top of page

The Glory of 18 Vadhyama Villages

வாத்யமர்களின் சிறப்பான பாரம்பரியத்தைப்பற்றித் தெரிந்துகொள்வதற்குமுன் 'வாத்யமா' என்ற சொல்லின் சொற்பிறப்பியலைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். 'வாத்யமா' என்ற சொல் 'மாத்யமா' என்ற சொல்லிலிருந்து மருவியதாகும்.பிற்காலத்தில் ஆதிசங்கரர் மாத்யமர்களின் ஆய்வுத்திறனால் கவரப்பட்டு அவர்களுடைய நுட்பத்தைத் தன்னுடைய அத்வைத ஸ்தாபனத்தில் தானும் கையாண்டார். இதுவே மாத்யமர்களுக்கும் அவருக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். மாத்யமர்கள் காஞ்சிபுரம் இடம் பெயர்ந்தனர். பிறகு அவர்கள் தஞ்சை மாவட்டத்திலுள்ள கூந்தலூரைச் சுற்றியுள்ள இடங்களில் குடியேறியதற்குச் சரித்திரச் சான்றுகள் உள்ளன என்பது இதைப்பற்றி விரிவான ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ள பேராசிரியர் கோனேரிராஜபுரம் திரு கே.கல்யாணராமன் அவர்களின் கருத்து.

வாத்யமர்கள் 16ஆம் நூற்றாண்டுக்கும் 18ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளிலிருந்து, இந்த 18 கிராமங்களில் குடியேறினார்கள் என்று பரவலாக நம்பபடுகிறது. வாத்யமர்கள் வருணாசிரம முறைகளை கடைப்பிடித்து வேதவிற்பன்னர்களாகவும், ஞானபண்டிதர்களாகவும், நித்யகர்மா அனுஷ்டானங்களை செய்பவர்களாகவும், தர்மிஷ்டர்களாகவும், கடவுள் பக்தி மிக்கவர்களாகவும், சுதந்திர போராட்ட தியாகிகளாகவும், கதா காலக்ஷேபம் செய்பவர்களாகவும், இசைக் கலைஞர்களாகவும், ஓவியம், எழுத்து, மருத்துவம், விஞ்ஞானம், அரசுத்துறைகள் போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கி வந்துள்ளார்கள்.

'புரம் பஞ்சகம், ஊர் பஞ்சகம், குடிவித்யம் கொண்டான், படி, காடு, தை, துறை, மூலை என முடியும் பதினெட்டு வாத்யம கிராமம்." என்ற பாடல் உண்டு. புரம் என முடியும் ஊர்கள் ஐந்து. ஆனதாண்டவபுரம், திப்பிராஜபுரம், கோனேரிராஜபுரம், விஷ்ணுபுரம், சேங்காலிபுரம்,.ஊர் என முடியும் ஊர் ஐந்து; மொழையூர், தேதியூர், சித்தன்வாழூர், கூந்தலூர், பாலூர். குடி என முடியும் ஊர் இரண்டு; செம்மங்குடி, தூத்துக்குடி கொண்டான் என்பது முடிகொண்டான், படி என்பது மாப்படி, காடு என்பது அரசவனங்காடு, தை என்பது மாந்தை, துறை என்பது மரத்துறை. மூலை என்பது தட்டாத்திமூலை.இப்படி 18 வாத்யம கிராமங்கள். ஆனால் தற்சமயம் வாத்யம கிராமங்களில் வடமாள், பிரஹசரணம் தவிர அனைத்து இன மக்களும் வசித்துவருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

KOONTHALUR:

A picturesque setting appears from a distance when one approaches Arasalaru from the north while travelling towards the road connecting Kumbakonam and Poonthottam in the erstwhile Thanjavur District in the olden days when people used to travel in bullock carts. Once the cart crosses Arasalaru one Pillaiyar Koil on the opposite side receives you and on the left side in just 50 meters one can see an Agraharam.

That is a small beautiful village called Kunthaloor. The first settlement of Vathimas. This scene can be noticed these days also, when one takes a bus from Kumbakonam that goes to Poonthottam.

May be we can say that it is God's Own Land if there is no objection. That is the oldest Vathima settlement as reported in various avenues. It is reported by sources in Anandathandavapuram that a palm leaf containing Ramayana Puranam written by Sri Padmanabha Aiyar, now kept in the library of Kanchi Mutt was read by Sri Ramadoss Aiyar and found that it contained the evolution of Anandathandavapuram. There it is claimed that Vathima migrated from a place called Royavelur in North Arcot and settled in Kunthaloor. From there they expanded in all direction with in a reasonable distance. Thus Kunthaloor is considered as the 'Tala Gramam' for Vathimas.

This village is situated on the banks of Arasalaru (Hari Sol Aaru) at a distance of 25 kilometres from Kumbakonam and about 10 kilometres from Poonthottam.

(Hari Sol Aaru: Maha Vishnu after killing asuras, found that his chakra has lost its power. So to reinstantiate the lost power in his chakra, He went to Kalish, the abode of Lord Shiva and prayed to Him. Shiva asked Vishnu to go to Bhoolokha and offer pooja to shiva at a place called " Thiruveezhimizhalai". Vishnu went there. He called the river Kaveri to help him in pooja by giving water. Since Kaveri came on the request of Vishnu (Hari) the river running on the side of Thiruveezhimizhalai and other nearby places is called by the name "Hari sol aaru" or the river that heeded to the words of Hari.)

In the Agraharam, there were 50 houses from east to west and the houses facing south and north. Right now only two Vathima families are there and another 5 families still own their house but not staying there. Backyard of south facing houses is Arasalaru river and that of north facing houses is main road. It is just 100 meters from the road to reach agraharam and length of the street is 300 meters. Other than us population consists of chettiars and mudaliars and other castes people. The village is mainly depending upon agriculture.

Story Behind Kunthaloor and its Name:

Sri Rama, Lakshmana and Seetha on their way to Bharathwajar Ashram they took bath in a pond. It is stated that Seetha's koondhal (hair) fell off in the pond and hence the name KUNDAL UTHIRNDHA OOR which is Koondhaloor.

Also, there is another version which says that Lord Shiva here was worshipped by Roma maharishi. He worshipped Shiva here and the place was filled with Koonthapanai (a type of palm) trees. Hence the name Kunthaloor. It is believed that Roma Maharishi did penance here for more than 1000 years on the banks of river . This could also be one of the reasons why this place is called Kunthaloor because of Roma Maharishi's hair.

There is a small temple for Visalakshi sametha Viswanatha swamy (Sivan koil) in the eastern side and Rukmani Sathyabama sametha Venugopala Swamy & Lakshminarayana Swamy ( Perumal Koil) on the western side of the Agraharam.

கும்பகோணம், பூந்தோட்டம் சாலையில் உள்ள இயற்கை எழில் மிகுந்த அழகிய கிராமம். பதினெட்டு கிராமங்களில் முதல் கிராமம். ஆனதாண்டவபுரம் ஸ்ரீபத்மனாப ஐயர் அவர்களால் ஒலைச்சுவடிகளில் எழுதப்பட்டு தற்போது காஞ்சி மடத்தில் உள்ள ராமாயண புராணத்தில் வாத்யமர்கள் ராய வேலூரைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து கூந்தலூருக்கு இடம் பெய்ர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அரி சொல் ஆறு என்று அழைக்கப்பட்டு பின் மருவிய அரசலாற்றங்கரையில் தென்கரையில் அமைந்த சிறிய கிராமம். ஸ்ரீபரத்வாஜர் ஆஸ்ரமத்திற்கு ராமர், சீதை, லக்ஷ்மணன் சென்றுகொண்டிருந்தபோது இந்த இடம் வந்தபோது இங்கு உள்ள திருக்குளத்தில் ஸ்நானம் செய்துவிட்டுச் செல்கையில் சீதையின் தலைமுடிகள் சில இங்கு உதிர்ந்ததால் கூந்தல் உதிர்ந்த ஊர் என பெயர் பெற்று, பின் மருவி கூந்தலூர் ஆனது. விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதர் கோவில், அக்ரஹாரத்திற்குக் கிழக்கிலும், ருக்மணி சமேத லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில் மேற்கிலும் உள்ளது. ஜம்புகாரண்யேஸ்வர ஸ்வாமி கோவில் அக்ரஹாரத்திற்கு இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அக்கோவிலின் சிறப்பைப் பற்றி கீழே கொடுத்துள்ள 'முருகன் பக்தி' வலைத்தள செய்தி மடலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

http://us5.campaign-archive1.com/?u=44d5f4d1c3077099bace3a138&id=82c59eab4b

http://us5.campaign-archive1.com/?u=44d5f4d1c3077099bace3a138&id=38f9e03cb7

மாரியம்மன் கோயிலும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் பாடல் பெற்ற தலமான கருவேலி என்ற ஊர் உள்ளது.

சோழர்கள் காலத்தில் பூம்புகாரிலிருந்து பழயாரை செல்லும் வழியில் ஒரு முக்கிய கிராமமாக விளங்கியது. ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் தங்கக்கூடிய சத்திரங்கள் கொண்டிருந்தது.

There is a temple tank giving a meaning to nature.

There is another big Sivan temple called Jambukaranyeswarar Swamy Temple situated 2 km away from the Agraharam in Mudaliar Street. It is claimed that a Jambu (fox), Roma Maharshi, Sita Devi and Lord Murugan had worshipped Sivan here. Also, this happens to be the boundary of Kunthaloor. This is a Paadal Petra Sthalam for Lord Murugan by Arunagirinathar in the Thirupugazh. Also in Tiruuthandagam Koondaloor is mentioned. It is reported that Sri Thirunavukkarasar also had sung a Pathikam on this temple.

Important Personalities:

Sri. G. Viswanatha Iyer was a great man in every respect. He lived for 100 years and Poorna Sadhabhishekam was performed under direction by Mahaperiyava.

Rest of 18 Village details will be posted in coming weeks!!!

இக்கட்டுரையில் இருக்கும் செய்திகள் தவிர இவ்வூரைப்பற்றிய அரிய செய்திகளை இந்த வலைத்தளம் வரவேற்கிறது

Courtesy:

English Version:

Sri Krishnamurthy Kalyanaraman, Retd Professor, University of Kerala, is an erudite scholar hailing from Konerirajapuram

Tamil Version :

Compilation by - Smt. Malathi Jayaramani, Kumbakonam

Source:

மாத்யம தர்ம சமாஜ்

பேராசிரியர் திரு கிருஷ்ணமூர்த்தி கல்யாணராமன், கோனேரிராஜபுரம்

1,377 views0 comments
bottom of page