top of page

ஜயமங்களா சுபமங்களா - Rare Varalakshmi Viratham Song


இது பழைய காலத்து பாட்டு என்று ஸ்ரீமதி அலமேலு நடேசய்யர் தன் நாட்டுப் பெண் ஸ்ரீமதி ராஜம் கணேசன் ( ஹிந்து கணேசன் மனைவி ) அவர்களுக்கு சொல்லி கொடுத்தது:

ஸ்ரீமதி ராஜம் அவர்கள் 62 வருஷமாக வரலக்ஷ்மி வ்ரதமன்று இதைப்பாடி தன் நாட்டுப் பெண்களுக்கும் சொல்லி கொடுத்து இருக்கிறார்.

மீனாட்சி அம்மனும் வரலக்ஷ்மி அம்மனை அர்ச்சிக்க வேண்டும் என்று ஆசை கொண்டாள்

ஜயமங்களா சுபமங்களா

புதுசாக மண்டபம் பொன்னாலே கால் நிறுத்தி நன்றாக எங்கிலும் சிங்காரம் செய்தாள்

ஜயமங்களா சுபமங்களா

பார்க்க அழகாகவே தீர்க்கமாய் மதிலெங்கிலும் விசித்ரமாய் நல்ல சித்திரமெழுதி முத்து சரங்கள் தொடுத்து ரத்தினங்களாலே ஜோடித்து சுற்றிலும் சிங்கார பிம்பம் பதித்தாள்

ஜயமங்களா சுபமங்களா

மாவிலை தோரணம் வரிசை வாழை கமுகு இரு சாரியாய் வீதி எங்கும் நிறைத்து குலையுடனே மாங்காயும் தேங்காய் பலாக்காயும் பாங்காக பந்தலெங்கும் பழங்கள் இசைத்தாள்

ஜயமங்களா சுபமங்களா

மல்லிகை மலரெடுத்து முல்லையுடனே தொடுத்து மங்களமாய் தொங்க எங்கும் சரங்களிசைத்து நேமமாய் விரதஅனுஷ்டானங்களை முடித்து சியாமள வர்ணி ஸ்னானம் செய்து வந்தாள்

ஜயமங்களா சுபமங்களா

ரத்ன தீபம் ஏற்றிவைத்து பத்ம கோலங்களிட்டு பணிக்காக பஞ்சவர்ண பொடிகள் போட்டு சுவர்ண ஸிம்ஹாசனத்தில் ஜோதியாய் பிரதமை வைத்து அன்புடனே ஹரிவல்லபை அலங்கரித்தாள்

ஜயமங்களா சுபமங்களா

ஆயிரம் மாதர்கள் மங்களமென்றுபாட அளவற்ற வாத்தியம் அதிர்வெடிகள் போட பதிவ்ரதை நோன்புகள் நூர்கிறார்களென்று பலப்ராஹ்மணாரெல்லோரும் வந்து கூட

ஜயமங்களா சுபமங்களா

அச்சுதனார் வக்ஷ்ஸ்தலத்திலே விளங்குகின்ற் லக்ஷ்மியை தியானித்து பிரார்த்தித்து அம்மன் கந்த புஷ்பாக்ஷதை குங்குமங்களை கொடுத்து சரணத்தில் சஹஸ்ரார்ச்சனைகள் செய்தாள்

ஜயமங்களா சுபமங்களா

விதவிதமாய் பக்ஷ்யங்கள் விசித்திரமாய் கொணர்ந்து வைத்து அணி அணியாய் கனிகள் ஆயிரம் படைத்து தூப தீபங்கொடுத்து பொற்பாத திருவடிக்கு அற்புதமாய் கற்பூர ஹாரதி எடுத்தாள்

ஜயமங்களா சுபமங்களா

மௌனமாயிருந்து மஹாலக்ஷ்மியை பூஜை செய்து மாதாவும் மகளுமாய் ஓய்ந்து மனது பெருமை இல்லாமலே பெரியோரை உபசரித்து வாயன தானம் வாரி வழங்கினாள்

ஜயமங்களா சுபமங்களா

லக்ஷம் புருஷார்க்கு போஜனங்கள் செய்து வைத்து தக்ஷிணைகள் திருப்தியாகவே கொடுத்து சுக்ரவாரம் தப்பாமல் இந்தபடி பூஜை செய்து மீனாட்சிப்பிரியாள் வாழ்ந்து இருந்தாள்

ஜயமங்களா சுபமங்களா

246 views0 comments

Recent Posts

See All
bottom of page