபம் வரும்".


என்று இவரை மெதுவாக, திட்டித் தீர்த்து , தடுக்கப் பார்த்தனர்,


இவரோ..தடுக்கத்தடுக்க . மீறி மேடை ஏறி விடுகிறார்,


எல்லோருக்கும் ஒரு பயம் பட படப்பு.


இவரை முத்துசாமி . ஐயர் முதலில் கவனிக்க வில்லை, பிறகு கண்ணில் பட்ட ஷணமே.. அவர் , முகம் மலர்ந்தது,


"ராஜப்பையர்வாளா? வாருங்கோ, வாருங்கோ,.வாருங்கோ சௌக்கியமா? உட்காருங்கோ" , என தன் இருக்கை விட்டு எழுந்து நின்றார் .


உடனே.. இன்னெரு நாற்க்காலி வந்தது, முதிய ராஜப்பையர் உட்கார்ந்த பிறகு தான் ஜட்ஜ் முத்துசாமி ஐயர் உட்கார்ந்தார்.


ராஜப்பையரைப் பற்றி தாழ்வாக எண்ணி இருந்தவர்கள் எல்லாம் இதைப்பார்த்து பிரமித்துப் போய் விட்டனர்.


அந்த முதியவர் உட்க்கார்ந்து, பேச ஆரம்பித்தார்.

"உங்களை பார்த்ததிலும், சென்னைப்பட்டணத்தில் நீங்கள் உயர்ந்த பதவி வகிப்பதிலும், இந்த ராஜதானி முழுவதும் எல்லோருக்கும் சந்தோஷம்......நம் தஞ்சை ஜில்லாவில் பிறந்த நீங்கள் உலகமெல்லாம் கொண்டாடும் படி இருப்பதை எண்ணிப் பூரிக்கிறார்கள்,


" தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் இனிது"....... . (தன்னை விட தம் மக்கள் கல்வியறிவு உடையவராயிருத்தல், (பெற்றோர்க்கு மட்டும் அல்லாது) உலக மக்கள் எல்லோருக்கும் இன்பம் பயப்பதாகும்)


என்று திருவள்ளுவர் நாயனார் சொல்லியிருப்பது உங்கள் விஷயத்தில் பிரத்தியஷமாகப் பார்க்கிறோம்" ..... என பேசிக்கொண்டே போனார்..

.

அவர் பேசி நிறுத்தியதும், மலர்ந்த முகத்துடன் முத்துசாமி ஐயர்,


"ராஜப்பையர்வாள் நீங்கள் சொன்னீர்களே.. ஒரு குறள் அதற்க்கு அடுத்த குறள் இந்த உங்கள் உரைக்கு சரியான நன்றியுரையாகும்" ,என வினையத்துடன் சொன்னார்


யாருக்கும் அந்தக் குறள் சட் என நினைவிற்க்கு வர வில்லை


பின்பு அவரே..... " ஈன்ற பொழுதிற் பெரிதுஉவற்க்கும் தன்மகனை.. சான்றோன் எளக்கேட்ட தாய்"... அல்லவோ அடுத்த குறள்,


ஒரு தாய் பிள்ளையை பெறும் போது அடையும் மகிழ்ச்சியை விட அவன் கல்வி நிறைந்தவன் என சான்றோர் வாய் கேட்க்க அவள் அவனை பெற்ற பொழுதில் அடைந்த மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சி அடைவாள் என்பது தானே பொருள். ,

தஞ்சை ஜில்லா எனக்கு பெற்ற தாய்... ..

அவளே என்னை வழி நடத்துபவள், என் செயல்கள் அவளை மகிழ்விக்க வேண்டும்.. எனக்கு சிறப்பு ஏதும் உண்டானால் அது இந்த தஞ்சை ஜில்லா தாயாலும் , உங்களைப் போன்ற,கற்றோர் பெரியவர்களின் ஆசியும், சல்லாபமும் தான் காரணம்"என்றார்...


அவர் தழிழ், அறிவும், அடக்கமும், பண்பும், தன் பெருமை பேசாமல், தன்னை தாழ்த்க்கொண்டு பிறறரை உயர்த்தி பேசியதும்,


சந்தற்ப்பத்திற்க்கு ஏற்றபடி சுருங்கக்கூறி விளங்கும் திறமையும் அவர் எத்தகைய அறிஞர் என்பதை கூடி இருந்தவர்களுக்கு சில நிமிடத் துளிகளிலேயே விளக்கி விட்டது. ,


புறகு அவர் முதிய ராஜப்பையரை கை பிடித்து, மேடையில் இருந்து இறக்கி விட்டு விடை பெற்று மாயூரம் சென்றார்.

**

அவர், சென்னை ராஜதானி சீஃப் ஜஸ்டிஸ், அவருடைய "தனிப்பட்ட" அலுவல் அறை.... பெரிய ஹால், பெரிய, பெரிய மேஜை, நாற்காலிகள் இருக்கும், அதில் அமர்ந்துதான் வேலை பார்பார் என நினைத்தால்,....


ஹால் மேஜை, நாற்காலிகள் இருந்தன, ஆனால்..... அவர் மிக எளிமையாக தரையில் கோரைப்பாயில், ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்தபடி, எதிரில் ஒரு கை மேஜை,சுற்றிலும் சிறிய, சிறிய காகிதக் குறிப்புக்கள்.... நாலைந்து பென்சில்கள். பல புத்தகங்கள், தனியாக ஒரு காகிதத்தில் கட்டைப் பாக்கு சீவல்... இப்படி அமர்த்து தான் வேலை பார்ப்பாராம்...

முத்துசாமி ஐயர், எங்காவது பிரசங்கம் செய்யப் போகும் போது, முன்பே நன்கு பல நூல்களை ஆராய்ந்து, குறிப்பெடுத்துக் கொண்டு தான் போவார்கள், அங்கு.... அவர் பேச்சு தீர்க்கமாக இருக்கும்.


தமிழுக்கும பல உதவி கள் செய்தாராம்


அவர் 25 ஜனவரி 1895 இல் மறைந்தார்


இந்தியாவின் முதல் இந்திய ஹைக்கோர்ட் நீதிபதி, chief justice, முதல் பளிங்குச் சிலை, "வெறுங்காலுடன். "வைக்கப்பட்ட இந்தியர், என பல பெருமைகளுக்கு உரியவர் சர். திருவாரூர் முத்துசாமி ஐயர் அவர்கள்...


வாழ்க அவர் புகழ், வந்தே மாதரம்


From multiple sources, + உ. வே. சா நினைவு மஞ்சரி

56 views0 comments

Comments


bottom of page