வருந்துகிறோம்
- Thanjavur Paramapara
- 12 minutes ago
- 2 min read
நேற்று முன் தினம், ஶ்ரீமடம் பாடசாலையில் முழுமையாக வேத அத்யயனம் செய்தவரும், சாஸ்த்ரம் பயின்றவரும் ஶ்ரீமடத்தில் கனாந்தம் வேதம் பயின்று கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ள ஶ்ரீ ராம்ப்ரஸாத் தந்தையும், திருமலைவாசியும், வைதீக மார்கத்தில் சிறந்த அனுஷ்டாதாக இருந்து வந்தவருமான, ஶ்ரீசந்திரசேகர கனபடிகள் அகாலமாக காலகதி அடைந்தார்கள், என்ற சோகமான செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தஞ்சாவூர்பரம்பராவில் பதிவிடுகிறோம்.
அன்னார், ஶ்ரீபரமாச்சார்யார்கள், ஶ்ரீ புதுப் பெரியவாள், தற்போது பீடத்தில் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் பூஜ்யஶ்ரீ பெரியவர்கள் என்று சமகால காஞ்சி சங்கராச்சார்யர்கள் மீது அத்யந்த பக்தியும் ப்ரேமையும் கொண்டிருந்தார். சிவலோக ப்ராப்தி பெற்ற அன்னாரின் ஆப்த நண்பரும் ஆத்ம ஶகாவுமான பங்களூரு, ஶ்ரீ கணேச கனபாடிகள், தம் சகாவின் பாரம்பரியத்தையும் அவரது குண விசேஷங்களையும் நினைவு கூர்ந்து வெளியிட்ட இரங்கல் செய்தியாவது.
ஶ்ரீ சந்திரசேகர கனபாடிகளின் தந்தையார் பெயர் கிருஷ்ண ஐயர் தாயார் பெயர் லட்சுமி அம்மா இவர்களுக்கு மூன்று புருஷ குழந்தைகள்.
முதல்வர் ஶ்ரீ சத்தியவாகேஸ்வரன் இரண்டாவதாக ஶ்ரீ சந்திரசேகரன்
மூன்றாவது உமா மகேஸ்வரன். ஒரே பெண், அவரை பெங்களூரில் இருக்கும் ஸ்ரீ மகாலிங்க கனபாடிகளுக்கு விவாகம் செய்து கொடுத்தார். அப்போது ஒரு சமயம், ஶ்ரீ மகா பெரியவாள் தமது உபன்யாசத்தில், “வேதரக்ஷணத்திற்காக குடும்பத்துக்கு ஒரு குழந்தையையாவது, வேதம் படிக்க விட வேண்டும்”, என்று சொன்னார்கள். அடுத்த நாள் தன் மூன்று குழந்தைகளையும் கூட்டிக்கொண்டுபோய், ஶ்ரீ பெரியவாள் சன்னிதியில் நிறுத்தி, “இந்த மூன்று குழந்தைகளையும் வேதத்துக்கு விடுகிறேன்” என்று சொன்னவர், ஶ்ரீ சந்திரசேகர கனபாடிகளின் தாய் தந்தையர். தம்பதிகள் சொன்னதைக் கேட்டு ஶ்ரீ மஹா பெரியவா ரொம்ப சந்தோஷப்பட்டு இவர்களை மூன்று பேரையும் வேதம் படிப்பதற்கு வேத பாடசாலையில் சேரும்படி சொன்னார்கள். காஞ்சிபுரம் நம்ப மடத்துப் பாடசாலையில் இவர்கள் பூரணமாக வேதம் படித்தார்கள் சந்திரசேகர தனபாடிகள் சாஸ்திரமும் படித்தார். ஸ்ரீ மடத்து பண்டிதர் பிரம்மஸ்ரீ ராமசுவாமி சர்மா இவரிடத்தில் பூரணமாக படித்தார். பிறகு இவருக்கு அல்லூர் வித்வான் பையனான ஶ்ரீ யஞ்ஞேஸ்வர ஶர்மாவின், குமாரத்தியை “கன்னிகாதானமாக” கொடுத்து விவாகம் ஆனது. இந்த தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள் இவர் திருமலா திருப்பதி தேவஸ்தானம் மூலமாக திருமலையில் சுவாமி சன்னதியில் பல வருஷங்கள் வேத பாராயணம் செய்து வந்தார் இவருடைய மச்சினர்கள் மூணு பேர் இரண்டு பேர் மகாவித்வான்கள். ஶ்ரீ சந்திரசேகர்ருக்கு நல்ல உதார குணம். எல்லோருக்கும் உபகாரம்செய்வார். பல இடங்களில் வேத பரிக்ஷா அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார், ஶ்ரீ பெரியவா இடத்தில் அதிபக்தியாகவும் எல்லோரிடத்திலும் விசுவாசமாகவும் வாழ்ந்தவர் ‘வேத தங்கமலை’ கீழே விழுந்து விட்டது. இதனால் நிறைய பேருக்கு நஷ்டம். என்னுடைய ஆத்மா மித்ரன் போய்விட்டான் என்று வருத்தமாக இருக்கிறது”
ஶ்ரீ சந்திரசேகர கனபாடிகளின் மற்றொரு ஆத்ம ஶகாவான ஶ்ரீ பில்வநாத கனபாடிகள் தனது இரங்கல் செய்தியில் கூறியள்ளதாவது:
நானும் கண்ணன் என்கிற சந்திரசேகர கனபாடிகள் ஆகிய இருவரும் காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள கீழம்பி என்கிற கிராமத்தில் 1967 முதல் அக்ஷராப்யாஸம் முதல் ஶகாவாக பழகி வந்தோம். காஞ்சிபுரம் ஆஸ்தான வித்வான் ஶ்ரீ ராமஸ்வாமி சர்மா அவர்களும் அக்ஷராப்யாஸம் ஆரம்பித்து அபர்கணம், க்ரமாந்தம், கனாந்தம், ஸலக்க்ஷணம் என்று முறையாக 1974 முதல் அத்யயனம் படித்துவிட்டு பிறகு கும்பகோணத்தில் ஶ்ரௌத பாடசாலையில் ஸோமாந்தம் வழியே நாலு வருடகாலம் அத்யயனம் செய்து அதற்குப் பிறகு 1977 முதல் 1982 வரை மெட்ராஸ் ஸம்ஸ்க்ருத காலேஜில் ‘மீமாம்ஸாசூடாமணி’ என்ற பாடம் பயின்று நான் கொஞ்சம் லௌகீகமாக வந்து விட்டேன். அவர் அதற்கு மேலும் மந்த்ராலயம் சென்று தர்க்க ஶாஸ்த்ரம் வாசிச்சு, வேத பாஷ்யம், தர்க்க ஶாஸ்த்ரம், மீமாம்ஸா ஶாஸ்த்ரம் பலவிதமா க்ரந்தம் நன்கு ஆலோசிச்சு, நன்கு வாசிச்சு, அனிதர அஸாதாரணமான பண்டிதர் என்ற யோக்யதையை சம்பாதிச்சு பிறகு டிடிடி (TTD) தேவஸ்தானத்தில் வேதபாராயணராக இருந்து ரிடையர்ட் ஆகி கடைசி காலம் வரை திருப்பதியில் வாழ்ந்து வந்தார். அப்பேற்பட்ட மஹான் ஶ்ரீ மஹாபெரியவாளுக்கு பாத்திரமாகி நாங்க ரெண்டு பேரும் கன, ஸலக்க்ஷண, க்ராந்தம் பரீக்ஷை எல்லா இடத்திலும் கொடுத்து காஞ்சிபுரம், ஸ்ருங்கேரி, மன்னார்குடி, ஆண்டவன் ஸ்வாமிகள், வேத தர்ம ஶாஸ்த்ர பரிபாலன ஸபை, கும்பகோணம் முதலான இடத்தில் பரீக்ஷை கொடுத்து, நன்கு பாஸ் பண்ணி, நன்கு அனிதர ஸாதாரண யோக்யதையை ஸம்பாதிச்சுண்டோம். எங்கள் வாத்தியார் ராமஸ்வாமி சர்மா அவர்களுக்கு அந்த குடும்பமே ஒரு குடும்பமாக இருந்தது. கண்ணன் என்கிற சந்திரசேகர கனபாடிகளுடைய அண்ணா ஸத்யவாகிஸ்வர கனபாடிகள், கூப்பிடுகிற பெயர் மூர்த்தி, அவர் தம்பி உமாமஹேஸ்வர சாஸ்திரிகள் பாம்பேயில் பிரசித்தமாக இருக்கார். அவா மூணு பேரையுமே வேத அத்யயனத்துக்கே அவா அப்பா பெரியவா சொல்லி, பெரியவா வார்த்தையை மீறாம மூணு பேருமே வேத அத்யயனத்துக்கு அனுசரிச்சா, மூணு பேருமே சிகரமாக இருந்துண்டு இருந்தா. அதிலே துரதிருஷ்ட வஸமாக சந்திரசேகர கனபாடிகள் இப்படி காலமானது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறேன்.
Source Courtesy:
Sri Sethu.Ramachandran (Retd I.A.S)
Thanjavur Parampara.




Comments