top of page

பூஜ்யஶ்ரீ பெரியவாளின் விஜய யாத்திரை -காஶி முகாம்(தொடர்ச்சி.)



பூஜ்யஶ்ரீ பெரியவாளின் விஜய யாத்திரை -காஶி முகாம்

இன்று 7.7.2023 வெள்ளிக் கிழமை காலை சுமார் 9.00 மணிக்கு ஸ்நானாதி அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டவராக, ஶ்ரீ சந்திரமெளலீஸ்வரர் பூஜைக்கு அமர்ந்துவிட்டார்கள். இரண்டு கால பூஜையை முடித்துக் கொண்டு சாதுர்மாஸ்ய சங்கல்பத்துக்காக 11.30 மணி வாக்கில் ஶ்ரீமடம் ஆதிசங்கரர் சந்நிதிக்கு வந்தார்கள். த்வாரகா பீடாதிபதி பூஜ்ய ஶ்ரீ சொரூபானந்த சரஸ்வதி ஸ்வாமிகளிடம் சன்யாஸாஶ்ரமம் ஸ்வீகரணம் பெற்ற பூஜ்யஶ்ரீ அமிர்தானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் ஶ்ரீ பெரியவாளின் தரிஸனத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களும் சங்கல்பத்தில் கலந்து கொண்டார்கள். பூர்வாஸ்ரமத்தில், இவர்கள், சகல சாஸ்திர சம்பன்னரவார். உள்ளூர் பண்டிதர்கள், ப்ரும்ம ஶ்ரீ கணேஶ சாஸ்திரி த்ராவிட் போன்ற முக்யஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஶ்ரீபெரியவா சாதுர்மாஸ்ய வ்ரத சங்கல்பம் செய்தகொண்ட உடன் ப்ரும்மஶ்ரீ பரணீதர சாஸ்திரிகள் அர்ச்சனை முதலியவற்றை முடிக்க, ஶ்ரீ அமிர்தனந்த சரஸ்வதி ஸ்வாமிகள் குரு ஸ்தோத்திரங்களை வரிவரியாகச் சொல்ல கூடி இருந்த மஹா ஜனங்கள் வாங்கிச் சொன்னார்கள்.

ஜகத்புரு பூஜ்யஶ்ரீபெரியவா, தம் சங்கல்பத்தின் பகுதியாக, “தாம் சாதுர்மாஸ்ய வ்ரதம் பூர்த்தி ஆகும் வரையில், இந்த இடத்திலேயே இருப்பதாகத் தெரிவித்து, அதற்கான ஸ்லோகங்களைச் சொன்னார்கள். அதற்கு கூடி இருந்த க்ருஹஸ்தர்கள், “செளகர்யமாக இங்கேயே தங்குங்கள், இதனால் நாங்கள் பாக்கியவான்களாவோம். எங்களால் இயன்ற சேவைகளை மகிழ்சியுடன் செய்வோம் என மறு மொழி அளித்தார்கள். (http://bit.ly/chaturmasyam-bhikshai yathi bikshavandanam. Chathurmasya pooja sankalpam explanation is in the pdf tamil with devanagari.)

இச்சமயத்தில் க்ருஹஸ்தர்களகிய நாம் நமது கடமைகளை உணர்ந்து யதிகளுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தும் பிக்‌ஷாவந்தனம் செய்வித்தும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். “யார் ஒருவன் விஷ்ணு ரூபியான சன்யாஸியை உபசரித்து பிக்‌ஷை கொடுக்கிறானோ, அவன் பூரா பூமியையும் தானம் செய்த பலனை விட அதிக புண்ணியத்தை அடைகிறான்” என்பது வாக்கும் வழக்கமுமாகும்”.

147 views0 comments

Comments


bottom of page