top of page

Ubhaya Kanchi Jagadguru Shankaracharyas Visit to Tirumala Tirupati -16th Nov 2025

ஜகத்குரு பூஜ்யஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களுக்கும் மற்றும் இளைய ஜகத்குரு ஶ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களுக்கும் 16-11-25 ஞாயிற்றுக் கிழமை அன்று திருமலா திருப்பதி தேவஸ்தானத்தினரால் திருக் கோவிவில் மரியாதைகள் வழங்கப்பட்டது. அப்போது ஶ்ரீ ஸ்வாமிகள் இருவருக்கும் கோவில் வளாகத்தில் ஶடாரி பரிவட்டம் போன்ற ராஜலக்‌ஷண மரியாதைகளை ஏற்றுக் கொண்டனர். இரு பெரியவாளும் பெருமாள் சந்நிதியில் குலசேகரன் படி அருகே அமர்ந்து ஶ்ரீ வெங்கிடரமண கோவிந்தனை தரிசித்த காட்சியினை ஶ்ரீமடம் பக்த மஹாஜனங்கள் கண்டு களித்தனர். அந்த மகிழ்வான ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்களை நினைவு கூர்ந்து, ஶ்ரீ மஹாபெரியவா 1932 ல் திருப்பதி தேவஸ்தானத்தினரால் அளிக்கப்பட்ட ஶகல ராஜலக்ஷண மரியாதைகளை ஏற்றுக்கொண்டு ஶ்ரீபெருமாளை தரிசித்த செய்தியினை பக்தர்களுடன் மிகுந்த வினயத்துடன் பகிரந்து கொள்வதில் பெருமை பெறுகிறோம்.



ஒரு ஸ்ரீமடத்தின்தொன்மை, அந்த ஸ்ரீ மடத்திற்கு மற்ற சம்பிரதாயத்தவர் தரும் மரியாதைகளால் தெரிய வரும்.


அவ்வகையில், திருமலை திருப்பதி தரிசனத்திற்கு வருகையில் , ஆதிசங்கர பரம்பராகத மூலாம்னாய சர்வக்ஞ ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளுக்கு, பூஜ்யஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்களின் சொந்த மடம் என்பதால் அளிக்கப்படும் விசேஷ மரியாதைகள்.


திருமலை எல்லையில் வரவேற்று மனோகர உருண்டை , லட்டு முதலிய ப்ரசாதங்களை நிர்வாகத்தவர் சமர்ப்பிப்பர்.


பிறகு ஆஞ்சநேய ஸ்வாமி சன்னிதியில் தீபாராதனை.


பிறகு வாத்திய கோஷம், குடை, தீவட்டி, யானை முதலான ப்ருதாக்களுடன் ஆச்சார்யர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய நிர்வாகத்தவர் அழைத்துச் செல்வர்.


கோவிலுக்கு சிறிது முன்பே அர்ச்சகர்கள் மீண்டும் எதிர்கொண்டு சடாரி சாதித்து வரவேற்றல்.


பிறகு குடை , வாத்யம், தீவட்டி முதலிய மரியாதைகளோடு ஆச்சார்யர்கள் ஆலயப் ப்ரவேசம்.


த்வஜஸ்தம்பத்தில் வாத்யம், குடை நீங்கி, தீவட்டிப்பந்த மரியாதையுடன் ப்ரதக்ஷிணமாக சன்னிதி அடைதல்.


சன்னதியில் ஹாரத்தி தரிசனம்.


பிறகு ஆச்சார்யர்கள் தண்டத்தைக் குலசேகரப்படி அருகே வைத்துவிட்டு , குலசேகரப்படி தாண்டி உள்ளே ஏகுதல்.


ஆச்சார்யர்கள் ஏழுமலையானுக்குத் தமது திருக்கரங்களால் சாமர சேவை. செய்தல்.


பிறகு குலசேகரப்படி தாண்டி வெளியே வந்து, தண்டம் ஏந்தி வெளியே வருதல்.


பிறகு தீர்த்தம். பிரசாதம் பெறல்.


பிறகு ஆலயமரியாதைகளை ஏற்றுத் த்வஜஸ்தம்பத்திலிருந்து குடை , வாத்யம்,தீட்டி, யானை முதலிய ப்ருதுக்களுடன் மீண்டும் யாத்திரையாக மாடவீதி வழியாக ஸ்ரீமடம் திரும்புதல்.


இப்படி திருமலை திருப்பதி ஏழுமலையானை மூலாம்னாய காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் தரிசிக்கையில் விசேஷமான மரபுகள் கடைபிடிக்கப்பட்டு , பூஜ்யஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்களின் சொந்த மடத்திற்கு விசேஷ மரியாதைகள் வழங்கப்படுகின்றன.


நேற்று ஆதிசங்கர பரம்பராகத மூலாம்னாய சர்வக்ஞ ஶ்ரீ காஞ்சி காமகோடி ஜகத்குரு மகாசன்னிதானங்கள்பூஜ்யஶ்ரீ பெரியவா மற்றும் பூஜ்யஶ்ரீ இளைய பெரியவா சிஷ்ய பரிஜனங்களோடு பாரம்பரிய முறைப்படி திருமலை ஶ்ரீவேங்கடேஸ்வரப் பெருமாளை தரிசித்துக் கருவறையில் ஶ்ரீ வேங்கடேஸ்வரப் பெருமாளுக்கு சாமர சேவை செய்தார்.

Comments


bottom of page