உத்திர பிரதேசத்தின் தலைநகரான லக்னௌவுக்கு 1980களில் வேலை நிமித்தமாக வரும் தமிழர்கள் நேராக செல்வது சேகர் சாப் இல்லத்துக்குத்தான். அவரும் அவரது துணைவியார் திருமதி சந்தானலக்ஷ்மி அவர்களும் நகரத்துக்குப் புதிதாக வரும் மொழி தெரியாத தமிழர்களை இன்முகத்தோடு வரவேற்று, நம் தஞ்சைத் தரணியின் விருந்தோம்பலுக்கு ஒரு உதாரணமாக, அவர்களுக்கென வீடு கிடைத்துச் செல்லும்வரை உபசரிப்பார்கள். நமது காஞ்சி மடத்தின்மீது அளவ்ற்ற பக்தி உடையவர்கள். லக்னௌவில் ஒரு வேத பாடசாலை அமைவதற்காக அயராது பாடுபட்டவர்களில் இவர்களும் முக்கியமானவர்கள். பல ஆன்மிகப்பணிகளில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டு இன்றளவும் செயலாற்றி வருகின்றனர். அண்மையில் சித்தி அடைந்த பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளிடம் மிகுந்த பக்தி கொண்ட ஸ்ரீ பாலசுப்ரமணியம் சேகர் அவர்கள், லக்னௌவில் வேத பாடசாலை அமைப்பதற்காக ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் எவ்வாறு அருளாசி வழங்கினார் என்பதைப்பற்றி இக்காணொளியில் கூறுவதைக் கேட்போம்.
Veda Patasala - Lucknow



ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர
Thanks to Smt. Malathi Jayaraman (Kumbakonam)