top of page

பூஜ்யஶ்ரீ பெரியவாள் திருவடிகளே ஶரணம்

முந்தைய பதிவில் வ்யாஶ பூஜை த்ரிவேணி சங்கமத்தில், 03-07-2023 அன்று கோலஹலஹமாக நடைபெற்ற விவரங்களை அறிந்தோம். தொடர்ந்து ஜூலை 4 அன்று காலை வழக்கம் போல ஶ்ரீசந்திரமெளலீஸ்வரர் பூஜை நடைபெற்றது. அன்று மாலை ப்ரயாக்ராஐ் கல்லூரி மாணவர்கள் கூட்டம் நடைபெற்றது. அர்களுக்காக வழங்கிய ஆசியுரையில், “நவீன அல்லது சமகால கல்வி திட்டங்கள் எவ்வளவு நுணுக்கமாக காலத்தின் தேவையை அனுசரித்து இருந்தாலும், நமது பழமை மிக்க காலத்தை வென்று நிற்கிறதும் தேசப் பற்று மற்றும் ஒற்றுமையை பேணுகின்ற பாரம்பரிய கலாசாரத்தின் அம்சங்களை கற்பிக்காத கல்வியால் பயனேதும் இல்லை. எனவே நமது கலாசார பாரம்பரிய பண்பாடுகளுடன் கூடியதும் சமகால கல்வியும் சேர்ந்த “ ஒருங்கிணைந்த கல்வி திட்ட்மே மேலானது” என்றார்கள்.

மறு நாள் ஜூலை 5 ம் நாள் மதியத்திற்கு மேல் காசி நகருக்கு பயணமாக வேண்டும். எனவே, சந்திரமெளலீஸ்வர்ருக்கு மூன்று கால பூஜைகளை 11.00 மணிக்கு முடித்துக் கொண்டு த்ரிவேணி சங்கமத்தில் சங்கல்ப ஸ்நானம் செய்ய தமது பரிவாரங்களுடன் புறப்பட்டார்கள். சங்கமத்தில் ஸ்நான அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வேணி மாதவர் கோவிலுக்குச் சென்றார்கள். அங்கு தரிஸனத்தை முடித்துக் கொண்டு முகாமிற்கு திரும்பினார்கள். சற்று ஓய்விற்கு பின் மாலை சுமார் 3.30 மணிக்கு ப்ரயாக்ராஜிலிருந்து உள்ளூர் பிரமுகர்கள் நெகிழ்சியுடன் வழி அனுப்பி வைக்க காசி நகர் நோக்கி தம் பரிவாரங்கள் சூழ புறப் பட்டார்கள். தொடர்ந்து பூஜ்யஶ்ரீ பெரியவாள் அவர்களின் விஜய யாத்திரையின் காசி முகாம் நிகழ்சிகளைப் பார்க்கலாம்.




பூஜ்யஶ்ரீ பெரியவாளின் விஜய யாத்திரை- காசி முகாம்.

5-7-23 அன்று மாலை ப்ரயாக்ராஜ் லிருந்து புறப்பட்ட ஶ்ரீபெரியவா அன்று சாயங்காலம் சுமார் 6.30 மணிக்கு காஶி மாநகரின் எல்லையான மெஹமூர்கண்ட் எனும் இடத்தை அடைந்தார்கள். “ராமன் விலாஸில்” மாநகராட்சி சார்பாக, காசி மேயர், ஶ்ரீ அஷோக் திவாரி அவர்கள் தலைமையில் அளிக்கப்பட்ட மிக சிறப்பான வரவேற்பினை ஶ்ரீஸ்வாமிகள் ஏற்றுக் கொண்டார்கள். இவ்வரவேற்பில் காசி நகரின் மூன்று எம். எல். ஏ க்கள், வேத வித்யா ப்திஷ்டானைச் சேர்ந்த எண்ணற்ற மஹா பண்டிதர்கள் அகில பாரத வித்வத் பரிக்ஷத்தின் பண்டிதர்கள், முக்கிய ப்ரமுகர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே ராமன் விலாஸில், 1974ல் காஶி க்‌ஷேத்திற்கு வருகை தந்த 69ஆவது பீடாதிபதிகள் பூஜ்யஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு ப்ரம்மாண்ட வரவேற்பளித்தாரேயே ப்ரஸித்தி பெற்றது. 500க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்களின் வேத முழக்கத்துடன், மிக நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்ட, கம்பீரமான குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் பூஜ்யஶ்ரீ பெரியவாளின் ஷோப யாத்திரை தொடங்கியது. இந்தத் தேருக்கு முன்னதாக, ஆதிசங்கரர், பூஜ்யஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், பூஜ்யஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற வரிசையில் அவர்களது முழு உருவ சித்திரப் படங்களைத் தாங்கிய அலங்கரமான தனித் தனி தேர்கள் அணிவகுத்துச் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. முன்னும் பின்னும் பண்டிதர்கள் புடை சூழ சுமார் 7 கி.மீ. தூரம், சாலையின் இரு புறமும் எண்ணற்ற மக்களுக்கு தரிஸனம் தந்து கொண்டும் அவ்வப்போது பண்டிதர்களுடன் உரையாடிக் கொண்டும் “சிவாலா கோட்டை” எனும் காஶி ராஜா இல்லத்தை அடைந்தார்கள். அங்கு மஹாராஜா அனந்த நாராயண சிங், இளைய ராஜா, ப்த்யும் அனந்த சிங் இருவரும் முறைப்படி ஶ்ரீ பெரியவாளை வரவேற்று, “* தூளி பாதபூஜை*” செய்தனர். அங்கு உள்ளூர் ப்ரமுகர்களின், வரவேற்புரையை ஏற்றுக் கொண்ட , ஶ்ரீபெரியவா மிகச் சிறப்பானதொரு அனுக்ரஹபாஷணம் வழங்கினார்கள். பின்னர் காஶி ராஜா போன்ற ப்ரமுகர்கள் உடன் வர சுமார் அரை கி. மீ. தூரம் நடந்து ஶ்ரீ மடம் கிளையினை அடைந்தார்கள். ஏறத்தாழ 3 மணி நேரம் மேள தாள நாதஸ்வர வாத்யங்கள், தாரை தப்பட்டைகளின் கொட்டு முழக்கோடு, கொம்பு கெளரி காளை எனும் வாத்தியங்கள் எக்காளமிட( ஶ்ரீ சங்கராச்சார்யர் அஷ்டோத்திரத்தில் “ பேரிபட வஹாதி ராஜ லக்ஷண பண்டிதாய நம: எனும் நாமாவளியை இங்கு நினைவு கூறுவோம்), வழி நெடுகிலும் வகை வகையான வாண வேடிக்கைகள் வண்ணமிட அனைத்து தரப்பட்ட ஜனங்களும் மிகுந்த உத்ஸாகத்துடனும் ஆட்ட பாட்டங்களுடனும் பங்குபெற்ற, ஶ்ரீபெரிவாளுக்கு இன்று காஶி மாநகர் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஊர்வலம், ஶ்ரீ காமகோடி பீட சரித்திரத்தில் இடம் பெற தக்க ஒன்றாகும். மிக நீண்ட இவ்வூர்வலம் ஹனுமான்காட்டில் உள்ள ஶ்ரீமடம் கிளையினை சுமார் 9.30 மணிக்கு அடைந்தது. அங்கு காஶி ராஜாவும் கிளை மேனேஜர் ஶ்ரீ மணி அய்யரும் சமர்ப்பித்த பூரண கும்ப வரவேற்பை ஏற்றுக் கொண்ட ஶ்ரீபெரியவா ஆதிசங்கர்ருக்கு சகட வாத்திய முழக்கத்துடன் தீபாராதனை செய்தது, தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு இத்யாதிகளை மிகுந்த வினயத்துடன் ஶ்ரீ ஆச்சார்யாளிடம் சமர்ப்பிப்பது போல் தோன்றியது. அதான், “ நம்ம பெரியவா”.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர


16 views0 comments

Kommentare


bottom of page