Masimagam Teerthavari
மகாமகக் குளம் ஆரத்தி
குடந்தை மகாமகக் குளத்தில் மாசி மகத்தன்று (8-3-2020) மாலை ஆரத்தி விழா, வெகு சிறப்பாக நடை பெற்றது. அகில இந்திய சாது சமாஜத்தின் சார்பாக, காசியில் உள்ளது போல் மிகப்பெரிய, அழகான ஆரத்தி விளக்குகள் அளிக்கப்பட்டன. இதில் பல ஆதீன மடாதிபதிகள், வேத விற்பன்னர்கள், சிவாச்சாரியார்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆரத்தி வழிபாடு நடத்தினர். மகளிர் முளைப்பாரி எடுத்து மகாமகக்குளத்தை வலம் வந்து வணங்கினர்.ஆரத்திக்கு முன் நான்கு கரைகளிலும், வேத பாராயணம், திருமுறை பாராயணம், பக்தி இசை, மகளிர் கோலாட்டம், ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற, மகாமகக்குளம் தேவலோகமாகக் காட்சி அளித்தது. அதிலிருந்து சில காணொளிக் காட்சிகள் கண்டு இன்புறுவோம்.