top of page

கந்தர் ஷஷ்டி 2020

ஸ்ரீ குருப்யோ நம:

ஸ்ரீ ஸ்ரீ பெரியவா சரணம்

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபாவளி பண்டிகை முடிந்ததும் 20-11-2020 வெள்ளிக்கிழமை, அன்று கந்தர் ஷஷ்டி உற்சவம் வருகிறது. கடந்த ஆண்டு

02-11-2019 அன்று ஸ்ரீ பெரியவாள் ஆக்ஞயையின் பேரிலும் அனுக்ரஹத்தினாலும் “கந்தர் ஷஷ்டி - சஹஸ்ர குமார போஜனம்” சென்னையில் கோலாஹலமாக, தாஸப்ரகாஷ் திருமண மண்டபத்தில் வைத்துக் கொண்டாடப்பட்டது, அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த ஆண்டு கந்தர் சஷ்டியை பெரிய விழாவாக ஒரே இடத்தில பலரும் கூடி கொண்டாட முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இந்த ஆண்டு 20-11-2020 வெள்ளிக் கிழமையன்று அவரவர் இல்லங்களில் ஷண்முகர் அல்லது வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய ஸ்வாமி படங்களை அலங்கரித்து சங்கல்பத்துடன் கூடிய க்ரமார்ச்சனை செய்து உகந்க நெய்வேத்தியதுடன் ஸ்ரீ சுப்ரமண்யரை ஆராதனை செய்தும், அவரவர் வசதிக்கேற்ப ப்ரஹ்மச்சாரிகளுக்கு குமார போஜனம் செய்வித்தும் ஸ்ரீமத் பகவத்பாதர்களின் ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய புஜங்கம் கந்தர்சஷ்டி கவசம் போன்றவற்றை பாராயணம் செய்தும் ப்ரஸாதம் எடுத்துக்கொள்ளுமாறு ஸ்ரீ பெரியவாளின் அனுக்ரஹத்துடன் கூடிய ஆக்ஞயையினை தெரிவித்துக்கொள்கிறோம்.

8 views0 comments
bottom of page