வேண்டுகோள்
உறுப்பினர்கள் அனைவருக்கும் பராபவ புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்கள் அனைவருக்கும் நமது ஜகத்குரு பூஜ்யஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் அவர்களின் பரிபூரண க்ருபை வேண்டி ப்ரார்த்திக்கிறோம்.
மாண்புமிகு உச்சநீதி மன்றத்தில் கடந்த ஒரு வார காலமாக நாள்தோறும் விசாரணையில் இருந்து வரும் வழக்கு தொடர்பான கீழ்காணும் சில விவரங்கள் மிக அவசரமாகத் தேவைப் படுகின்றன. எனவே உங்கள் அனைவரிடமும் மிகவும் அவசரமாக கீழ்காணும் வேண்டுகோளை வைக்கிறோம். அனைவரும் அருள் கூர்ந்து முழுவதும் படித்துவிட்டு, முழுதும் சரியான தகவல்களை, முன்னுரிமை கொடுத்து உடனேயோ அல்லது தகவல் திரட்டப்பட வேண்டியிருப்பின் அவற்றைத் திரட்டி இரு தினங்களுக்குள்ளாகவோ கேட்கப்படும்விவரங்களை, thanjavurparamparai@gmail.com எனும் மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
ஒவ்வொரு உறுப்பினரும் அவரவர் பெயர், கைபேசி எண்/ எண்கள், தாய் தந்தையர் பெயர் முழு முகவரி (PIN நம்பருடன்)
முதலிய விவரங்களை முகப்பில் குறிப்பிடவும்.
தொடர்ந்து, அவரவர்கள் குலதெய்வம் பெயர், அக் குலதெய்வம் அமைந்திருக்கும் கோவில் பெயர், ஊர், தாலுகா, மாவட்டம், அக் கோவிலில் அல்லது தனியே அமைந்திருக்கும் குலதெய்வத்திற்கு நாள் தோறும் நடைபெறக் கூடிய பூஜை முறைகள் தவிர, குறிப்பிட்ட மாதங்களிலோ, நாட்களிலோ திதி நட்சத்திரம் தினங்களிலோ, மாவிளக்கு தீ மிதி, மண்சோறு உண்ணுதல், ஆணிகள் நிரம்பிய பாதகுறடு அணிதல், ஆணிப்படுக்கை, அலகு கும்திக் கொள்ளுதல் போன்ற சிறப்பு வழிபாடுகள் இருப்பின் அந்த விவரங்களை சுருக்கமாகத் தரவும். மேலும், குறிப்பாக இச் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள பல ஆண்டுகளாக/ பல தலைமுறைகளாக ஆண்களுக்கோ பெண்களுக்கோ எந்தவகையிலான தடைகள் விதிக்கப்பட்டு அத்தடைகள் அனைவராலும் சுமுகமாக ஏற்கப்பட்டு எந்தவித குழப்பமுமின்றி நடைமுறையில் பின்பற்றபடுகிறதாயின் அத்தகைய விவரங்களும் உடனடியாகத் தேவைப்படுகின்றன.
எனவே இந்த தகவல்களை வரிசைப்படுத்தி thanjavurparamparai@gmail.com எனும் மின் அஞ்சல் விலாசத்திற்கு மிக அவசரமாக இன்றே அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
மேற்சொன்ன நமது அவசரத் தேவை செய்தியை உறுப்பினர்கள் தமது உறவினர்கள் / நண்பர்கள்/ ஆகியோரிடமும் பகிர்ந்து கொண்டு அவர்கள் குலதெய்வமாக வழிபடும் கோவில்களிலும் மேற்சொன்ன சிறப்பு/ வித்தியாசமான வழிபாடு முறைகள் இருப்பின் அவற்றையும் நண்பர்கள்/ உறவினர்களை தனித்தனியே மேற் சொன்ன மின் அஞ்சலுக்கு (thanjavurparamparai@gmail.com) அனுப்பிக் கொடுக்க வேண்டுகிறோம்.
இச் செய்திக்கு முன்னுரிமை கொடுத்து தகவல்கள் அனுப்பும் நண்பர்கள் அனைவருக்கும் ஶ்ரீ குருநாதாள் அவர்களின் பரிபூரண க்ருபா கடாக்ஷம் கிடைக்க ப்ராரத்திக்கிறோம்.
“இந்த இணையதளம் காஞ்சி ஶ்ரீமடத்தின் ஓர் அங்கம்.” ஶ்ரீபெரியவா.

Comments