A Special Message From Sri Periyava-Exclusively For Thanjavur Parampara
சாதுர்மாஸ்ய விரதம் பூர்த்தி
சாதுர்மாஸ்ய விரதம் பூர்த்தி செய்து பௌர்ணமி தினமான இன்று ஸ்ரீபெரியவாளுக்கு வபன மஹோத்ஸவம் செய்து வைக்கப்பட்டது. பூர்ண கும்ப மரியாதை மங்கள ஹாரத்தி முதலியன ஆனதும் ஸ்ரீபெரியவாளுக்கு பழத்துடன் புதிய வெங்கல கிண்ணம் சமர்பிக்கப் பட்டது. இவ்வருடம் அதிக் மாதமான படியால் ஸ்ரீமடத்தில் மாதம் முழுவதும் நாள்தோறும் இதே போன்ற வெண்கல கிண்ணத்தில் 33 அப்பங்கள் வைத்து வைதீக பிராமணாளுக்கு தானம் வழங்கப்படும். க்ருஹஸ்தர்களும் அவரவர் இல்லங்களில் அதிக் மாதத்தில் ஒருதினமாகலும் ஒரு வைதீக பிராமணருக்கு அப்பம் வைத்து வெண்கலக் கிண்ணம் தானம் தருவது மிகுந்த ஸ்ரேயஸைத் தரும் என்று ஸ்ரீபெரியவா திருவாய் மலர்ந்தருளினார்கள்.



