top of page

ஶ்ரீ ஶ்ரீனிவாசன் பக்கங்கள் - 02 May 2024

02/05/2024

காஞ்சி மடம் முகாம்

காஞ்சிபுரம்

இன்று காமாக்ஷி அம்மன் கோவில் செல்ல ஒரு பெரும் பாக்கியம் கிடைத்தது. காஷ்மீர் பண்டிதர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வந்திருந்தார்கள். அவர்களுடன் செல்லும் பாக்கியம் கிடைத்தது.

நேற்று காமாக்ஷி அம்மனுக்கு சந்தன அலங்காரம் செய்து இருந்தார்கள். கண்ணிற்கும், புருவத்திற்கும் மை இட்டு அலங்கரித்து இருந்தார்கள். அந்த மை , காமாக்ஷியின் புகழ்பெற்ற கண்ணின் அழகை குறைக்காமல், மெய்படுத்திக் காட்டியது. அலங்காரம் ஒரு கலை மட்டுமல்ல. அதில் பக்தி கலந்து இருக்கும் போது, அழகின் ஸ்வரூபமான

இறைவனையே மயக்க வைத்து விடுகிறது. அதனால் தான் என்னவோ, கள்ளன் காமாக்ஷி கோவில் உள்ளே இருப்பதாகக் நான் புரிந்து கொண்டு.

அலங்காரத்தில் ஒரு அழகு. அந்த அழகில் ஒரு பக்தி. அந்த பக்தியில், நான், எனது என்று இல்லாத நிலை.

காமாக்ஷியின் கண்ணைப் பார்த்து, நாம் ஆனந்த லஹரியில் லயிக்கும் போது,நம்மை ஸ்தானிகர்கள் எழுந்து கொள்ள வேண்டும் என்று கூறினால்,நாம் வேறு ஒரு உலகத்தில் இருப்பதை உணர முடியும்.

கண்ணைக் கண்ட விழிகள், சந்திரன் முடிசூடா மன்னனாக இருப்பதை நாம் பார்த்து ஆனந்தம் அடையும் முன்னே,பக்தர்களின் கூட்டம், நம்மை முன்னே வெளி செல்ல நிர்பந்தம் ஏற்படுத்தும்.

காமாக்ஷிக்கும், சிவனுக்கும் பிறைச் சந்திரன் இருப்பது ஒரு வினோதமான ஒன்று. இருவரும் சந்திரக் கலையை அணிந்து கொண்டு இருப்பது ஒரு ஆனந்த லஹரி என்றே கூற வேண்டும்.

சிவானந்த லஹரியில்,ஆதி சங்கரர் " சூடா3லங்க்ருத – சசிகலாப்4யாம் " என்கிறார். சிவன்,பார்வதி இருவருமே அணிந்து உள்ளார்கள்.

காளிதாசர் சிவன் பார்வதி வார்த்தை, பொருளாக உள்ளார்கள் என்கிறார். அதனால் தான் என்னவோ, சிவன், பார்வதி இருவருமே சந்திரனை அணிந்து உள்ளார்கள்.இல்லை காமாக்ஷியின் இடது பாகத்தில் காமாக்ஷி ஈஸ்வரனாக உள்ளானோ?;அவனின் சந்திரப் பிறையோ?

9 views0 comments
bottom of page