ஶ்ரீ மடம் பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
- Thanjavur Paramapara
- 6 hours ago
- 1 min read
ஶ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர்களால் ஸ்தாபிக்கப்பட்டு ஸ்வயம் ஶ்ரீமத் பகவத்பாதர் அவர்களே முதல் பீடாதிபதியாக சர்வக்ஞ பீடம் ஏறியதும் வரலாற்று புகழ் பெற்றதுமான நமது மூலாம்நாய ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஶ்ரீமடம் பாரம்பரியம் மிக்க கலாசார பழக்க வழக்கங்களையும் சம்ப்ரதாயங்களையும், சிறிதும் சமரசம் செய்து கொள்ளாது, தலைமுறை தலைமுறையாக கடைப்பிடித்து காப்பாற்றி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி கட்டி காப்பற்றப்பட்டு வரும் சம்ப்ரதாயங்களில் ஒன்று, நமது ஶ்ரீமடத்திலோ ஶ்ரீ ஆச்சார்யாள் முகாம்களிலோ, ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் பூஜா மண்டபத்தையோ, ஆச்சாரயாள் ஶ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜைகளை நடத்திக் கொண்டு இருக்கும் போதோ அதனை, போட்டோவோ வீடியோவோ வேறு எவ்வாறாகிலுமோ போட்டோ வீடியோ எடுக்க யார் ஒருவருக்கும் அனுமதி இல்லை, என்பது மிகமிகத் தெளிவாக இந்த வேண்டுகோள் மூலம் ஶ்ரீமடம் பக்தர்கள் உட்பட வருகை தரும் விருந்தினர்கள் அவர்களது, உறவினர்கள், வருகை தரும் முக்கிய விருந்தினர்களின் உதவியாளர்கள் பொதுமக்கள் என்று அனைவருக்கும் ஶ்ரீ ஆச்சார்யாள் ஆக்ஞையின்படி தெரிவிக்கப் படுகிறது.
ஶ்ரீகார்யம், ஶ்ரீமடம், காஞ்சிபுரம்
மேனேஜர், ஶ்ரீமடம் முகாம்.
Comments