‘அக்ஷய த்ருதியை’ எனும் புண்ணிய தினம் பற்றி நாம் ஓரளவிற்கு படித்திருக்கிறோம். சம்ப்ரதாயமாக தானம், குறிப்பாக அன்னதானம் பலர் செய்வதை பார்த்திருக்கிறோம். இருந்தாலும் அதற்கான விளக்கம் ஶ்ரீ ஸ்காந்த புராணத்தில் உள்ளது எனபது நம்மில் பலர் அறியாமல் இருக்கலாம். அவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே அக்ஷய த்ருதியை பற்றி ஶ்ரீ ஸ்காந்தம் தரும் கீழ்காணும் ஸ்லோகங்களை அவற்றின் பொருளுடன் பதிவிடுகிறோம்.
இதன் பொருளாவது: நமது சம்ப்ரதாய மற்றும் அனுஷ்டானத்தில் உள்ள சாந்த்ர, செளர மாதங்களில் நாள்தோறும் வருகிற திதிகள் அனைத்துமே புண்ணிய திதிகளே. அதிலும் ( சாந்த்ரமான) வைகாஸ மாத சுக்ல பக்ஷ திருதியை திதி அக்ஷய திருதியை என்பதாக கூடுதல் விசேஷம் பெற்றுள்ளது. அன்று ஸ்நானம், தானம் முதலியனவும், விசேஷமான ஸ்ராத்தம் கூட செய்து, நமது ஆயிரக் கணக்காண சஞ்சித பாபங்களை சந்தேகமன்னியில் அழித்துக் கொள்ளும் புண்ணிய தினமாக உள்ளது.
மேலும்,
இரண்டாவது ஸ்லோகத்தின் பொருளாவது: “அக்ஷய த்ருதியை அன்று மக்கள் பலரும் மதுஸூதநனன் எனும் நாமம் உடைய ஶ்ரீ மஹாவிஷ்ணுவை, தூப தீப நெய்வேத்யாதிகளுடன் திவ்ய நாமங்களால் அர்சித்தும், பகவானின் கதைகளை காதுகள் குளிர கேட்பதும் என அத்தினத்தை கொண்டாடி மோக்ஷத்தை சுலபமாக அடைகின்றனர். அது மட்டுமல்லாது, மதுசூதனனின் ப்ரீதிக்காக தான தர்மங்களைச் செய்து புண்ணிய பலன்கள் பலவும் பெறுகிறார்கள் என்பதும் நிச்சயம். ஶ்ரீ காஞ்சி சங்கராச்சார்யர்கள் ஆசிகள் பெற்ற கல்வி அறக்கட்டளைகள், கோசாலைகள் போன்ற (வருமானவரி சலுகைகள் பெற்ற) தொண்டு நிறுவனங்களுக்கு பக்தர்கள் பலரும் நிதி உதவிகள் அளித்து வருகிறார்கள். அவர்களுடன் மற்ற பக்தர்களும் சேர்ந்து “அக்ஷய திருதியை”எனும் நன்நாளில், தாரளமாக நன்கொடைகளை தானமாக வழங்கி மேற் சொன்ன விசேஷ பலன்களைப் பெற்றிட அன்புடன் வரவேற்கிறோம். இப் புண்ணிய தினத்தில் தானம் வழங்க விரும்புவோரின் உடனடி கவனத்திற்கு சில அறக்கட்டளைகளின் வங்கி கணக்கு விவரங்களை கிழே தந்துள்ளோம்:
Comments