top of page

An appointment of srirangam temple priest by charitable endowments department cannot be strictly allowed.

23 hours ago
1 min read

திருச்சி, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்தின் புதிய பீடாதிபதி நியமனம் தொடர்பாக, ஸ்ரீரங்கம் வீரராகவன் தாக்கல் செய்த பொதுநல மனு மீது, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் பிறப்பித்த உத்தரவு:


சட்டப்படி ஒவ்வொரு மடத்திற்கும் ஒரு மடாதிபதி இருக்க வேண்டும். மடாதிபதி தன் வாழ்நாளில் தனக்கு அடுத்த வாரிசை நியமிப்பார். ஆனால், வாரிசை நியமிக்காமலேயே மடாதிபதி மரணமடையும் சூழல் ஏற்படலாம். இத்தகைய காலியிடங்கள் ஏற்படும் போது,​வழக்கப்படி புதிய தலைவரை நியமிக்க வேண்டும்.


ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தில், ஸ்ரீ ரங்கநாராயண ஜீயர் மடம் அங்கமாக உள்ளது.

மடத்தின் தலைவரான ஜீயருக்கு, பணி, அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரே கோவிலை நிர்வகிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கினார்; இந்த அமைப்பில் ஜீயர் உயர்ந்த இடத்தில் உள்ளார்.


இம்மடத்தின், 50வது ஜீயர் 1989ல் பீடத்தில் அமர்ந்தார்; 2018ல் இறந்தார். அவர் அடுத்த வாரிசை நியமிக்கவில்லை. மடத்தின் மரபு, வழக்கப்படி அடுத்த ஜீயரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு கோவிலின் 'ஸ்தலத்தார்'கள் எனப்படும் பரம்பரை அறங்காவலர்களுக்கு உள்ளது. முடிவு ஒருமனதாக அல்லது பெரும்பான்மை ஓட்டெடுப்பு மூலமாக எடுக்கப்படலாம்.ஜீயர் இல்லாத சூழலில், அவருக்குரிய அதிகாரங்கள், 'ஸ்தலத்தார்'களுக்கும், பட்டர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. ஜீயருக்கு வழங்க வேண்டிய மரியாதைகளை அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.


ஜீயர் இல்லாததால், அவர்களை கேள்வி கேட்க யாரும் இல்லை. அடுத்த ஜீயரை தேர்வு செய்வதற்கான எந்த ஊக்கமும் அவர்களுக்கு இல்லை. தற்போதைய நிலையே அவர்களுக்கு சாதகமாக உள்ளது.'ஸ்தலத்தார்'கள் ஒத்துழைப்பு வழங்காத சூழலில், அறநிலையத்துறை இணை கமிஷனர், அவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கி, தகுதியான வாரிசை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.அதற்கு பதிலாக, 2021ல் இருந்து விண்ணப்பங்களை கோரும் நடைமுறையை துறை மேற்கொண்டது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்திருந்தும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லை. இதனால் விவகாரம் இங்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், '6 மாதங்களுக்குள் புதிய ஜீயரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


அவரது உத்தரவாதம் ஒரு வகையில் நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும், கவலையையும் ஏற்படுத்தியது. 50வது ஜீயர், அக்காலகட்டத்தில் கோவிலின் செயல் அலுவலரால், 1989ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மூலம் நியமிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோம்.ஜீயரை நியமிப்பதற்காக, அந்த அதிகாரி சட்டத்தில் குறிப்பிட்ட பிரிவை பயன்படுத்தியுள்ளார். தற்போது மீண்டும் அதே போன்றதொரு நடவடிக்கையை துறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை நாங்கள் உறுதியாக அனுமதிக்க மாட்டோம்.


இதற்கு காரணம் உண்டு. ஒரு மடாதிபதி அல்லது ஜீயரை தேர்ந்தெடுப்பது, முற்றிலும் ஒரு மதம் சார்ந்த நிகழ்வு. இதை ஒருபோதும் மதச்சார்பற்ற அல்லது நிர்வாக ரீதியான செயலாக கருத முடியாது.

Recent Posts

See All
Shankara Eye Hospital Anand, Gujarat Anugraha Bashanam highlights

குஜராத் மாநிலம் ஆனந்தில் உள்ள ஶங்கரா கண் மருத்துவமனையில் பூஜ்யஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளின் அனுக்ரஹ பாஷணம் - சிறப்பம்சங்கள் 2/11/2026 1. குருவருளால் தொடங்கி நாடெங்கும் விரிவடைந்த கண் மருத்த

 
 
 
Jagadguru Sri Kanchi Sankaracharya's Anugraha Bhashanam at Amul Dairy, Anand -Key Highlights

அற்புதம் அம்மம்மா அற்புதம். பகவான் கிருஷ்ண லீலையில் வர்ணிக்கப் பெறும் கோகுலம் போல் ஏராளமாக பால் உற்பத்தி செய்யும் அமுல் நிறுவனத்தில் பூஜனீயர்கள் எழுந்தருளியபோது அனுக்ஹபாஷணம். வெள்ளை (தூய) உள்ளத்திலிர

 
 
 

Comments


bottom of page