2
ஸ்ரீ ராமஜயம்
வேத தர்ம பரிபாலன ஸபா
இந்த ஸபா 1944 -ம் வர்ஷம் நமது மஹா ஸ்வாமிகளால் தோற்றுவிக்கப்பட்டது . அதன் பெயருக்கேற்றார் ப்போல் வேதத்தையும் ,தர்மத்தையும் காத்து பரிபாலிக்கவே இந்த ஸபா அன்றிலிருந்து செயல்பட்டு வருகிறது . ஆனால் , நமது பொது ஜனங்களுக்கு இந்த சபாவைப்பற்றி ஒன்றுமே தெரியாத நிலை இன்று இருந்துவருகிறது .
இந்நாளில் நாம் கேட்கலாம் --வேதத்தையும் தர்மத்தையும் நாம் ஏன் காத்து பரிபாலிக்க வேண்டும்? என்று .
வேதம் என்பது உருவமே இல்லாத பரம்பொருளுக்கு நாமாக வேதம் என்கிற சப்த ரூபமாக ஒரு உருவம் கல்பித்து , நாமெல்லாம் அதை (அந்த பரம்பொருளை) வழிபடுவதற்காகவே ஏற்பட்ட ஒரு சப்த களஞ்சியம் . அவ்வாறான வேதம் (1) பரம்பொருளை குறிப்பிடுகிறது (2) அதை விவரிக்கிறது , மேலும் (3) அது நமக்கெல்லாம் பரம்பொருளை அடைய வழியும் காண்பிக்கிறது .
தர்மமோ வெனில் , அது வேதம் குறிப்பிடும் பரம்பொருளை அடையும் மார்க்கத்தை நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்கிறது . இந்த தர்மத்தை தெளிவாக சொன்னவர்கள் பல ஞானிகளும், ரிஷிகளுமே . அந்த தர்மத்தை அதன்மீது அக்கறை கொண்டுள்ள நம் முன்னோர்கள் , அனுஷ்டான ரூபமாகவே நமக்கு எடுத்துச்சொல்லி ,தானும் அவ்வழியே வாழ்ந்து ,நம்மையும் அவ்வாறே வாழும்படி நாமெல்லாருக்கும் உபதேசித்து இருக்கிறார்கள் . அந்த தர்மத்தை குல தர்மம் என்று பெயரிட்டு அழைத்தார்கள் . இந்த குல தர்மம் ஒவ்வொரு குலத்திற்கும் தனியாக ஏற்பட்டது .இது தவிர பொது தர்மம் என்று ஜாதி பாகுபாடின்றி எல்லோருக்குமான தர்மம் ஒன்றும் இருக்கிறது . ஒன்றை நாம் எல்லோரும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் . இவ்வகை தர்மம் (குல தர்மமும், பொது தர்மமும் ) நம் எல்லோருடைய நலனுக்காகத்தான் ஏற்பட்டுள்ளது என்பதை . பிராமணர்களுக்கான குல தர்மம் என்பது , லோக க்ஷேமத்திற்காக வேண்டி அவர்களுக்கென்று தனியாக விதிக்கப்பட்ட அதிகப்படியான கர்மாக்களுக்கா கவே தான் . அவர்களுக்காக நியமிக்கப்பட்ட குலதர்மத்தை பிராமணர்கள் எல்லோரும் தவறாது அவற்றிற்குரிய காலங்களில் அனுஷ்டித்துத்தான் ஆகவேண்டும் . அப்படி அனுஷ்டிக்காவிட்டால் அவர்களுக்கு பாபம் வந்து சேரும் . இவ்வாறான பாபம் அவர்கள் அடுத்த ஜன்மத்தில் பிராமணனாகப்பிறக்க தடையாய் வந்து சேரும் .
இப்போது இம்மாதிரியான சபாக்கள் ஏற்படுத்தவேண்டிய நிர்பந்தமும் அவசியமும் ஏற்பட்டுள்ளன .இதற்கு காரணம் பிராமண மக்களுக்கு சமீப காலத்தில் ஏற்பட்ட வேதத்திலும் தர்மத்திலுமான அசிரத்தை ,அவநம்பிக்கை
முதலியனவே .சரி ,இப்பொழுது சாதாரண மக்களாகிய நாமெலோரும் வேத தர்மம் பரிபாலன சபா மூலம் இதற்கு -வேதத்தையும் தர்மத்தையும் பழையபடி தன் நிலைக்கு கொண்டுவருவதற்கு --என்ன செய்ய வேண்டும் ?
1 . முதலில் இந்த சபாவை பலப்படுத்த வேண்டும்--அதிக மெம்பர்ஷிப் மூலம் (ஒவ்வொரு மெம்பருக்கும் வருட சந்தா --ரூபாய் பதினைந்து .) சபா நிர்வாகிகளும் பரிபாலனத்தின் முக்கிய கருத்துக்களையும் , ஏற்று , அவற்றின்படி அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளை -- அதாவது அதிகமான வேத பாடசாலைகளை உருவாக்கும் செய்கையை மேற்கொண்டும் , அதிகமான தர்ம பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டும் , செயல் பட முன் வர வேண்டும் .
2 . பிராமண மக்களும் குருவரர்களின் ஆசி பெற்று , தங்களது மனதை வேத உத்தாரணத்திலும் , தர்ம மேம்பாட்டிலும் , செலுத்த தொடங்க வேண்டும் . இந்த வகையில் அயராது செயல்பட வேண்டும் .
3. 60 வயது முதல் 70 வயது கொண்டவர்கள் எல்லோரும் இந்த சேவையை மேற்கொண்டார்களேயானால் , இந்த உத்தமமான பணி எளிதில் நிறைவேறும் .
ச.சிதம்பரேச ஐயர்
4 ஏப்ரல் 2022
Comments