Darshan at Tirupati Camp
- Thanjavur Paramapara
- 6 minutes ago
- 1 min read
06/05/2025
பாதுகா மண்டப முகாம்
திருப்பதி

ஒரு கிராமத்தில் இருந்து குருக்கள் தன் மகன் மற்றும் பேரனுடன் வந்திருந்து இரண்டு ஆச்சாரியாள் தரிசனம் செய்தார்கள்.
ஆச்சாரியாள் குருக்கள் பேரனை மந்திரங்கள் சொல்லும் படி ஆக்ஞை செய்ய, சிறுவன் இரு ஆச்சாரியாள்கள் முன் பாராயணம் செய்தான். அச்சிறுவனுக்கு பிரசாதம் வழங்கி ஆசிர்வாதம் செய்தார் ஆச்சாரியாள். கோவிலில் நடக்கும் பூஜைகள் பற்றியும் ,பிரசாதங்கள் பற்றியும் வினவினார். குருக்கள் பிரசாதங்கள் மற்றும் பூஜைகள் மக்கள் உதவியுடன் நன்றாக நடக்கிறது என்றார் உடனே ஆச்சாரியாள் குருக்களைப் பார்த்து, "காயத்திரி ஜபம் பண்ணிண்டே இருங்கோ. நீங்கள் பிரசாதம் தரும் போது, அதன் பலன், பெருமை கூடும்" என்று கூறிய போது, நான் சிறு வயதில் பிரசாதம் பெறவே கோவிலுக்கு சென்றது நினைவிற்கு வந்தது.
பாராயணம், ஜபம் செய்யும் போது, நமது மனது ஒருமித்த எண்ணங்களை கொண்டு , ஆன்மீக சிந்தனைகளை ஊக்குவிக்கிறது. நமது மனம் சுத்தமாகிறது. புனிதம் அடைகிறது. இதனால் தான் என்னவோ, மாணிக்கவாசகர் , "நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்கிறார்.
Courtesy : Sri. Srinivasan
Comments