top of page

Sapthasthanam-Thiruchakkarapalli,Ayyampettai

🙏🏻சிவாய நம🙏🏻

லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை திருச்சக்கரப்பள்ளி திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் தேவார பாடல் பெற்ற திருத்தலம்.

சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி திருக்கோயிலுடன் இனைந்த திருச்சக்கரப்பள்ளி அருள்மிகுதேவநாயகிஅம்பாள் சமேத ஸ்ரீ_சக்கரவாகேஸ்வரர் சுவாமி திருக்கோயில்

நிகழும் விகாரி வருடம் பங்குனி மாத பிரம்மோத்ஸவப் பெருவிழா-2020. (சப்தஸ்தான பெருவிழா)

27.03.2020(வெள்ளி கிழமை)- அங்குரார்ப்பணம், எஜமானர் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை.

28.03.2020(சனிக்கிழமை)-முதல் திருநாள் காலை கொடியேற்றம் துவஜாரோஹணம்.🏳

29.03.2020(ஞாயிறுக்கிழமை)-இரண்டாம் திருநாள் மாலை சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் திருவீதி உலா🌞.

30.03.2020(திங்கள் கிழமை)-முன்றாம் திருநாள் பூத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா.

31.03.2020(செவ்வாய்கிழமை)- நான்காம் திருநாள் சேஷ வாகனத்தில் சுவாமி திருவீதி உலா.🐍

01.04.2020( புதன்கிழமை)-ஐந்தாம் திருநாள் காலை தன்னைத்தான் பூஜித்தல் அழகுநாச்சியம்மன் கோயில் மண்டபம் சென்று மாலை சின்ன ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா🐂.

02.04.2020(வியாழக்கிழமை)-ஆறாம் திருநாள் யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா.🐘

03.04.2020(வெள்ளிக்கிழமை)-ஏழாம் திருநாள் கைலாச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா.

04.04.2020(சனிக்கிழமை)-எட்டாம் திருநாள் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா🦓.

05.04.2020(ஞாயிறுக்கிழமை)- ஒன்பதாம் திருநாள் ரதாரோகணம்

06.04.2020(திங்கள் கிழமை)- பத்தாம் திருநாள் பகல்12.00 மணியளவில் காவிரி ஆற்றில் பஞ்சமூர்த்தி தீர்த்தவாரி🐀🦚🐂🐂🐂 இரவு திருவீதி உலா.

08.04.2020( புதன்கிழமை)- காலை அருள்மிகு அனந்தவல்லி அம்பாள் உடனகிய ஸ்ரீ சந்திரசேகரர் சுவாமி சிறிய பல்லக்கில் (வெட்டிவேர் பல்லக்கு)

அருள்மிகு தேவநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சக்கரவாகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி கோபுர தரிசனம் கண்டு சப்தஸ்தானமாகிய ஏழூர் வலம் வருதல்.

09.04.2020(வியாழக்கிழமை) மாலை சுவாமி அம்பாள் பல்லக்கில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

திருசிற்றம்பலம்

மண் பயணுற வேண்டும்

அனைவரும் வருக!! இறைவன் அருள் பெருக!!!

இப்படிக்கு... சைவ சமய நன்னெறி மன்றம். திருச்சோற்றுத்துறை.

12 views0 comments
bottom of page