"நடக்கும் ஸ்ரீ சார்வரி ஆண்டில் புரட்டாசி மாதம் அதிக மாஸம்" (17-09-2020 முதல் 16-10-2020 வரை) என்று கூறப்படுகிறது. இவ்வாறான அதிக மாஸத்தில் சுப காரியங்கள் செய்யும் வழக்கம் கிடையாது. அதனால் இம்மாதத்தில் நாம் அனைவரும் நம் நேரத்தை இறை வழிபாடு, மற்றும் நம் ஆன்மிக வளர்ச்சி ஆகியவற்றில் செலவிட வேண்டும் என்ற அருளாசி வழங்கி, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள், ஸ்ரீ ஆத்ம போத தீர்த்த ஸ்வாமிகள்(கும்பகோணம் ஸ்வாமிகள்) வழங்கிய "சிவ ரஹஸ்யம்" என்ற ஒலிப்பதிவினை 20- 09- 2020 அன்று தமது பொற் கரங்களால் வெளியிட்டார்கள். அத் தொடரை கீழே பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம்.
இந்த ஒலிப்பதிவை அனைவரும் கேட்டு ஜெகத்குரு அவர்களின் ஆஞ்யைக்கு இணங்க நாம் அனைவரும் நம் ஆன்மிக வளர்ச்சியை நோக்கிப் பயணிப்போம்.