top of page

ப்ரஹ்மஸ்ரீ ஸ்வாமிநாத ஆத்ரேயர் - ஸம்ஸ்மரணோத்ஸவம்ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஶ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனுக்ரஹத்துடனும் பரனூர் மஹாத்மா ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளின் ஆஶீர்வாதத்துடனும் ஆக்ஞாநுஸாரம் காஞ்சீ ஸ்ரீ மட ஆஸ்தான வித்வானாக விளங்கிய "ஆஶுகவிதிலக" "ஸாஹிதீவல்லப" ப்ரஹ்மஸ்ரீ ஸ்வாமிநாத ஆத்ரேயர் அவர்களின் ஸம்ஸ்மரணோத்ஸவம் 2023 கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல் படி நடைபெறுகிறது


நாள் : ஶோபக்ருத் - கார்த்திகை 5உ - ஸதய நக்ஷத்ரம் - செவ்வாய்க்கிழமை (21 நவம்பர் 2023 )


இடம் : ஸம்ஸ்க்ருத கல்லூரி அரங்கம், மயிலாப்பூர், சென்னை


நிகழ்ச்சி நிரல்:


6.00 PM - காஞ்சீ ஸ்ரீமட ஸ்வஸ்திவாசநம்


6.05 PM - 6.15 PM : ஸ்ரீ த்யாகராஜ க்ருதி கானம் (சென்னை குமாரிகள் T.V.வித்யா மற்றும் T.V.அனுஷா)


6.15 PM - 6.30 PM : ஸ்ரீ ஆத்ரேயரின் படைப்புகள் - சிற்றுரை

(Dr. R. ஸுந்தரராமன் (ப்ரஹ்மஸ்ரீ ஸ்வாமிநாத ஆத்ரேயர் அவர்களின் ஶிஷ்யர்))


6.30 PM - 7.30 PM : ஸ்ரீ ஆத்ரேயரின் வாழ்வும் படைப்புகளும் - நினைவலைகள்


"மஹாமஹோபாத்யாய" ப்ரஹ்மஸ்ரீ Dr. R. மணித்ராவிட் ஶாஸ்த்ரிகள்

(பேராசிரியர், சென்னை ஸம்ஸ்க்ருத கல்லூரி)


ஸ்ரீ திருப்பூர் கிருஷ்ணன் (ஆசிரியர் - அமுதசுரபி)


தஞ்சாவூர் ஸ்ரீ N.ஸ்ரீநிவாஸன்

(ஸம்ஸ்க்ருத அறிஞர், ஸரஸ்வதீ மஹால் (ஓய்வு))


7.30 PM - 9.00 PM : ப்ரஹ்மஸ்ரீ ஆத்ரேயரின் க்ரந்தங்கள் - உபந்யாஸம்

(Dr. R. ரங்கன் ஜி அவர்கள், ஶ்ருதிராம் குருகுலம் மற்றும் ஸீதாலக்ஷ்மி குருகுல ஸ்தாபகர்)


9.00 PM - நன்றியுரை ( ஸ்ரீ சேது. ராமசந்த்ரன் I.A.S.(Rtd.) & Moderator, www.thanjavurparampara.com )


அனைவரும் வருக !


ப்ரஹ்மஸ்ரீ ஸ்வாமிநாத ஆத்ரேயரின் ஶிஷ்யர்கள்
About Brahmashri S.V.Svāminātha Ātreya


Brahmashri S.V.Svāminātha Ātreya was a great scholar of Sanskrit, Hindi and tamil literatures. Born to Simili Brahmashri. Venkatarama Sastrigal and Smt. V. Shankari on 19.11.1919, in the star kartigai sadayam, Brahmashri. Ātreyar was a student of Mahāmahopādhyaya S. Kuppuswami Sāstrigal and Mahāmahopādhyāya S. Dandapānisvāmi Dīkshita. He completed Samskruta siromani in vyākarana from Annamalai University and went on to secure first class in Indo European Philology. Swaminatha Ātreyar belonged to en era of Manikodi writers and his "Manikka veenai" stands testimony to it. He was a renowned creative writer and poet with a flair of dealing in Sanskrit of contemporary political and social life. He got married to Smt.S.Jayalakshmi. Ātreyar was a great Rama bhakta and wrote a number of books in tamil based on his divine ecstacy namely Tyāgarāja Anubhavangal, Sridhara Ayyavalin Nāma Anubhavangal, Nāma sāmrājyam, Bhakta sāmrājyam, Samartha Ramadasa charitram, and Jaya Jaya Hanuman. Brahmashri Ātreyar had an opportunity to listen to Umayalpuram Shri Swaminatha Bhagavatar and Embar Shri. Srirangachar, who were disciples of Saint Tyāgarāja Swamigal's direct disciples, regarding the anecdotes on Tyāgarāja kritis and he recorded 12 such anecdotes behind the evolution of compositions in his book Tyāgarāja Anubhavangal. He has translated "Tatva vivecani", a Hindi commentary of srimadbhagavadgita by Jayadayāl Goenka, Founder of Gita press, Gorakhpur into Tamil and the book was sold more than 4 lakhs copies so far. Brahmashri Ātreyar also translated Sri Rama charita mānasa of Gosvāmi Tulasīdasa into Tamil, which has been published by Bhagavannama publications, Chennai. He has also translated Nīlakantha dīkshitar's sivalīlārnavam and Rāmabhadra dīkshitar's Rāmabhadrasāhasramanjari into Tamil. As a reasercher, he had critically edited Sivarahsyam - Volume I (700 pages), Sivarahasyam - Volume II (400 pages), Ashwasāstram with English and Tamil translation (300 pages), and Sri Venkatesa vilāsa champu (300 pages). These books have been published by Saraswati Mahal library, Thanjavur. He wrote 100 shlokas based on his Ramānubhavam and published it as "Rāma Mādhurī". His "Antaryamyanusandhanam" and "Krishnarāma līlā" depict his devotion. He has also translated "Rama Ashtapadis" of Shri Rama kavi into Tamil and English. Shri Ātreyar has written a number of plays in tamil and sanskrit and noticeably "Mahākavi samāgamah", "Anurūpā" and "Trishankusvargah" in Sanskrit need a special mention. As a "A" grade artist of All India Radio, Brahmashri Ātreyar has given many talks on Sanskrit subjects and has produced many Tamil dramas.He also conducted a project of spoken sanskrit classes for the benefit of college professors at the Kuppuswāmi Sāstri Research Institute, Chennai for two years. The lessons have been published by the institute. He has published his writings in Sanskrit on kanchi Acharya's yatra to various kshetras as "Shri kanchi kamakoti pītha yaso laharī". Brahmashri Ātreyar was Astāna vidwan of Shri kanchi kamakoti pītham and he was awarded a title "Āshukavitilaka" by pujyashri shankaracharya Swamigal. He associated himself with Shri Krishnapremi Swamigal sangam and based on his various contribution to the devotional literature, Shri Krishnapremi Swamigal awarded titles namely "Tyāgarāja charanarenu" and "sahitya visārada" at Thanjavur. After making an indelible impression in the world of devotional literature through an unique style of his writings, Brahmashri Swaminatha Ātreyar reached bhagavaccharanam on 19.12.2013 at the age of 94.


ப்ரஹ்மஸ்ரீ S.V.ஸ்வாமிநாத ஆத்ரேயர் ஸம்ஸ்க்ருதம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார். அவர் 19.11.1919 கார்த்திகை ஸதயம் அன்று சிமிழி ப்ரஹ்மஸ்ரீ வேங்கடராம ஶாஸ்த்ரிகள் - ஸ்ரீமதி V.சங்கரி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். ப்ரஹ்மஸ்ரீ ஆத்ரேயர் "மஹாமஹோபாத்யாய" S.குப்புஸ்வாமி ஶாஸ்த்ரிகளிடமும் "மஹாமஹோபாத்யாய" S. தண்டபாணி தீக்ஷிதரிடமும் ஸம்ஸ்க்ருதம் பயின்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஸம்ஸ்க்ருத ஶிரோமணியிலும் பிறகு இண்டோயூரோபியன் மொழியியலிலும் தேர்ச்சி பெற்றார். ப்ரஹ்மஸ்ரீ ஆத்ரேயர் "மணிக்கொடி" கால எழுத்தாளர்களில் ஒருவராக மிளிர்ந்தார். அவரது "மாணிக்கவீணை" என்ற சிறுகதைத் தொகுப்பு அவரது எழுத்துநடையின் அழகுக்குக் கட்டியம் கூறும். அவர் பிரபலமான ஸம்ஸ்க்ருத எழுத்தாளராக அன்றைய சமூக அரசியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் படைப்பவராகவும் திகழ்ந்தார். அவருடைய மனைவி ஸ்ரீமதி S.ஜயலக்ஷ்மி உற்ற துணையாக இருந்தார். ஆத்ரேயர் அவர்கள் சிறந்த ராமபக்தர். தன்னுடைய ஆன்மீக அனுபவங்களைப் பல அருமையான தமிழ் நூல்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார். தியாகராஜ அனுபவங்கள், ஸ்ரீதர ஐயாவாளின் நாம அனுபவங்கள், நாம ஸாம்ராஜ்யம், பக்த ஸாம்ராஜ்யம், ராமநாமம், ஸமர்த்த ராமதாஸர் சரித்ரம், ஜய ஜய ஹநுமான் முதலியவை மிகச்சிறந்த படைப்புகள். ப்ரஹ்மஸ்ரீ ஆத்ரேயர் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகளின் நேரடி ஶிஷ்யர்களின் ஶிஷ்யர்களான உமையாள்புரம் ஸ்ரீ ஸ்வாமிநாத பாகவதரிடமும் எம்பார் ஸ்ரீ ஸ்ரீரங்காசாரிடமும் த்யாகராஜ கீர்த்தனங்கள் உருவான வரலாற்றைத் தெரிந்து கொண்டு ஒரு 12 கீர்தனங்களின் பின்னணியை தனது தியாகராஜ அனுபவங்கள் என்ற நூலில் வழங்கியுள்ளார். அவர் கீதாப்ரஸ் நிறுவனர் ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா அவர்கள் பகவத்கீதைக்கு எழுதிய ஹிந்தி மொழிபெயர்ப்பான "தத்வவிவேசநீ" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்து அந்நூல் தற்போது வரை நான்கு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகியுள்ளது. ப்ரஹ்மஸ்ரீ ஆத்ரேயர் கோஸ்வாமி துளஸீதாஸர் இயற்றிய "ராமசரிதமாநஸம்" என்னும் நூலையும் தமிழாக்கம் செய்து அந்நூலை சென்னை பகவந்நாமா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரின் "ஶிவலீலார்ணவம்" மற்றும் ஸ்ரீ ராமபத்ர தீக்ஷிதரின் "ராமபத்ரஸாஹஸ்ரமஞ்சரீ" ஆகிய நூல்களும் ஆத்ரேயரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஒரு ஆராய்ச்சியாளராக ப்ரஹ்மஸ்ரீ ஆத்ரேயர் சிவரஹஸ்யம் - பகுதி I (700 பக்கங்கள்), சிவரஹஸ்யம் - பகுதி II (400 பக்கங்கள்), அஶ்வஶாஸ்த்ரம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் (300 பக்கங்கள்), ஸ்ரீ வேங்கடேஶவிலாஸ சம்பு (300 பக்கங்கள்) ஆகிய நூல்களை பரிசோதித்து தஞ்சாவூர் ஸரஸ்வதீ மஹால் நூலகத்தின் மூலமாக வெளியிட்டுள்ளார். ஆத்ரேயர் தனது ராமானுபவங்களை 100 ஶ்லோகங்கள் வாயிலாக "ராமமாதுரீ" என்ற நூலில் வழங்கியிருக்கிறார். மேலும்"அந்தர்யாம்யநுஸந்தாநம்" மற்றும்"க்ருஷ்ணராமலீலா" ஆகிய நூல்கள் அவருடைய பக்தியின் மேன்மையை வெளிப்படுத்துகின்றன. திருவிசலூர் ஸ்ரீதர ஐயாவாளின் சமகாலத்தவரான ஸ்ரீ ராமகவி என்பவரின் ராமாஷ்டபதிகளை மூலபாட பரிஶோதனை செய்து தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டார் ஆத்ரேயர். ஸ்ரீமத்வால்மீகி ராமாயணத்தின் முக்கிய ஶ்லோகங்களைத் தொகுத்து "ஸங்க்ரஹ ராமாயணம்" மற்றும் ஸ்ரீமத்பாகவத முக்கிய ஶ்லோகங்களைத் தொகுத்து "ஸங்க்ரஹ பாகவதம்" எனும் நூல்களை வெளியிட்டார். ஆத்ரேயர் எழுதியுள்ள பல தமிழ் மற்றும் ஸம்ஸ்க்ருத நாடகங்களில் "மஹாகவி ஸமாகமஃ", "அநுரூபா", "த்ரிஶங்குஸ்வர்கஃ" ஆகிய ஸம்ஸ்க்ருத நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை‌. அகில இந்திய வானொலியின் "A" க்ரேட் கலைஞரான அவர் தமிழில் பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். இரண்டு ஆண்டுகள் பேராசிரியர்களுக்காக ஸம்ஸ்க்ருத உரையாடல் குறித்த வகுப்புகளை சென்னை குப்புஸ்வாமி ஶாஸ்த்ரி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடத்தினார். அந்த வகுப்புகள் பின்னாளில் ஒரு நூலாக வெளியிடப்பட்டது. காஞ்சீ காமகோடி பீட ஆசார்யர்களின் பல க்ஷேத்ர‌ யாத்திரைகளை "காஞ்சீ காமகோடி பீட யஶோலஹரீ" எனும் நூலில் ஸம்ஸ்க்ருத ஶ்லோகங்களாக விவரித்துள்ளார் ஆத்ரேயர். காஞ்சீ காமகோடி பீட ஆஸ்தான வித்வானாக விளங்கிய ஆத்ரேயரின் பணிகளை அங்கீகரித்து பூஜ்யஶ்ரீ ஆசார்யாள் அவருக்கு "ஆஶுகவிதிலக" என்று விருது வழங்கினார். தன்னை ஸ்ரீக்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் ஸங்கத்தில் இணைத்துக் கொண்ட ஆத்ரேயருடைய பக்தி இலக்கியத் தொண்டைப் பாராட்டி ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அவருக்கு "த்யாகராஜசரணரேணு" மற்றும் "ஸாஹித்ய விஶாரத" எனும் பட்டங்களை வழங்கி தஞ்சாவூரில் கௌரவித்தார். பரம ராமபக்தராக ஆன்மீக இலக்கிய உலகில் ஒப்பற்ற நூல்களைப் படைத்த ப்ரஹ்மஸ்ரீ ஸ்வாமிநாத ஆத்ரேயர் 19.12.2013 அன்று தனது 94வது வயதில் இறைவனுடைய திருவடிகளை அடைந்தார்.

100 views0 comments

留言


bottom of page