05.03.2021 வெள்ளிக்கிழமை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் ஸ்ரீபாலப்பெரியவர் அவதார ஸ்தலத்தில் கோபூஜை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஊர்மக்கள் அவரவர் வீட்டு பசுமாடு கன்றுக்குட்டியுடன் அழைத்துவந்தனர். இருபத்தோரு பசுமாடுகளுக்கு தண்டலம் வேதபாடசாலை வளாகத்தில் பூஜை வேதவிற்பன்னர்களால் நடத்தி வைக்கப்பெற்றது. ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி பசுக்களின் மஹிமைகள் பற்றிய விளக்கினார். ஸ்ரீ.ஸ்ரீதர்ஜி அவர்கள் ஆலோசனைகளுடனும், கிராமப்பொதுமக்களின் மிகச்சிறப்பான ஒத்துழைப்புடனும் ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்துடனும் கோபூஜைை விசேஷமாக நடந்தேறியது.இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர்கள் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன், ஸ்ரீ.வெங்கட்ராமன் (ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா)ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
Comments